இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கத்துடனான சந்திப்பு

தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தல், தேசிய ஷூரா சபையின் கடந்த கால, நிகழ் கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் பற்றிய விடயங்களை கலந்துரையாடல், அங்கத்துவ அமைப்புக்களை இணைத்துகொண்ட கூட்டான செயற்திட்டங்களை மேற்கொள்ளல் போன்ற இலக்குகளை அடிப்படையாகக்கொண்டு தனது அங்கத்துவ அமைப்புக்களின் தலைமைத்துவங்களுடனான விஷேட சந்திப்புகளை தேசிய ஷூர சபை மேற்கொண்டு வருகின்றது.

அத்தொடரில் அதன் அங்கத்துவ அமைப்பில் ஒன்றான இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கத்துடனான சந்திப்பு கடந்த 11.10.2016 அன்று , கொழும்பு தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.

இதன் போது தேசிய ஷூரா சபையின் தலைவர் ஜே.தாரிக் மஹ்மூத், உப பொதுச் செயலாளர் சகோ. பர்ஸான் ராஸிக் , நிறைவேற்று குழு உருப்பினர் மெளலவி தஸ்லீம், செயலகக் குழு உருப்பினர்களான சகோ. ஷாராப் அமீர், சகோ.பாரூக், சகோ.ஹகீம், சகோ.அன்வர் சதாத் மற்றும் தேசிய ஷூரா சபையின் நிறைவேற்று குழு உருப்பினரும் இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் செயலாளருமான சகோ. ருடானி ஸாஹிர் மற்றும் ஏனைய அங்கத்தவர்களான சகோ. எஸ்.எல்.எம். ஹஸ்ஸான், சகோ. எம்.எஸ்.எம்.அஸ்ஹத், சகோ. எம்.எப்.எம்.ஸக்கி, சகோ. ஸுஹ்ரி, சகோ. முஆஸ் அஹ்மத், சகோ.உமைர் நஸீப், சகோ. அஹ்மத் யாஸிர், சகோ. எம்.ஜீ.எம்.அஸ்ஹர் போன்றோர் கலந்து கொண்டனர்.

இதன் போது பல முக்கியமான விடயங்கள் கலந்தாலோசனை செய்யப்பட்டது. குறிப்பாக தேசிய ஷூரா சபையின் தோற்றம்செ, செயற்பாடுகள், ஏனைய அமைப்புகளுடனான உறவுகள் மற்றும் அதன் எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

அங்கத்துவ அமைப்பு என்ற வகையில் இலங்கை இஸ்லாமிய மாணவர் அமைப்பு, தேசிய ஷூரா சபையினால் முன்மொழியப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்திற்கான மூலோபாயத் திட்டமிடலில் உள்ள தேசிய நிகழ்ச்சி நிரலின்படி கல்வி மேம்பாடு தொடர்பான இலக்குகளை அடைய பங்களிப்பு செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

இறுதியாக, முஸ்லிம் மாணவர்களின் கல்வி மேம்பாடு தொடர்பாக அவ்வமைப்பு ஆற்றும் பணிகள் பற்றிய காணொளிப்பதிவு ஒன்றும் காண்பிக்கப்பட்டது.

Scroll to Top