Flood Disaster – Appeal from the National Shoora Council

Sri Lanka of fload

Due to the recent heavy rains and resulting floods, a significant number of people have been affected. Many have lost their belongings and have been forced to relocate. This is a test from Allah.

In this situation, we must undertake the following responsibilities concerning those affected:

  1. Recognize that this is a test from Allah. Encourage the affected individuals to remain patient and accept Allah’s decree with faith, as doing so will bring blessings. Provide them with emotional support and counseling to strengthen their morale.
  2. Social organizations and private individuals must urgently address the needs for temporary shelter, clothing, medical aid, and food for those affected.
  3. Given the economic challenges in the country, unnecessary expenses and wasteful spending must be completely avoided, particularly during this time. Instead, efforts should be directed toward providing maximum assistance for relief work. The Qur’an states that “those who squander are the brothers of Satan.”
  4. A significant number of people have come forward to collect, store, and distribute relief assistance. We pray that Allah blesses them abundantly. However, since additional support is needed for the affected, more people should participate in such charitable activities to earn Allah’s blessings.
  5. Organizations and individuals engaged in relief work must share information and plans with one another and collaborate. This will help avoid wastage of time, resources, and effort.

The National Shoora Council prays that Allah grants inner peace, patience, and swift relief to all those affected and enables them to return to normal life soon.

O Allah! Grant us all the mindset and patience to accept Your decree (‘Qadr’) and bless the efforts of those helping the distressed with ample rewards.

Media Init

National Shoora Council

29.11.2024

வெள்ள அனர்த்தம்: தேசிய ஷூரா சபையின் வேண்டுகோள்

அதிக மழை காரணமாக உருவான வெள்ளத்தாலும் கடும் காற்று மற்றும் மண் சரிவு போன்ற அனர்த்தங்களாலும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. பலர் தமது உடமைகளை இழந்து தற்காலிக இடங்களில் தங்கியுள்ளனர். இந்த சூழல் அல்லாஹ்வின் சோதனையாகும் என்பதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில்,நாம் பின்வரும் முறைகளில் நடந்து கொள்ள வேண்டும் என தேசிய ஷூரா சபை வேண்டிக் கொள்கிறது.

  1. உளநிலை ஆறுதல்:

பாதிக்கப்பட்டவர்களைப் பொறுமையுடன் இருக்கச் செய்ய அவர்களுக்கு உளவள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். இதனை அல்லாஹ்வின் சோதனையாக கருதுவதுடன், அவனுடைய நாட்டத்தை ஏற்றுக்கொள்வது நன்மைகளைத் தரும் என்ற வகையிலும் இந்த உளவள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். சமூகத்தில் உள்ள உளவள ஆலோசகர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பான நிறுவனங்கள் இப்பணியை மேற்கொள்ளலாம்.

  1. அவசர தேவைகள் பூர்த்தி:

நிலைமை சற்று மோசமடைந்திருப்பதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள், ஆடைகள், மருத்துவ உதவிகள், உணவு போன்ற அடிப்படைத் தேவைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே இந்த நற்பணியில் ஈடுபட்டிருக்கின்ற சமூக சேவை அமைப்புகளும் மற்றும் தனியாரும் தமது பங்களிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும்.

  1. அனாவசிய செலவுகளை தவிர்ப்பது:

பொருளாதார நெருக்கடிகள் நாட்டில் நிலவுவதன் காரணமாக, குறிப்பாக இந்த அனர்த்த நிலைகளின் பொழுது மக்கள் கணிசமான தொகையினர் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், குறிப்பாக தனவந்தர்கள் பணக்காரர்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து நிவாரண உதவிகளுக்குப் பெருமளவில் பங்களிக்க வேண்டும். அல்குர்ஆனின் படி,வீண் செலவு செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாவர்.

  1. செயல்பாடுகளில் ஒன்றுபாடு:

நிவாரண உதவிகளை சேகரித்தல், களஞ்சியப்படுத்தல், மற்றும் விநியோகம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடும் அமைப்புகள் ஒருமித்த திட்டமிடலுடன் செயல்பட வேண்டும். தமக்கிடையே தகவல்களையும் நிவாரண வேலை திட்டங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நேரம் மற்றும் வளங்கள் வீணாகமலிருக்க இந்த ஒருமித்த முயற்சி அவசியமாகும்.

  1. துஆவின் அவசியம்:

பாதிக்கப்பட்டவர்களுக்கு உள நிம்மதி, பொறுமை, மற்றும் நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றும் நிவாரணப் பணிகளுக்காக தம்மை அர்ப்பணித்துள்ள தனிமனிதர்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்துக்கும் அல்லாஹ்வின் நன்மை கிடைக்க வேண்டும் என்றும் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

யா அல்லாஹ்! பாதிக்கப்பட்டவர்களுக்கு உன்னுடைய அருளும், நிவாரணமும் கிடைக்கச் செய்வாயாக. நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு சிறந்த கூலியை வழங்குவாயாக!

ஊடகப் பிரிவு,

தேசிய ஷூரா சபை

29.11.2024

Scroll to Top