NSC’s Message on Sri Lanka’s 77th Independence Day

Independence day

On the occasion of Sri Lanka’s 77th Independence Day, the National Shoora Council extends its warm greetings to all Sri Lankans. Our nation has faced throughout the centuries numerous challenges, foreign invasions and nearly five centuries of colonial rule. Yet, the spirit of resilience and patriotism has always guided us towards freedom and progress.

Despite achieving commendable socio-economic and human development milestones, Sri Lanka has been deeply affected by corruption, misgovernance, and systemic failures. The nation’s bankruptcy in 2022 was a painful reminder of the urgent need for reforms. Today, our greatest challenges remain the corrupted political and administrative system, lack of law and order, racism, Islamophobia, and the influence of deep-state factions that manipulate national affairs.

Sri Lankan Muslims have lived peacefully, contributing to national security, development, and culture in their own ways for over a thousand years. As a deeply rooted and patriotic community, they have always stood for the nation’s political and economic independence. Their contributions to national unity and economic progress have been significant, yet their grievances are many! The tragic events of the Easter Sunday attacks and the subsequent victimization of innocent Muslims and organizations are examples of this injustice, orchestrated by forces seeking to divide and destabilize the country. Additionally, the forced cremation of Muslim COVID-19 victims against their religious beliefs and the forceful eviction of Muslims from the Northern Province stand as further acts of cruelty that have deepened the wounds of our community.

True independence can only be realized when justice prevails, and the rule of law is firmly upheld by closing loopholes exploited by corrupt elements. The new government, which has received a mandate from all communities, is expected to foster peace by eliminating these disruptive forces and leading Sri Lanka towards sustainable prosperity through initiatives such as Clean Sri Lanka and the Digital Economy.

The National Shoora Council remains committed to supporting the government in achieving these noble goals, ensuring a just, inclusive, and thriving Sri Lanka for all.

National Shoora Council

4th February 2025

 

ජාතික ෂූරා සභාවේ නිදහස් දින පණිවුඩය

ජාතික ෂූරා සභාව  ශ්‍රීලංකා වාසී  සියලූ දෙනාටම ශ්‍රීලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ 77වෙනි නිදහස් සමරු දිනය නිමිත්තෙන් උණුසුම් සුබ පැතුම් පිරිනමයි.

ශත වර්ෂ පහකට ආසන්න කාලයක් තිස්සේ අධිරාජ්‍යවාදීන්ගේ පාලනයට නතුව සිටි ජාතියක් වශයෙන් අපගේ මනුෂ්‍යත්වයේ මහිමයෙන් සියලූ ජාතීන්ගේ එකමුතුවෙන්  හා නොසැලෙන උත්සාහයෙන් නිදහස අත්පත් කරගත්තෙමු.

ආර්ථික, සමාජයීය හා මානව සංවර්ධන  ඉලක්ක රාශියක් ළඟා කරගැනීමට මුල දී  හැකි වූවත් පත් වූ රජයන් කළ දූෂණය, වංචා සහ අශීලාචාර ආණ්ඩුකරන නිසා අප රට මහත් පීඩාවට හා බලවත් අපහසුතාවයට පත් විය. වසර 2022 දී රට බංකලොත් භාවයට  ඇද වැටී ණය  ලබාගැනීමට නුසුදුසු රටක් බවට පත් වීමත් සමඟ  පවතින ක්‍රමයේ වෙනසක් පිළිබඳ මෙරටේ පුරවැසියෝ දැඩි ලෙස  සිතන්න  පටන්  ගත්හ.

අප ලැබූ  නිදහස සම්පූර්ණ  වන්නට නම්,  සියලූ දෙනා පිළිගත හැකි ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවක්, අදූෂිත පාලනයක්, ජාතිවාදයෙන් තොර සමාජ  පරිසරයක් ස්ථාපිත කළ යුතු ය. මෙම  වෙනස ඇති කිරීම සඳහා විශාල  ජන වරමකින් රජයක් බලයට පත් ව තිබීම සතුටට  කාරණයකි.

ශ්‍රීලංකාවේ මුස්ලිම් ජනතාව  වසර  දහසකට  වැඩි  කාලයක්  සාමයෙන්  ජීවත්වෙමින් ජාතික ආරක්ෂාව, ජාතික  සංවර්ධනය හා සංස්කෘතියේ දියුණුවට සුවිශේෂ  ආකාරයෙන්  දායක වෙමින් සිටිති.

මෑත  කාලයේ  ඔවුන්ට  ඉතිහාසයේ  දරුණුතම අසාධාරණයට මුහුණ  දෙන්නට සිදු විය. පාස්කු  ඉරිදා ප්‍රහාරය  සමඟ  නිර්දෝෂී පුද්ගලයන්ට හා සංවිධානවලට එරෙහිව  ගෙනගිය මර්දනකාරී  ක්‍රයාවලිය, කොරෝනා වසංගතයෙන් මරණයට පත් වූ මුස්ලිම්වරුන්ගේ මෘතදේහ බලහත්කාරයෙන්  ආදාහනය කිරීම වගේ ම,  උතුරෙන් පලවා හැරූ ජනතාවට තවමත් සාධාරණය ඉටු  නොවීම මුස්ලිම්  ජනතාවට දැඩි  වේදනාත්මක  සිදුවීම් ය.

වර්තමාන රජය  ආරම්භ  කර  ඇති පිවිතුරු ශ්‍රීලංකා වැඩසටහන වන දූෂණ පිටුදැකීමේ හා ආර්ථිකය ගොඩ නැගීමේ කටයුතු  ජනතාව  තුළ විශ්වාසයක් ඇති කිරීමට සමත් වී ඇත.

ජාතික ෂූරා සභාව මෙම උතුම්  අරමුණු ඉටු කර ගැනීම සඳහා රජය සමඟ එක් ව කටයුතු කිරීමට කැප වී සිටී.  එකමුතු ජාතියක්,  පොහොසත් රටක්,  සාධාරණ සමාජයක්, සතුටින්  ජීවත් වන ජනතාවක්  සහිත රටක් බිහි කිරීමට හැකි සෑම අයුරින් ම උපකාරී වීමට අපි  කැප වී සිටින්නෙමු.

ජාතික ෂුරා සභාව

04.02.2025

 

ஷுரா சபையின் சுதந்திர தினச் செய்தி

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய ஷூரா சபை அனைத்து இலங்கையர்களுக்கும் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. எமது தேசம் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற சவால்களையும் வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளையும், ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகால காலனித்துவ ஆதிக்கத்தையும் எதிர்கொண்டுள்ளது. ஆயினும், தன்னம்பிக்கையும் தேசபக்தியும் எம்மை சுதந்திரத்தையும் முன்னேற்றத்தையும் நோக்கி வழிகாட்டியுள்ளன.

சமூக-பொருளாதார, மனிதவள அபிவிருத்தி துறைகளில் பாராட்டத்தக்க மைல் கற்களை இலங்கை எட்டியுள்ள போதிலும், ஊழல், தவறான நிருவாகம், முறைகேடுகள் என்பவற்றால் அது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் நாடு வங்குரோத்து நிலையை அடைந்தமையானது அதன் மறுசீரமைப்பிற்கான உடனடியான அவசியத்தை உணர்த்தும் வலிமிகுந்த நினைவூட்டலாகும்.

அரசியல் நிர்வாகத் துறைகளில் ஊழல், சட்டம் ஒழுங்கு இன்மை, இனவாதம், இஸ்லாத்தை பற்றி திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட பீதி (Islamophobia) மற்றும் தேசிய விவகாரங்களை குழப்பும் வகையில் செயல்படும், வெளியில் தென்படாத, உத்தியோகப்பட்டற்ற ஆழ் அரசாங்கத்தின் (Deep State) செயற்பாடுகள் ஆகியவை இன்று நாடு எதிர்நோக்கும் முக்கிய சவால்களாக உள்ளன.

இலங்கை முஸ்லிம்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் கலாசார வளர்ச்சியில் தமக்கேயுரிய பாணியில் பங்களிப்புச் செய்து அமைதியுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆழமாக வேரூன்றிய தேசபக்திமிக்க சமூகமாக திகழும் அவர்கள் இந்த நாட்டின் அரசியல், பொருளாதார சுதந்திரத்திற்கு எப்போதும் துணை நின்றிருக்கிறார்கள்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர்கள் செய்திருப்பினும் அவர்களுக்கு பல மனக் குறைகள் உள்ளன. ஈஸ்டர் ஞாயிறு கோரத் தாக்குதலின் சோக நிகழ்வுகள், அவற்றைத் தொடர்ந்து அப்பாவி முஸ்லிம்களும் முஸ்லிம் அமைப்புக்களும் பழிவாங்கப்பட்டமை போன்றன அப்படியான அநீதிகளுக்கு சில உதாரணங்களாகும்.

நாட்டை பிளவுபடுத்தி, அதன் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்த முனைந்த சக்திகளால் இவை திட்டமிடப்பட்டன. மேலும், கொவிட்-19 பெருந்தொற்றின் போது இறந்த முஸ்லிம்களது ஜனாஸாக்கள் அவர்களது நம்பிக்கைக்கு விரோதமாக தகனம் செய்யப்பட்டமையும், வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிகழ்வுகளும் எமது சமூகத்தின் காயங்களை மேலும் ஆழப்படுத்திய கொடுமையான செயல்களாகும்.

நீதி நிலைநாட்டப்பட்டு விஷமிகளால் உருவாக்கப்பட்ட ஓட்டைகளை அடைப்பதன் மூலம் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தினால் மாத்திரமே உண்மையான சுதந்திரக் காற்றை மக்களால் சுவாசிக்க முடியும்.

அனைத்து சமூகங்களின் ஆணையைப் பெற்று ஆட்சிபீடமேறியுள்ள புதிய அரசாங்கம், இந்த நாசகார சக்திகளை இல்லாதொழிப்பதன் மூலம் அமைதியை வளர்த்து, தூய இலங்கை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற திட்டங்கள் மூலம் இலங்கையை நிலையான சுபீட்சத்தை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய ஷூரா சபையானது, இந்த புனிதமான இலக்குகளை அடைவதற்காகவும், அனைவருக்கும் நீதியான, சகலரையும் அரவணைத்த மற்றும் செழிப்பான இலங்கையை உருவாக்குவதற்காகவும் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளதுடன், அதன் பங்கினை வகிக்கத் தயாராக உள்ளது.

தேசிய ஷூரா சபை

04/02/2025

Scroll to Top