கொலன்னாவை புனர்வாழ்வு செயற்திட்டம்

கொலன்னாவை பிரதேச செயலகத்திற்குட்பட்ட முஸ்லிம்களின் சமூகபொருளாதார நிலையை முன்னேற்றுவதை இலக்காகக் கொண்ட செயற்திட்டம் ஒன்றை தேசிய ஷூரா சபையின் சமூகபொருளாதார உபகுழு முன்னெடுத்து, ஒருங்கிணைத்து வருகிறது. அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வுகளைக் காண்பதே இதன் நோக்கமாகும். எனவே, அப்பகுதியில்   நிவாரணப்பணிகளில்  ஈடுபட்ட அங்கத்துவ அமைப்புகள், ஏனைய அமைப்புகள், மஸ்ஜித் நிருவாகங்கள், தனிமனிதர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்டுள்ள இச்செயற்திட்டம், அப்பகுதி மக்களின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், ஆன்மீக மற்றும் பண்பாட்டு விருத்தியை இலக்காக் கொண்டு செயற்படும்.

இதற்கொகாக ஏற்படுத்தப்பட்ட கொலன்னாவை புனர்வாழ்வு செயற்குழுவின் சந்திப்பு 17.08.2016 புதன்கிழமை குப்பியாவத்தை ஹயாதுல் ஹுதா மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புகளும் , சமூக நலன்விரும்பிகளும் கலந்துகொண்டனர். இதன் போது புனர்வாழ்வு செயற்திட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளராக தேசிய ஷூரா சபையின் செயலக குழு உறுப்பினர் சகோ. அன்வர் சதாத்  அவர்களும் செயலாளராக சகோ.அல்தாப் பாரூக் (நளீமி) அவர்களும் நியமிக்கப்பட்டார்கள்.

மேலும் கருத்து தெரிவிக்கையில் சகோ. ஹகீம் பள்ளி வாயில்கள் பரிபாலன சபைகள் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் முனைப்போடு வழிகாட்டல்கள் , ஊக்குவிப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்க படவேண்டும் என முன்மொழிந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நாம் என்னதான் செயட்திட்டங்கள் நடைமுறைப்படுத்தினாலும் ‘ ஒரு சமுகம் தன்னை மாற்றாத வரையில் அல்லாஹ் அந்த சமூகத்தை மாற்ற மாட்டான் ‘ என்ற அல்-குர்ஆனின் கருத்துக்கு ஏற்ப அந்த பிரதேச மக்கள் அவர்களாகவே அவர்கைளை மாற்றிக்கொள்வதன் மூலமே மேற்கொள்ளபடுகின்ற செயாற்திட்டங்களின் மூலம் பயனளிக்கக் கூடிய விளைவுகளை பெற முடியும் என பலராலும்  கலந்துரையாடப்பட்டது.

மேலும் அப்பிரதேச மக்களின் வாழ்வாதார நிகழ்ச்சி திட்டங்களை அவசரமாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் இல்லாவிடின் அம்மக்கள் பாரிய வட்டி கடன்களுக்கு ஆளாகுவார்கள் எனவும் சகோ.ஹகீம் தெரிவித்தார்.

மேலும் பெண்கள் தரப்பு பிரச்சினைகள்கள் பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதில் பெண்ககளின் பிரச்சினைகள் அதிகமாக இருப்பதாகவும் , பெண் வளவாளர்கள் முக்கிய தேவை எனவும் தெரிவித்தார்.
அதற்கான ஒரு கலந்துரையாடல் ஒன்றினை தேசிய ஷூரா சபை , உளவளத்துணை ஆலோசகர் மன்றம் , ஜமா அதுஸ் ஸலாமா மற்றும் ஏனைய பெண்கள் அமைப்புகளுடனும் ஒரு கலந்துரையாடல் மேற்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டது.

இறுதியாக டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் பற்றி டாக்டர். மரீனா அவர்கள் விளக்கப்படுத்தினார்.   மேலும் இன் நிகழ்ச்சிகளோடு எவ்வாறு ஒருங்கிணைப்பது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

Scroll to Top