தேசிய சூரா சபையின் உப பிரிவுகளில் ஒன்றான சகவாழ்வு பிரிவினர் இனங்களுக்குகிடையே சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் முகமாக மத்திய மாகாணத்துக்கான தேசிய சூரா சபையின் சகவாழ்வு துணை குழுவினை அங்குரார்ப்பணம் செய்யும் முகமாக 07.09.2016 திகதி அன்று கண்டி YMMA வை.எம்.எம்.ஏ கேட்போர் கூடத்தில், அஷ்-செயக்- முனீர் முளவ்பார் (நளீமி) தலைமையில் இடம் பெற்றது.
மேலும் சகோ.நியாஸ் , சகோ.இஹ்திசாம் , மற்றும் லாபிர் மதனி (நளீமி) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மத்திய மாகாணத்துக்கான சகவாழ்வு குழு தேர்வு செய்யப்பட்டதோடு அதன் எதிர் கால நடவடிக்கைகள் சம்பந்த்தமாகவும் ஆராயப்பட்டது.மேலும் எதிர் காலத்தில் அதன் அங்கத்தவர் தொகையினை மேலும் அதிகரித்துக் கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.