பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேசிய ஷூரா சபை அனுப்பி வைத்துள்ள செய்தி

ranil-wickremesinghe

கௌரவ ரணில் விக்ரமசிங்க,

பிரமதர்,

பிரதமர் அலுவலகம்,

கொழும்பு.

16 டிசம்பர் 2018

அன்பார்ந்த பிரதமர் அவர்களே!

இலங்கையின் பிரதம மந்திரியாக நீங்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எமது வாழ்த்துக்களையுத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலையை மாற்றியமைப்பற்கும் தங்களுக்கு மீண்டும் பதவி கிடைப்பதற்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்தவர்கள் பலரின் முயற்சிகளைப் போலவே, நல்லுணர்வுள்ள பிரஜைகள், சமூகத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் அயராத பங்களிப்பும், பல தன்னார்வ செயற்பாட்டாளர்களின் அர்ப்பணிப்பும் தலையீடுகளும் காரணங்களாக அமைந்தன.

தேசிய சூரா சபையான நாமும் அரசியல் சாசனம் எப்போதும் நிலைநிறுத்தபப்ட வேண்டும் என்பதையும் மக்கள் ஆணை பெற்றவர்கள் எப்படியான ஒரு சூழ்நிலை ஏற்பட்ட போதிலும் ஜனநாயகத்தின் உயிரோட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்துள்ளோம் என்பதையும் பெருமிதத்துடன் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

அதேவேளை, மான்புமிகு சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் தனது பதவிக்கு நேர்மையாக நடந்துகெண்ட விதமும், சுதந்திரமான நீதித்துறையினரது சட்டரீதியான தலையீடும் நம் தேசத்து அரசியல் வராலாற்றில் எப்போதும் நினைவு கூரப்படும்.

2015 நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சுயாதீன அரச நிறுவனங்கள் பலப்படுத்தப்பட்டமை மற்றும் ஜனநாயக மறுசீரமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டமை போன்ற வற்றோடு குறிப்பாக 19வது திருத்தச்சட்டம் என்பன தான் நீங்கள் மீண்டும் பதவிக்கு வருவதற்க்கு மிக பெரிய அளவில் பங்களிப்பு செய்தன என்பதை நீங்கள் பாரட்டுவீர்கள் என நம்புகிறோம்.

எமது அரச கலாசாரத்தில் ஜனநாயக ரீதியான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு தங்களுடைய அரசிட்கு தற்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக பொது மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவல் நிலவுகிறது .சாதகமான, நிலைபேறான மாற்றம் நாட்டில் ஏற்பட ஏற்படவேண்டும் என்பதற்காக 2015 இல் ஒன்றிணைந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் வாக்காளர் மத்தியில் பெரிய அளவில் ஏமாற்றம் நிலவியது. எதிர்பார்க்கப்பட்ட மாற்றம் தாமதமாகியதே இதற்க்கு காரணமாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அவ்வாறான சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்கான ஆற்றல் தங்களுக்கு இருக்கின்றது என்பதையும், நமது நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை கட்டியெழுப்பவதன் அவசியத்தை தாங்கள் நன்றாக உணர்ந்துள்ளீர்கள் என்பதையும் நம்புகிறோம்.

மேலும் இந்த மாற்றம் அரசியல் மற்றும் பரிபாலனத்தின் உயர்மட்டத்தில் இருந்தே உருவாக வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கூட்டு அரசாங்கம் ஒன்று அமைக்கப்டும் போது, சில வேளைகளில் அரசியல் கட்சிகளுக்கும் முக்கிய அரசியல் தலைமைகளுக்குமாக நெகிழ்ந்து கொடுத்தே செயற்பட வேண்டிய நிலை இருப்பதை நாமும் உணர்கின்றோம். ஆனால், இம்முறை தங்களது அமைச்சரவைத் தெரிவானது, அரசியல் நன்மைகளுக்காக விட்டுக்கொடுத்து மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாக அல்லாமல் தேசத்தின் நலன் கருதி, தூரநோக்குடனும் விவேகத்துடனும் மேற்கொள்ளப்படும் ஒரு முன்னெடுப்பாக இருக்கும் என இந்நாட்டின் கீழ் மட்டத்து நாடித்துடிப்பை அன்றாடம் உணரும் ஓர் அமைப்பு என்ற அடிப்படையில் நாம் நம்புகின்றோம்.

அரசியலின் அல்லது சமூக உறவுகளின் எந்த மட்டத்திலும் ஊழலை அனுமதிக்க முயாது என்பதையே இது குறிக்கின்றது. பிரதமர் என்ற வகையில் ஊழலை வேரோடு பிடுங்கி எறியவும் அது எந்த வடிவத்தில் இடப்பெற்றாலும் அதற்கெதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும், உங்களுக்கு மற்றும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியலில் ஒரு வகையான பரிவர்த்தனையும் அதாவது -மாற்றமும் ஒரு புதிய காலாசாரத்துக்கான நிறுவனமயப்படுத்தலும் தேவைப்படும் ஒரு கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம், இது பிராந்தியத்தில் பலமான ஒரு சக்தியாக இலங்கை உருவாக ஓர் அடிப்பையாக இருக்கும். இதுவே உங்கள் அரசு ஆசிக்கும் மரபாகவும் அமைய முடியும்.

அரசியல் மற்றும் நிர்வாகத்தில் ஜனநாயகக் கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதிலுமுள்ள பல நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்து செயல்பட்டிருக்கிறோம்.

இனங்களுக்கு இடையே உறவில் ஏற்பட்டுள்ள உடைவுகளின் பாதிப்பை சீர்செய்யவும் நம் எதிர்கால சந்ததியினர் அனைவரும் ஒருங்கிணைந்து வாழ முடியுமான, வளமான தாயகத்தை கட்டியெழுப்பவும் தேசிய ஷுரா கவுன்சில் எப்போதும் கைகொடுக்கும்.

இவ்வண்ணம் உங்களுக்கு நலவை நாடும்

தாரிக் மஹ்மூத்

தலைவர்

தேசிய சூரா சபை

r1

r2

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top