தேசிய ஷூரா சபையின் ஏற்பாட்டில் “எல்லை மீள்நிர்ணயமும் இலங்கை தேர்தல் முறைமையும்” – பகிரங்க சொற்பொழிவு

ER 11

“எல்லை மீள்நிர்ணயமும் இலங்கை தேர்தல் முறைமையும்” எனும் தலைப்பில் விஷேட பகிரங்க சொற்பொழிவு ஒன்றை தேசிய சூரா சபை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வின் விஷேட பேச்சாளராக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த நிகழ்வு எதிர்வரும் செவ்வாய் கிழமை (24-11-2015) மாலை 6.15 மணி முதல் 8.30 வரை, இல 149, மாளிகாகந்த வீதி, கொழும்பு – 10 இல் அமைந்துள்ள ஜம்இய்யத்துஷ் ஷபாப் (AMYS) கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வின் இறுதியில், கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பான பார்வையாளர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான ஒர் விஷேட அமர்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பகிரங்க சொற்பொழிவில் அனைவரும் கலந்து கொள்ளமுடியும். பெண்களுக்கான பிரத்தியேக ஆசன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தேசிய சூரா சபை சமூகத்தின் நடைமுறை விவாகரங்களை மையமாக வைத்து நடாத்திவரும் பகிரங்க சொற்பொழிவுத் தொடரில் இது இரண்டாவது நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும். இந்நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களை 0766 270 470 என்ற இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top