தேசிய ஷூரா சபை தனது அங்கத்துவ அமைப்புக்களின் தலைமைத்துவங்களுடனான தனித்தனியான சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், இலங்கை லங்கா ஜமா’அதே இஸ்லாமி அமைப்புடனான சந்திப்பு கடந்த 10/08/2016 அன்று அதன் தலைமையகமான கொழும்பு 10 இல் அமைந்துள்ள ‘தாருல் ஈமான்’ இல் நடைபெற்றது.
இச்சந்திப்பில் தேசிய ஷூரா சபையின் உப தலைவர்களான சகோ. டீ.கே. ஆசூர், சகோ. ரீஸா யஹியா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களான சகோ. ரஷீத் எம். இம்தியாஸ், மௌலவி. தஸ்லீம் ஆகியோரும் இலங்கை லங்கா ஜமாஅதே இஸ்லாமி சார்பாக அதன் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், பொதுச்செயலாளர் சகோ.பாரிஸ், மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களான ஆசிரியர் எம்.எச்.எம் ஹசன், வை.ஐ.எம். ஹனீஸ், நியாஸ் அபூபக்கர் ஆகிய சகோதரர்கள் கலந்துகொண்டனர்.
அங்கத்துவ அமைப்புக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தல், தேசிய ஷூரா சபையின் கடந்த கால, நிகழ கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் பற்றிய விடயங்களை பகிர்ந்து கொள்ளல், அந்த செயற்பாடுகளுடன் அங்கத்துவ அமைப்புக்களை சேர்த்துக்கொண்டு செயற்படுதல் போன்ற விடயங்களை நோக்கமாகக்கொண்டு இச்சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதன்போது தேசிய ஷூரா சபையின் செயற்பாடுகளை மேலும் சிறப்பாகவும், தக்கம்மிக்கதாவும் நடைமுறைப்படுத்துவதற்கான பல முக்கிய ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. அத்துடன் தேசிய ஷூரா சபையின் எதிர்கால திட்டங்களுக்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கும் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பு தங்களது விருப்பத்தை தெரிவித்தது.
மேலும், தேசிய ஷூரா சபையின் திட்டமிட்டுள்ள தேசிய ஊடக மூலோபாயம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் இலங்கை லங்கா ஜமாஅதே இஸ்லாமியிற்கு தலைமை தாங்குமாறும் தேசிய ஷூரா சபையின் சார்பாக வேண்டிக்கொள்ளப்பட்டது.