வாக்களிப்புக்கு நன்றி!
வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும், மேற்கிலும், மலையகத்திலும் வாழும் அனைத்து இன, மத மக்களையும் ஒன்றிணைத்த ஒரு புதிய ஜனநாயகப் பயணத்தை ஆரம்பித்து எமது தாய்நாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல அனைத்து வாக்காளர்களும் வழங்கிய பாரிய பங்களிப்பை தேசிய ஷுரா சபை பாராட்டுகிறது.
இன, மத, பால் வேறுபாடற்ற வகையில் தமது வாக்குரிமையைப் பிரயோகித்த 13,387,951 (83.72%) வாக்காளர்களுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்.
விஷேடமாக, பிரதான இரு வேட்பாளர்களாகக் களமிறங்கிய கோடாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரை மையப்படுத்தி இன, மத பேதமற்ற வகையில் அனைத்து இன மக்களும் ஒன்றுதிரண்டமை தேசத்தின் இன நல்லுறவுக்கும், சகவாழ்வுக்கும் சாதகமானதொரு விடயமாகவே நாம் கருதுகின்றோம்.
புதிய ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் முஸ்லிம் சமூகம் சார்பாக எமது வாழ்த்துக்களைத் தொிவித்துக் கொள்கிறோம்.
ஆட்சியாளர்களும், ஆட்சி அதிகாரங்களும் காலத்துக்குக் காலம் மாறலாம். எமது நாட்டின் ஜனநாயகப் பயணத்தில் மனித உரிமைகளையும், சமூக விழுமியங்களையும் மேம்படுத்தும் நல்ல விடயங்களை ஆதரித்து மக்கள் மயப்படுத்துவதில் எதிர்காலத்திலும் நாட்டு மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடனும், பொறுப்புடனும், உரிமையுடனும் செயற்படுவீர்கள் என்று நாம் எதிர்பாக்கின்றோம்.
இவ்வண்ணம்
தேசிய ஷூரா சபை
19.11.2019