தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புகளுக்கிடையிலான சந்திப்பு கடந்த செவ்வாய்க் கிழமை(01) இரவு கொழும்பில் அமைந்துள்ள ஸலாமா தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
தேசிய ஷூரா சபையின் கௌரவத் தலைவர் தாரிக் மஹ்மூத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபையில் அங்கத்துவம் வகிக்கும் தேசிய ரீதியாக இயங்கும் 18 இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் பங்குபற்றின.
இந்த சந்திப்பின் போது தேசிய ஷூரா சபையின் கடந்த கால தேசிய, சமூக வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், சமகாலத்தின் அதன் வகிபாகம் மற்றும் தற்போது அது முன்னெடுத்து வரும் பணிகள், எதிர்காலத்தில் தேசிய ஷூரா சபை முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்கள் நாடு, சமூக மட்டங்களில் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் கருத்துப் பரிமாரப்பட்டன.
அத்துடன் நாடு, சமூகம் தழுவிய இந்த உயரிய பணிகளை மேற்கொள்ள அங்கத்துவ அமைப்புக்கள் எவ்வாறு தமது பங்களிப்பை வழங்கலாம் என்பது தொடர்பாகவும், தமது நிகழ்ச்சி நிரலில் தேசிய ஷூரா சபையின் வேலைத் திட்டங்களை எந்த வகையில் இணைத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டன.