முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எச்.எம். அஸ்வர் மறைவு குறித்த அனுதாபச்செய்தி

ஏ.எச். எச். எம். அஸ்வர்

முன்னாள்  முஸ்லிம் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச். எச். எம். அஸ்வர் அவர்களின் மறைவு குறித்து தேசிய ஷூரா கவுன்ஸில் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.  

பாராளுமன்ற உரை மொழி பெயர்ப்பாளராக பணி செய்த காலம் முதல் பல தேசிய மற்றும் சமூகத் தலைமைகளுடன் நெருக்கமாக இருந்து தேசத்திற்கும் சமூகத்திற்கும் பணியாற்றினார். மர்ஹூம் அஸ்வர் சமுதாயத்தின் விவகாரங்களில் எப்பொழுதும் அக்கறை கொண்டிருந்தார்மேலும் அவர் முக்கிய பாத்திரத்தில் செயலும் ஆற்றி வந்தார். 

முஸ்லிம்கள் இந்நாட்டு வரலாற்றில் முக்கிய பாத்திரத்தில் செயற்பட்டு வந்ததையும் பண்டைய காலம் முதல் சிங்கள மக்களுடன் நெருக்கமான உறவைப் பேணி வந்ததையும் மர்ஹூம் அஸ்வர் தனது பல உரைகளில் சுட்டிக்காட்டிவந்தார். 

ஒரு கலகலப்பான அரசியல்வாதியாக வலம் வந்த திரு அஸ்வர் அவர்கள்பலஸ்தீனிய மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்த ஒரு செயல் வீரரர் ஆவார். பல அரசியல்வாதிகள் ஊழல் குற்றச்சாட்டுகளால் கறைபடும் நிலையில்பலதசாப்தங்களாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த இவர் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத ஒரு அரசியல்வாதியாக சாதனை படைத்தார்.  

தான்  கொண்டிருந்த கொள்கைகளுக்காக எந்தவிதத் தியாகத்தையும் மேற்கொள்ள அஸ்வர் என்றும்தயங்கியதில்லை. ஜனவரி 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது திரு மஹிந்த ராஜபக்க்ஷவின் முயற்சியை எளிதாக்க தனது பாராளுமன்ற ஆசனத்தையே அல்ஹாஜ் அஸ்வர் விட்டுக் கொடுத்தமை இதற்கான ஒரு மறுக்க முடியாத சான்றாகும்.  

சிங்களம்தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றிருந்த மர்ஹூம் அஸ்வர் ஒரு ஆர்வமுள்ள கிரிக்கட் இரசிகராகவும் இருந்து நேரடி வர்ணனைகளுக்கும் உற்சாகமாக பங்களிப்பு செய்து வந்தார்.  

முஸ்லிம்கள் பல்வேறு விதமான சோதனைகளுக்கும் சவால்களுக்கும் இலக்காகி வரும் இக்கால கட்டத்தில் மர்ஹும் அஸ்வருடைய பிரிவு முஸ்லிம் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பாகும். 

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹும் அஸ்வருடைய பாவங்களை மன்னித்துஅவருடையநற்செயல்களை கபூல் செய்து அவருக்கு மேலான ஜன்னதுல் ஃபிர்தவுஸை சன்மானமாகக் கொடுத்தருள்வானாகஆமீன்!  

தாரிக் மஹ்மூத்,
தலைவர்,
தேசிய ஷூறா சபை

Scroll to Top