முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்தேசிய ஷுரா சபை கலந்துரையாடல்

Muslim Parliamentarians

தேசிய ஷுரா சபை இன்று முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை முன்னாள் அமைச்சர் பெளசி எம்.பி அவர்களது இல்லத்தில் சந்தித்து தற்போதைய களநிலவரங்கள் குறித்து கலந்துரையாடியது.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் பாதுகாப்புத் தரப்புக்கள், ஊடகங்கள் என பல்வேறு மட்டங்களில் அரசியல் தலைமைகள் கூட்டாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்தூரையாடப்பட்டு சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெறவுள்ள சந்திப்பில் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களும் இனங்காணப்பட்டன.

அதேபோன்று முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் கீழ் அமைக்கப்படவுள்ள விஷேட செயலணியின் பணிகள் குறித்தும் ஆராயப்பட்டது.

கல்வி உயர்கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

சந்திப்பு மற்றும் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் உரிய தரப்புக்களின் கவனத்திற்கு மாத்திரம் கொண்டுவரப் படவுள்ளமையால் ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லை.

 

Scroll to Top