தொகுப்பு: கிண்ணியா கியாஸ் ஷாபி
இழந்து போன ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்காக மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் முயற்ச்சிகள் மேற்கெள்ளப்பட்ட போது சா்வதேச மனித உரிமை அமைப்புக்களால் 58 விடயங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என அப்போது கேட்கப்பட்டது. இவை அனைத்துமே யுத்தம் தொடர்பான விடயங்கள்கள் மட்டுமே. ஆனால் இன்று முஸ்லிம் தனியார் சட்டத்தோடு ஜி.எஸ்.பி. வாரிச்சலுகையை முடிச்சும்போடுவது என்பது ஒரு வேடிக்கையான விடயம் என தேசிய ஷூரா சபையின் தலைவர் தாரிக் மஹ்மூத் தெரிவித்தார்.
கிண்ணியா மஜ்லிஸ் அஷ்ஷூரா அமைப்பின் அனுசரணையுடன் கிண்ணியா மத்திய கல்லூி மண்டபத்தில் நேற்று முன்தினம்(30) நடைபெற்ற தேசிய ஷூரா சபைக்கும் திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இது எதைக் காட்டுகிறது என்றால் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பொருளாதார சமய சமூக கலாசார விடயங்களில் கை வைக்கின்ற நடவடிக்கை பல வருடங்களாக திட்டமிடப்பட்டு செயற்பட்டு வருகின்றமை புலனாகிறது. முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் செய்யபடவேண்டுமானால் முஸ்லிம் அமைப்புக்களின் ஒத்துழைப்போடு செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே நடைபெறுகின்றன.
அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட அல் அக்ஸா மஸ்ஜித் தொடர்பான பிரேரணையில் அரசாங்கம் வாக்களிப்பில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்காமையையிட்டு தேசிய ஷூரா சபை தனது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.
ஈராக்கில் அணு ஆயுதம் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி அந்த நாட்டு மக்களுக்கு கூறினார். அதை அந்த மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதனால் யுத்தத்துக்கு பில்லியன் கணக்கில் ஏற்பட்ட செலவையும். படைகளின் உயிரிழப்பையும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் முஸ்லிம் தலைமைத்துவம் இவ்வாறு இருக்க முடியாது. பொய் கூறி முஸ்லிம் சமூகத்தை தவறான வழியில் நடாத்த முடியாது. எனவே மேற்கத்தைய ஜனநாயகம் வேறு. இஸ்லாமிய ஜனநாகம் வேறு.
எனவே தலைமைத்துவங்கள் சத்திய வழியில் இருக்க வேண்டும். அப்போதுான் முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்த முடியும். ஒன்றுபட்டால் மாத்திரமே சாதிக்க முடியும். ஒற்றுமை எனும் கயிறு பற்றி அல்குர்ஆன் கூறுகின்றது. பல நூல்களால் திரிக்கப்ட்ட கயிற்றால் ஆனையையும் வீழ்த்தலாம். அவ்வளவு பலமானது. இதற்காகத்தான் மிகவும் சவால் மிகுந்த ஒரு கட்டத்தில் தேசிய ஷூரா சபை உருவானது. இன்னும் சால்கள் தொடர்து கொண்டிருக்கின்றது. அவற்றையும் வெற்றி கொள்ள இறைவன் அருள்புரிய வேண்டும் என்று தெரிவித்தார்.
வரவேற்புரையை நிகழ்த்திய கிண்ணியா ஷூரா சபையின் தலைவர் அஷ்ஷெய்க். எம்.ஏ.ஹிதாயத்துள்ளா (நளீமி) கருத்துத் தெரிவிக்கையில்,
30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்ட்ட முஸ்லிம்களுக்கும் தீா்வு வேண்டும். நிலைமாறு கால நீதி என்ற பொறி முறை தற்போது நாட்டில் பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த மாவட்டம் குறித்து தேசிய ரீதியில் விஷேட கவனம் செலுத்தப்டுவது காலத்தின தேவையாகும் ஏனெனில் அம்பாறைக்கு அடுத்தது இந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.
எனவே இவர்கள் எதிர்கொக்குகின்ற பிரச்சினைள் வித்தியாசமானவை.தற்போது தேசிய ஷூரா சபை கிழக்கில் ஏற்படுத்தி வரும் சந்திப்புக்கள் இதனை உணர்த்தியிருக்கும் என்று நினைக்கிறேன். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய ஷூரா சபை சந்திக்கின்ற பொது இந்த மாவட்டம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.
இதன்போது கிண்ணியா ஷூரா சபையின் செயலாளா் எம்.ஐ.நியாஸ் கருத்துத் தெரிவிக்கையில்,
திருமலை மாவட்டத்தில் 42 வீதமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் இங்கு குடிப்பரமபலும் நில அமைப்பும் ஏனைய பிரதேசங்களைப் போல் அல்லாது வித்தியாசமானவை. தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசத்தில் முஸ்லிம்கள் சிறுபான்னையினராக வாழ்கின்றனர். சிங்கள மக்களை பெரும்பான்மையினராக கொண்ட பிரதேசங்களில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். இதே போன்று முஸ்லிம்களை பெரும்பான்னையினராகக் கொண்ட பிரதேசங்களில் தமிழா்களும் சிங்களவா்களும் சிறுபான்மையினராக வாழ்கின்றனர்.
இங்கு தற்போது முக்கியமான பிரச்சினைகளாக காணிப் பிரச்சினை உள்ளது. புல்மோட்டை அரிசி மலை காணி தொடர்பாக ஆவணங்கள் தயாரிக்கப்ட்டிருக்கின்றன. கருமலை ஊற்று பிரதேச காணிகளைப் பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். தொல்பொருள் என்ற போர்வையிலும் அபிவிருத்தி என்ற போர்வையிலும் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியன் இராணுவ காலத்திலும் புலிகள் காலத்திலும் இந்த மாவட்ட முஸ்லிம்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறா்கள் என்றார்.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய ஷூரா சபையின் செயற்குழு உறுப்பினா் முஹம்மது அஜ்வத்தின் கருத்துத் தெரிவிக்கையில்,
இங்கு ஒக்டோபா் 11 திகதி பெண் பிள்ளைகள் தினம் கொண்டாடப்பட்டது. அதன்பிறகு முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யுமாறு பிரதமருக்கு இரண்டு அமைப்புக்கள் பிரதமருக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பியிருந்தன.ஒக்டோபா் 16 ஆம் திகதி பிரதமா் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் யெ்திருந்தார். அப்பொதும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கினங்க அரசாங்கம் இந்த விடயத்தில் திருத்தங்களைச் செய்வதிலும் தீவிரம் காட்டுகின்றது.
இவ்வாறு சா்வதேச அழுத்தங்கள் வரும் பொது ஓரிரு தினங்களில் தீா்மானங்கள் எடுக்க முடியும் என்றால், வருட கணக்கில் மீள் குடியேற்றபடாத முஸ்லிம்கள் தொடா்பாக ஏன் தீவிரமாகக் கவனம் செலுத்த முடியாது என்றார்.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய ஷூரா சபையின் செயற்குழு உறுப்பினா் றஷீத் எம்.இம்தியாஸ் கருத்துத் தெரிவிக்கையில்;
தேசிய ஷூரா சபை என்பது 18 இயங்கங்கள் ஒன்று சோ்ந்து உருவாக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் தேசிய மட்டத்தில் முஸ்லிம்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு முக்கியத்தும் கொடுத்து செயல்பட்டு வந்தது. இப்போது மாவட்ட ரீதியான பிரச்சினைகளை திரட்டி வருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தோடு தேசிய ஷூரா சபையின் தொடா்பு முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
தேசிய ஷூரா சபை மாவட்ட கிளைகைளைக் கொண்டிருப்பதில்லை. பிராந்திய ரீதியாக அமைப்புக்கள் எங்களுடன் சோ்ந்து பணியாற்ற வேண்டும் என்றால் அதற்கு அனுமதி பெற்றுத்தரப்படும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினா்களை மாதம் இருமுறை தேசிய ஷூரா சபையோடு சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தியமை முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என்று தெரிவித்தார்.
மூதூா் வி.எம்.நகீப் (ஓய்வுபெற்ற அதிபர்)
மீள்குடியேற்றம் என்ற போர்வையில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. சம்புா் பிரதேசத்தில் முஸ்லிம்களும் குடியிருந்தார்கள். அதற்கு ஆதாரம் இருக்கின்றன. அங்கு பள்ளிசாசல் இருந்திருக்கிறது. ஏன் அங்கு முஸ்லிம்களை குடியேற்ற தயக்கம் காட்டுகிறார்கள்.
மீண்டும் சம்புரில் 300 வீடுகள் கட்டப்படுகின்ற. அதிலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்ட்டிருக்கிறார்கள்.
அடுத்து நவலடிக் கிராமம் முஸ்லிம்கள் வாழ்ந்த இடம். அங்கு பள்ளிவாசல் இருந்திருக்கின்றது. இங்கும் முஸ்லிம்களைக் குடியேற்றி அவா்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
மேலும் தோப்புர் லங்கா பட்டணத்திலும் முஸ்லிம் கிரமம் இருந்தது. யுத்ததின் பின்னா் இப்பொது அடையானளம் காணமுடியாது இருக்கிறது. இங்கு 3 பள்ளிவாசல்கள் இருந்தன. இங்கும் முஸ்லிம்கள் குடியேற்றப்படவேண்டும்.
புல்மோட்டை அப்துல் சலாம்( ஓய்வு பெற்ற கிரம சேவகர்)
புல்மோட்டைக்கு தனியான பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் பாரபட்சமற்ற சேவை கிடைக்கும். இதற்கு தேவையான நிலப்பரப்பும் சனத் தொகையும் உள்ளன. அத்தோடு குச்சவெளிப்பிரதேசத்திற்கு தனியான கல்வி வலயம் வேண்டும்.
பிரதேச பிரதி அமைச்சர் ஒருவரின் அனுசரணையுடன் புல்மோட்டை பிரதேசத்தை சிங்கள மயமாக்கும் திட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது. அவர் ஒரு சிங்கள் பிரதேச மக்களைக் கொண்டு வந்து எங்களுக்குச் சொந்தமான காணியில் குடியமா்த்தி வருகின்றார். அவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
எமது முஸ்லிம் தலைமைகள் இவற்றை பார்த்துக் கொண்டிருக்கிறது. எனக்குச் சொந்தமான காணியிலும் ஒரு வறிய சிங்கள குடும்பம் ஒன்றை குடியமா்த்தியிருக்கிறார்கள். இது தொடர்பாக நான் செய்த முறைப்பாட்டை அடுத்து பிரதேச செயலம் அவா்களுக்கு அவசர நோட்டீஸ் அனுப்பியும் இன்னும் அவா்கள் எழும்பவில்லை. அத்தோடு ஆண்டாம் குளப் பகுதியில் விகாரை ஒன்றை நிா்மாணித்து 500 ஏக்கா் காணியை படையினர் பிடித்து அவா்கள் வேளாண்மை செய்து வருகின்றனர்.
கிண்ணியா எம்.ஏ. அப்துல் ஹாதி (கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவா்)
ஒரு இலட்சம் மக்களைக் கொண்ட கிண்ணியாவில் இன்னுமொரு பிரதேச செயலகம் உருவாக்கப்படல் வேண்டும். ஒரு பிரதேச செயலகத்தால் இவ்வளவு பெரிய சனத் தொகையை நிா்வகிக்க முடியாது. கிண்ணியாவின் எல்கை் கிராமங்களான சுண்டியாறு, வாழைமடு போன்ற பிரதேசங்கள் பெரும்பான்மை சமூகத்தால் படிப்படியாக ஆக்கிரமிக்கப்பமட்டு வருகின்றன. இதனால் கிண்ணியா மக்களின் விவசாயக் காணிகள் பறிபோகும் ஆபத்து எற்பட்டுள்ளது. கிண்ணியாவின் எல்லைக் கோடுகளை உடனடியாக சட்ட ரீதியாக ஆக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டிருப்பதை விடுத்து இதை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குச்சவெளி ஏ.எல்.றபாய்தீன் (ஆசிரியா்)
குச்சவெளி மக்களின் காணிப் பிரச்சினைகள் தீா்க்கப்பட வேண்டும். கடந்த 30 வருடங்களாக பயிரிடப்படாத நிலங்கள் எல்லாம் வனாந்தர காடுகளாக மறியிருக்கின்றன. அவற்றை உரியவா்கள் துப்பரவு செய்து பயிர் செய்வதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும். மக்கள் இங்கு செல்வதற்கு வனவள திணைக்களம் தடையாக இருக்கிறது.
இலந்தைக்குளம் பகுதியில் 350 ஏக்கா் காணிகள் தொல்பொருள் திணைக்களத்தால் சுவீகரிக்கப்ட்டிருலுக்கினறன. இவற்றை மீளப் பெற்றுத்தர வேண்டும்.
இந்தப் பிரதேசத்தில் யுத்த பாதிப்புக் குறித்த விடயங்கள் சாரியாக ஆவணப்படுத்தப்படவில்லை. எனது தந்தை ஒரு கிராம சேவகர், அவர் புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். நூற்றுக்கு மேற்பட்டவா்கள் இங்கு காணமல் போய் இருக்கிறார்கள். சிலருக்கு இன்னும் மரண அத்தாட்சிப்பத்திரம் கூட கிடைக்கவில்லை. சுற்றுலாத்துறை காரணமாக இன்னும் பலர் காணிகளை இழக்க வேண்டியுள்ளது. இவற்றுக்கும் தீா்வினைப் பெற்றுத்தர வேண்டும்.
கருமலைஊற்று அஹமட் கரீம் (கருமலைஊற்று பள்ளிவாசல் தலைவர்)
கருமலைஊற்றுப் பிரதேசம் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. எங்களுக்குச் சொந்தமான காணிகளில் படையினர் இன்னும் இருக்கின்றனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட எங்களுக்காகக் கட்டப்பட்ட விடுகளில் குடியிருப்பதற்கு அனுமதி தரப்படவிலலை. சுமார் 150 ஏக்கா் காணி இன்னமும் படையினர் கட்டுப்பாடடிலே இருக்கின்றது. இதனால் எங்களுடைய கடற்றொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தால் எங்களுக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை.
இந்தச் சந்திப்பின் போது முடிவுரை நிகழ்த்திய தேசிய ஷூரா சபையின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க். எஸ். எச்.எம்.பழீல் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த இடத்தில் குறிப்பிடப்பட்ட கருத்துக்களை பார்கின்ற போது அரசியல் பிரச்சினைகளோடு வேறு பிரச்சினைகளையும் மக்கள் எதிர்கொண்டுள்ளமை தெளிவாகின்றது. எமது சமூகத்தின் குடும்ப நிறுவனம் படு மோசமாக வீழ்ச்சி அடைந்து கொண்டு செல்கின்றது. முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவா்களுக்கும் இடையிலான சக வாழ்வு பாதிக்கப்ட்டு கொண்டு வருகின்றது. பொருளாதார ரீதியாக பின்னடைந்த நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம். ஆரோக்கிய சுகாதார வாழ்வில் ஏனைய அனாத்தோடு ஒப்பிடும் போது ஒரு கீழ் தரமட்டத்தில் இருக்கிறோம். இளைஞா்கள் திசைமாறிச் செ்கிறார்கள் இந்த பிரச்சினைகளில் ஒரு பிரச்சினைதான் அரசியல் ரீதியான பிரச்சினையாகும்.
இந்தப் பிரச்சினைகளை அனுகுவதற்கு முழுச் சமூகமும் ஒட்டு மொத்த பார்வையச் செலுத்த வேண்டும். ஒவ்வொரு தனி நபருக்கும் இதில் பங்கிருக்கின்றது. ஊா்வாதம், இயக்க ரீதியான பிளவுகள் அற்ப விடயங்களுக்கு சண்டை செய்கின்ற தன்மை இவற்றில் இருந்து நமது சமூகம் விடுதலை பெற வேண்டும்.
நாம் ஆதாரங்களோடு பேச வேண்டும். அறிவு பூர்வமாக பேச வேண்டும். உணா்ச்சிவசப்பட்டு பேசக்கூடாது. பொருத்தமான வழிமுறை ஊடாக அவற்றைப் பேச வேண்டும். தகவலைத் தொியப்படுத்துவதற்கு பொருத்தமான ஊடகத்தை தெரிவு செய்ய வேண்டும்.
முஸ்லிம் சமூகம் அறிவுள்ள சமூகம். ஆதாரத்தோடு பேசுகின்ற சமூகம். ஒரு முன்மாதிரியான சமூகம். அந்நிய சமூகத்தொடு சகவாழ்வோடு வாழ விருப்புகின்ற சமூகம் என்று அந்நிய சமூகம் எம்மை இனங்காணப்படாபதவரை நாம் மேலும் மேலும் அடிமைச் சமூகமாகவே இருப்போம் எனத் தெரிவித்தார்.