மீள் குடியேற காத்திருக்கும் முஸ்லிம்களிடம் ஷூரா சபை அவசர வேண்டுகோள்

north muslim in sri lanka

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வடமாகாணத்தில் இருந்து நீண்ட காலமாக இடம்பெயர்ந்திருப்பவர்களை மீள்குடியேற்றுவதற்கான விஷேட செயலணி (TFR) மேற்கொள்ளும் – உள்ளக இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான- மக்கள் தொகைமதிப்பு தொடர்பான பத்திரங்களை பூர்த்தி செய்து 16/10/2017 ஆம் திகதியிற்கு முன்னர் பிரதேச கிராம சேவை அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

இது தொடர்பான அறிவித்தல் கடந்த 20/09/2017 பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட்டதோடு, மாவட்ட செயலாளர்கள், பள்ளிவாயல்களூடாகவும், சமூக ஊடகங்களூடாகவும் பாதிப்புற்ற மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக விஷேட செயலணி (TFR) தேசிய ஷூரா சபைக்கு தெரிவித்துள்ளது.

மேற்படி உத்தியோகபூர்வமான தொகைக் கணிப்பீட்டின் மூலம் பெறப்படும் தரவுகள் புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது, அந்த வகையில் இந்த சந்தர்ப்பத்தை இடம்பெயர்ந்து வாழும் வடபுல முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள தவறிவிடக்கூடாது.

இன்னும் இரண்டொரு தினங்களே எஞ்சியுள்ள நிலையில் வடமாகாண முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் மஸ்ஜித் நிர்வாகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நாளை ஜும்மாஹ் தினத்திலும் வார இறுதி நாற்களிலும் மேற்படி பதிவினை மக்கள் உரிய முறையில் நிறைவு செய்வதனை உறுதி செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் கட்டாயமாகும்.

எதிர்வரும் 2017 நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள இத்தொகைக்கணிப்பிற்காக உங்கள் பிரதேசத்திற்கு வருகைதரும் தொகைக்கணிப்பீட்டாளர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குதல் வேண்டும்.

மேலதிக விபரங்களை கிராம சேவை அலுவலர், பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளருடன் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது www.taskforcepidp.lk என்ற இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

கொழும்பு காலி வீதி இல 356 B என்ற முகவரியிலுள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான செயலணியின் கருத்திட்ட முகாமைத்துவ அலகின் கருத்திட்ட முகாமையாளரிடமும் அது குறித்து விசாரிக்கமுடியும்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
பொதுச் செயலாளர்
தேசிய ஷூரா சபை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top