வருமுன் காக்க அடிமட்ட தலைமைகள் அவசியம், வந்தபின் பார்க்கமட்டுமே தேசியமட்ட தலைமைகளால் முடியும்.
மேற்படி (ஷூரா) ஊர்மட்ட ஒருங்கிணைப்பு பொறிமுறையை கலந்தாலோசனை கட்டமைப்பினை அமைத்துக் கொள்வதற்கான நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்க தேசிய ஷூரா சபை தயாராக உள்ளது.
தேசிய ஷூரா சபை அதனை மற்றுமொரு அமைப்பாக விஸ்தரிப்பத்ற்கோ, கிளைகளை அமைப்பதற்கோ இருக்கின்ற அமைப்புகளுடன் போட்டி போடவோ, அல்லது ஊரில் உள்ள ஏதேனும் அமைப்புக்களை அல்லது தனி நபர்களை பிரபலங்களை முன்னுரிமைப் படுத்தவோ முனைவதில்லை என்பதனை அனைத்து தரப்பினரும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
எவ்வாறு நாம் தனிநபர்களாக எமது சொந்த வாழ்வை, குடும்ப வாழ்வை, உறவு முறைகளை, செலவினங்களை, இருப்பு பாதுகாப்பை, கொடுக்கள் வாங்கல்களை, போக்குவரத்துகளை, பொறுப்புக்களை கடமைகளை அன்றாடம் வாராந்தம் மாதாந்தம் வருடாந்தம் தனியாகவும் கூட்டாகவும் மீளாய்வு செய்து திட்டமட்டுக் கொள்கிறோமோ தேவையான நிபுணத்துவ ஆலோசனைகளை சேவைகளை வளங்களை பெற்றுக் கொள்கிறோமோ அவ்வாறே ஒவ்வொரு மஹல்லா ஊர் மட்டத்திலும் கூட்டாக ஷுரா முறையில் எமது சமூக வாழ்வை கூட்டுப் போறுப்புடன் திட்டமிட்டுக் கொள்வது எமக்கு இஸ்லாம் சொல்லித்தரும் அதி உன்னதமான கட்டாயமான வழி முறையாகும்.
நாம் வாழுகின்ற தேசத்தைப் பொறுத்தவரை எமது குடிசனப்பரம்பல் எம்மைச்சூழ வாழும் பெரும்பான்மை சமூகங்கள், எமது அமைவிடங்கள், எமது சன்மார்க்க, சிவில், அரசியல் தலைமைகள், எமது புத்திஜீவிகள், எமது மஸ்ஜிதுகள், எமது வளங்கள், எமது பலம் பலவீனங்கள் என்பவை பிரதைசத்திற்கு பிரதேசம் ஊருக்கு ஊர் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டவைகளாகும்.
எனவே எமது அரசியல் சிவில் சன்மார்க்க தேசியத் தலைமைகளின் நெறிப்படுத்தல்களின் கீழ் ஊர் மட்டம் மாவட்ட மாகாண மட்டங்கள் முதல் தேசிய மட்டங்கள் வரை சமூகத்தின் எல்லா தரப்புகளையும் உள்வாங்குகின்ற கலந்தாலோசனை (ஷுரா) கட்டமைப்புகளை எம்மை ஒருங்கிணைக்கும் பொறிமுறைகளை நாம் ஏற்படுத்தி அந்தந்த மட்டங்களிற்கான அழகிய கட்டுக்கோப்பான தலைமைத்துவக் கட்டமைப்புகளை தோற்றுவிப்பதே தீர்வுகளை நோக்கிய அடுத்தபடி தயார் நிலையாகும்.