மாகாண சபைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்வதில் முஸ்லிம் MPகள் ஒருமித்த கருத்து

mp11

மாகாண சபைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பற்றி ஷூரா சபையுடனான சந்திப்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்

மாகாண சபைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளனர்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தேசிய ஷுரா சபையின் சந்திப்பில் இது பற்றிய தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டது

மாகாண சபை தோ்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிப்பதற்கான பரிந்துரைகளை சிபார்சு செய்வதற்க்காக நியமிக்கப்பட்ட ஆணைக் குழு சமர்ப்பித்த அறிகையின் படி இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் ஒரு பாரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.

அதாவது இந்த அறிக்கையில் இலங்கை 222 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம்களுக்கு 21 இலும் குறையாத தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், இங்கு வெறுமனே13 தொகுதிகளிலேயே முஸ்லிம்கள் பெருபான்மையாக உள்ளனர். இதன்படி பார்க்கையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் 40% த்தினால் திட்டமிட்டபடி குறைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபைக்கு இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகளைத் தொிவுசெய்து அனுப்பிய மன்னார் மாவட்டத்தில் ஒரு தொகுதியேனும் முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்படவில்லை. கண்டி, மாத்தளை, குருணாகல், பொலன்னறுவை, அநுராதபுரம்,கேகாலை, காலி ஆகிய மாவட்ட முஸ்லிம்கள் மிக மோசான முறையில் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்களுடனான தேசிய ஷுரா சபையின் கலந்துரையாடலில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் பெறப்பட்டன.

1.இந்த அறிக்கை முழுமையாகப் புறக்கணிப்பட வேண்டும்,

2.அது தொடர்பான மீளாய்வுக் குழுவில் முஸ்லிம்களின் உரிய பிரதிநித்துவத்தை உறுதிசெய்வதில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்துச் செயற்படல் வேண்டும்.

3.பழைய முறைமையான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையை மீண்டும் கொண்டுவருவதில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்படல் வேண்டும்.

தேசிய ஷுரா சபைத் தலைவர் தாரிக் மஹ்மூத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்தரையாடலில்,அமைச்சர்களான ரவூப் ஹகீம், ஹிஸ்புல்லா, பைசல் காசிம், ஹரீஸ் ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களான,இஸ்ஹாக் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான், நவவி, காதர் மஸ்தான், அப்துல்லா மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பான விடயங்கள் பற்றிய பல விடயங்களை குறித்த குழுவின் உறுப்பினரும் தேசிய ஷுரா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான பேராசியர் ஹஸ்புல்லா அவர்கள் முன்வைத்தார்.

mp 5

mp11

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top