பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் இலங்கையின் ஒரு புலமைச் சொத்தாக மிளிர்ந்தவர்.ஆய்வும் உண்மையைத் தேடலும் சமூகப் பணியும் அவரது சிறப்புப் பண்புகளாக இருந்தன.
அவரது அறிவும் சர்வதேச உறவும் அவரில் அகந்தையை உண்டு பண்ணவில்லை.தனக்கிருந்த செல்வாக்குகளையும் பட்டம் பதவிகளையும் மொழிப் புலமையையயும் தனது நலனுக்காக அன்றி தனது சமூகத்தின் நலனுக்காகவே பயன்படுத்தினார்.
தேசிய ஷுரா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக இருந்து அவர் ஆற்றிய அரும் பணிகளை ஷூரா சபை நன்றிப் பெருக்கோடு நினைவுகூருகிறது.
அத்தோடு மாகாண சபை எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்து முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்கு முழு முயற்சியெடுத்தார்.இவ்விவகாரம் தொடர்பாக தேசிய ஷுரா சபை நிறுவிய செயற்குழுவுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கியதுடன்
வில்பத்து விவகாரம், வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், வடக்கு,கிழக்கு மாகாண முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை போன்ற விவகாரங்களைக் கையாள்வதில் தேசிய ஷுரா சபையுடன் மிக நெருக்கமாக இணைந்து அவர் பணியாற்றினார்.
அவரது சமூகப் பணிகளை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு ஜன்னதுல் பிர்தெளஸை வழங்க வேண்டும் என தேசிய ஷூரா சபை பிரார்த்திக்கிறது.
இப்படிக்கு
தலைவர்
தாரிக் மஹ்மூத்
தேசிய ஷூரா சபை
25.08.2018