அங்கத்துவ அமைப்புகளுடனான சந்திப்பு – ஜமாத்துஸ் ஸலாமா

ngt

தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தல், தேசிய ஷூரா சபையின் கடந்த கால, நிகழ கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் பற்றிய விடயங்களை கலந்துரையாடல், அங்கத்துவ அமைப்புக்களை இணைத்துகொண்ட கூட்டான செயற்திட்டங்களை மேற்கொள்ளல்  போன்ற இலக்குகளை அடிப்படையாகக்கொண்டு  தனது அங்கத்துவ அமைப்புக்களின் தலைமைத்துவங்களுடனான விஷேட சந்திப்புகளை தேசிய ஷூர சபை மேற்கொண்டு வருகின்றது. அத்தொடரில் அதன் அங்கத்துவ அமைப்பான ஜமாத்துஸ் ஸலாமாவுடனான சந்திப்பு 29.08.2016 அன்று , ஸலாமா தலைமை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது பல முக்கியமான விடயங்கள் கலந்தாலோசனை செய்யப்பட்டது. குறிப்பாக தேசியா சூரா சபையின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் முழுமையாக சென்றடைவது பற்றியும் பிரதேசவாரியக தேசியா சூரா சபை; அதன் செயற்பாடுகள் என்ன ? தேசியா ரீதியாக எப்படி பங்காற்றுகின்றது ? என்பது பற்றி நாட்டு மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தல்; தஹ்வா பணிகளை பிரசாரத்தின் மூலமும் எழுத்துகளுடனும் குறிப்பாக செயல் ரீதியாகவும் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

இதில் தேசிய சூரா சபையின் உப தலைவர் சகோ. ரீஸா யஹியா, பொருளாளர் மௌலவி ஸியாத் இப்ராஹீம் , உப பொது செயலாளர். எம்.டி.தஹாசிம் மற்றும் நிறைவேற்று குழுவின் உறுப்பினர்களான மௌலவி தஸ்லிம் அவர்களும் சகோ. ருடானி ஸாஹிர் , சகோ. அஷ் செய்க் அப்துல் அஸீம் செயலக குழு உறுப்பினரான சகோ. எ.ம். அஜ்வாடீன் , , ஆகியோர்களும் ஜமா அதுஸ் ஸலாமா சார்பாக தலைவர் அஷ் செய்க். ஆஸாத் அப்துல் முஹீத் , பொதுச் செயலாளர் அஷ் செய்க் எ.ஜி.ரயீஸுல் இஸ்லாம் , தேசிய சூரா சபையின் நிறைவேற்று குழு உறுப்பினரும் ஜமா அதுஸ் ஸலாமாவின் பொருளாளருமான டாக்டர். ஸய்புல் இஸ்லாம் , மற்றும் சகோ. நியாஸ் முஹீதீன் , சகோ. எம்.நயிமுதீன் , சகோ. எ.ஸ்.எம்.அக்ரம் , சகோ. எ.எஸ்.நிஹாஸ் , சகோ. ரம்சான் ஜலால்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது சகோ. ரீஸா யஹியா தேசிய சூரா சபையின் நிகழ்கால,எதிர்கால திட்டங்கள் பற்றிய அறிமுகத்தை முன்வைத்தார்.

தேசியா சூரா சபையின் எதிர் கால செயற்திட்திட்டங்களுக்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் , தேசிய சூரா சபையின் தனியான செயற்திட்டங்களையும் அங்கத்துவ அமைப்பு என்ற வகையில் முழுமையாக மேற்கொள்ள தயார் என்பதையும் அதுஸ் ஸலாமா தெரிவித்துக்கொண்டது.

தேசிய சூரா சபையின் சகவாழ்வு உப குழுவின் செயற்திட்டங்களை , பூரண அனுசரணையில் முழுமையான முறையில் ஜமா அதுஸ் ஸலாமாவே மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

hju ghj gjk ngt

Scroll to Top