பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்துடனான சந்திப்பு

meeting with nida ul khair

தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புகளில் ஒன்றான பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையம் மற்றும் தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான உபகுழுவுக்கும் இடையிலான சந்திப்பொன்று 3௦.11.2016 அந்நிலையத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி அவ்வமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் நௌபர் (கபூரி) மௌலவி வசீம், மௌலவி ரொஷான் அக்தார் மற்றும் சகோதரர் இல்யாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான உபகுழுவினை பிரதிநிதித்துவப்படுத்தி உபகுழுவின் தலைவர் டாக்டர். ஸைபுல் இஸ்லாம், உறுப்பினர்களான ஆசிரியர் நியாஸ், அஷ்ஷேக். ஷகீப் (தன்வீரி) ஜனாப் பவாஸ், ஜனாப் ரியாஸ் மற்றும் லாபிர் மதனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

\"12\"இச்சந்திப்பின் போது தேசிய ஷூரா சபையின் தோற்றம், அதன் முக்கியத்துவம் மற்றும் அதன் கடந்த கால, எதிர் கால செயற்பாடுகள் பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டதுடன் தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான மூலோபாய திட்டமிடல் (Strategic way forward ) பற்றி விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இத்திட்டங்களுக்கு தமது அமைப்பின் பூரண ஒத்துழைப்பை நல்குவதாக பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் நௌபர் (கபூரி) அவர்கள் தெரிவித்தார். மேலும் இதன் போது பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்தினால் தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

அத்தோடு தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான உபகுழுவினால் ஆறு கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதமொன்றும் அந்நிலையத்தின் தலைவரிடம் சகவாழ்வுக்கான உப குழுவின் தலைவர் டாக்டர். ஸைபுல் இஸ்லாம் அவர்களால் வழங்கப்பட்டது.

Scroll to Top