தொழில் வழிகாட்டல்கள் மற்றும் வாழ்வாதார செயற்திட்டம்

14373643180831693084

கொலன்னாவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார வசதிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கும் முகமாக வெல்லம்பிட்டி லன்சியாவத்தையில் அமைந்துள்ள காரியாலயத்தில் 24.09.2016 அன்று தேசிய ஷூரா சபையின் உபகுழுவான சமுக பொருளாதார உபகுழுவின் ஒருங்கிணைப்பில் இயங்கி வரும் கொலன்னாவை புனர்வாழ்வுத் திட்டத்தின் (Kolonnawa Rehabilitation Project)  தொழில் வழிகாட்டல்கள் மற்றும் வாழ்வாதார வசதிகளை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் சந்திப்பு இடம் பெற்றது.

இதன் போது வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட விதவை பெண்களுக்கு குறிப்பாக சுயதொழில்களை மேற்கொள்ள வழிகாட்டல்கள் வழங்கும் நோக்கில் அறிமுக நிகழ்வொன்று நடைபெற்றது.

அதில் பெண்கள் வீட்டில் இருந்தே உற்பத்திகளை ,மேற்கொள்ளக் கூடிய சிறுகுழந்தைகளின் ஆடை , இஸ்லாமிய திருமண ஆடைகள் , இனிப்புப் பண்டங்கள், உலர் உணவு பொருட்கள் போன்ற பல சுயதொழில்களுக்கான மாதிரிகள் அங்கு அனுபவமுள்ள சகோதரிகளால் காட்சிப்படுத்தப்பட்டு ; இவாறான சுய தொழில்களில் அனுபவமுள்ள சகோதரிகளால் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுதொழில்களில் ஈடுபடக்கூடிய பெண்களுக்கு பயிற்றுவிப்புகளை வழங்கவும் , உதவிகளை வழங்கவும் முதற்கட்ட நிகழ்வும் இடம் பெற்றது. 

இந்நிகழ்வில் விஷேட அதிதியாக பிரதி சுகதார அமைச்சர்ல் அல்-ஹாஜ்  பைசல் காசிம், ஆடை தொழிற்சாலை உரிமையாளர்களான அல்-ஹாஜ் பாஹிம் , அல்-ஹாஜ் நிஹார், கலாநிதி எம். ரூமி,  அல்-ஹாஜ் . நசீர் (ஹாரா) , அல்-ஹாஜ் . ஹனீபா, சகோ. மாஹில் தூள் (சிரேஷ்ட போலீஸ் அதிகாரி) , சகோ. உஸாமா ஹுசைன், சகோ.ஸாபிர் ஹாஷிம் ( உளவள ஆலோசகர்) உட்பட தேசிய ஷூரா சபை நிறைவேற்று குழு அங்கத்தவர்கள், செயலகக்குழு மற்றும் கொலன்னாவை புனர்வாழ்வுத் திட்ட அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர். 

மேலும் ஆடை தொழிற்சாலை உரிமையாளர்கள் அவர்களது ஆடை உற்பத்திகளை சிறப்பாக மேற்கொள்ளவும், சந்தைப்படுத்தவும் உதவும் ஆலோசனைகளை வழங்கினர். 

இந்த செயற்திட்டத்தை வெற்றிகரமான முறையில் செயற்படுத்தவும் , நெறிப்படுத்தவும் வருகை தந்த அனுபவமுள்ளவர்கள் , வளவாளர்கள் , ஆலோசகர்கள் தொழிற்சாலை உரிமையாளர்கள் பல கருத்துகளை தெரிவித்து ஆர்வமூட்டி , ஊக்கம் அளித்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top