மாற்றம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் எனும் தலைப்பில் பயிற்சிப்பட்டறை

“மாற்றம் மற்றும்  அனர்த்த முகாமைத்துவம்” (Change & Disaster Management)  எனும் தலைப்பில்  தேசிய ஷூரா சபை ஏற்பாட்டில் பயிற்சிப்பட்டறையொன்று இன்று (17) கொழும்பில் AMYS கேட்போர்  கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு தேசிய ஷூரா சபையின் தலைவர் தாரிக் மஹ்மூத் அவர்களின் தலைமையில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புகள் மற்றும் இத்துறையில் ஆர்வமுள்ள அமைப்புகளான அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை, கொழும்பு மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளனம் (CDMF) ஆகியவற்றின் பிரதிநிதிகள்,  மற்றும் துறைசார் நிபுனார்களும்  கலந்துகொண்டனர்.

தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் பொறியியலாளர் ரீசா யஹ்யா மற்றும் அனர்த்த முகாமைத்துவத் துறையில் ஐ.நா கருத்திட்டங்களில் பணியாற்றி அனுபவம் பெற்ற சகோதரர் ஹில்று சித்தீக் ஆகியோர் வளவாலர்களாக கலந்துகொண்டமை இதன் சிறப்பம்சமாகும்.

மாற்றங்கள், அனர்த்தங்கள் என்றால் என்ன, அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது, அவற்றுக்கான வழிமுறைகள் எவை? என்பன சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இறுதியாக இந்நிகழ்வில் கலநதுகொண்ட அமைப்புகள் மேற்கொள்ளும்  மற்றம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிகழ்ச்சிகள் பற்றி கலந்துரையாடப்பட்டு இவ்வமைப்புகளுக்கு இடையிலான வலையமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டது.

மேலும், கொழும்பு 10, மாளிகாகந்தையில் அமைந்துள்ள AMYS கேட்போர்  கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு மாலை 4.20 மணிக்கு நிறைவு பெற்றது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top