அனார்த்த முகாமைத்துவ குழுவின் சந்திப்பு

தேசிய சூரா சபையின் உப குழுப்பிரிவான அனார்த்த முகாமைத்துவ குழுவின் அமர்வு 28.08.2016 அன்று கொழும்பு ஜமா அத்தே இஸ்லாமி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் தேசிய சூரா சபை சார்பாக சகோ. ஹில்ரூ சித்தீக் , சகோ. அன்வர் சதாத் மற்றும் அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் சார்பாக மௌலவி. யூனுஸ் தப்ரீஸ், சகோ. என். நஜீப் ஜமால் , ஜமா அத்தே இஸ்லாமி சார்பாக சகோ. அஹ்மத் யாசிர் , இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் சார்பாக சகோ. ருடானி ஸாஹிர் போன்றோரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சகோ. ஹில்ரூ சித்தீக் அனார்த்தம் மற்றும் அனார்த்த முகாமை பற்றிய அறிமுகமொன்ரை வழங்கினார். அதில் அனர்த்தங்களின் போது எவ்வாறு நடந்து கொள்வது , அனர்த்தத்துக்கு முற்பட்ட காரிணி , அனார்த்தத்தின் பின்னரான நிலைமை , சேதங்கள் , பாதிக்கப்பட்ட மக்களின் மனோ நிலை அறிகுறிகள் போன்றவற்றையும், எவ்வாறு அறிந்துகொள்வது மற்றும் எவ்வாறு முகமை செய்வது தொடர்பானவை ஆராயப்பட்ட்து.

மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான அனார்தங்களின் போது மக்களை எவ்வாறு வழிநடாத்துதல் , எவ்வாறு அவர்களை பாதுகாத்தல் ,
நிவாரண அமைப்புகள் மற்றும் தொண்டர் அமைப்புகள் , எவ்வாறு செயற்படல் போன்ற முழுமையான பயிற்சி நெறி ( கோஸ் ) ஒன்றை ஆரம்பித்தல் அதற்கான பயிற்சி பாடத்திட்டம் ஒன்றை தயாரித்தல் , அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தல் போன்ற விடயங்கள் முடிவாக எடுக்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top