சகவாழ்வு உபகுழுவின்கு பதுளை மாவட்ட விஜயம்

தேசிய சூரா சபையின் உப குழுக்களுள் ஒன்றான சகவாழ்வு குழு 08.09.2016 வியாழக்கிழமையன்று இனங்களுக்கு இடையிலான நலுறவினையும் சகவாழ்வினையும் மேம்படுத்தும் நோக்கில் எதிர் கால செயற்திட்டங்களினை வகுக்கும் நோக்கிலும் பதுளை நகரிற்கு சகோ.எம்.ச்.எம். நியாஸ்  தலைமையில் அஷ்-சேக். முனீர் முளவ்பர் (நளீமி) , சகோ.இஹ்திசாம் , மற்றும் லாபிர் மதனி (நளீமி) தமது உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இதன் போது பதுளை ஜம்இய்யதுல் உலமா சபை , (YMMA) வை.எம்.எம்.எ. உறுப்பினர்கள் , பள்ளி நிர்வாகிகள் , அரசியல் நிர்வாகிகள் , அரசியல் பிரதிநிதிகள் , ஊர் முக்கியஸ்தர்கள் , சமூக நலன் விரும்ம்பிகள் , உட்பட அனைத்து தரப்பினர்ரையும் சந்தித்து கலந்துறையாடினர்.

மேலும் இவ்விஜயத்தின் போது அல்-அதான் பாடசாலை அதிபர் மற்றும் பதுளை ஜம்இய்யதுல் உலமா சபை அங்கத்தவர்களுடனும் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

இங்கு அனைத்து தரப்பினரும் சகவாழ்வு உப குழு பிரிவின் வேலைத்திட்டங்களையும் செயற்பாடுகளையும் வரவேற்றதோடு தமது பூரண ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

Scroll to Top