தேசிய சூரா சபையின் தேசிய தின நிகழ்வுகள் கொழும்பு 07ல் அமைந்துள்ள ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் தேசிய தினமான 4 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளன.
மேற்படி நிகழ்வில் பள்ளிவாயல் முன்றலில் தேசிய கொடி ஏற்றப்பட்டு பின்னர் அங்கு மர நடுகையும் இடம் பெறும்.
சபையின் தலைவர் சட்டத்தரணி அஸூர் அவர்களது தலைமையில் இடம் பெறவுள்ள நிகழ்வுகளில் அதன் நிறைவேற்று குழு, செயலகக் குழு, பொதுச்சபை உறுப்பினர்கள், ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகிகள் உட்பட உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கை நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு எல்லாத் துறைகளிலும் வீழ்ச்சி நிலையில் இருப்பதினால் மேற்படி நிகழ்வு “நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் தாய்நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற மகுடத்தில் இடம்பெறவுள்ளது. நான்கு மதங்களையும் சேர்ந்த மதத் தலைவர்கள் நாட்டை கட்டி எழுப்புவதன் அவசியம் தொடர்பான தத்துமது மதங்களது கருத்துக்களை உள்ளடக்கி உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.
சிங்கள மொழியின் இஸ்லாமிய தஃவா பணியாளர் மௌலவி அம்ஹர் ஹகம்தீன்,சின்மயா மிஷனைச் சேர்ந்த சுவாமி குணாதீதானந்த சரஸ்வதி ஆகியோருடன் பெளத்த, கிறிஸ்தவ மத குருக்களும் உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.
மேற்படி நிகழ்வில் பொதுமக்களும் கலந்து கொள்ள முடியும் என சூரா சபை தெரிவித்துள்ளது.