தேசிய ஷுரா சபை மாகாண எல்லை நிர்ணய சபையிடம் அறிக்கை கையளிப்பு

l2

தேசிய ஷுரா சபையும் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனமும் இணைந்து முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையிலான அறிக்கையை மாகாண சபை எல்லை நிர்ணய சபையிடம் கொழும்பில் இன்று கையளித்தன.

நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் மக்களுடனான சந்திப்புக்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதான அறிக்கையுடன் கொழும்பு மாவட்டத்துக்கான தோ்தல் தொகுதி நிர்ணயம் பற்றிய அறிக்கையும் தனியாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கொழும்பு தவிரவுள்ள ஏனைய மாவட்டங்களின் அறிக்கைகள் அந்த அந்த மாவட்டப் பிரதிநிதிகள் ஊடாகக் கையளிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் ஒன்று திரட்டிய தொகுப்பாகவே இந்த அறிக்கை அமைந்துள்ளது.

தேசிய ஷூரா சபையின் தலைவர் தாரிக் பதியுத்தீன் மஹ்மூத், உப தலைவர்களுள் ஒருவரான சட்டத்தரணி ரீ.கே.அசூர்,பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் இனாமுல்லாஹ்,உபசெயலாளர் தஹாசீன்,நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான ஃபாரூக்,அஜிவதீன்,நுஹ்மான் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அறிக்கையை சமர்ப்பித்தனர.

NSC delegation submitted proposals on Delimitation of PC boundaries to the Committee appointed by HE the President. Both the concerns on Island wide representations and those of the Colombo District. 6th Wednesday at Colombo Divisional Secretariat.

NSC delegation submitted proposals on Delimitation of PC boundaries to the Committee appointed by HE the President. Both the concerns on Island wide representations and those of the Colombo District. Today 6th at Colombo Divisional Secretariat.

l4

l2

l1

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top