தேசிய ஷுரா சபை எந்தவொரு தேசிய அமைப்பிற்குமான மாற்றீடு அல்ல

nsc

தேசிய ஷுரா சபை எந்தவொரு தேசிய அமைப்பிற்குமான மாற்றீடு அல்ல, அது ஒரு சிவில் ஒருங்கிணைப்பு பொறிமுறையாகும்.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஆளுகையின் கீழ் வரும் *ஹிலால் கமிட்டி*,*பத்வாக் குழு*, *ஹலால் கமிட்டி* என இன்னோரன்ன குழுக்களின் விவகாரங்களில் தேசிய ஷூரா சபை தலையிடுவதில்லை என்ற தெளிவான நிலைப்பாட்டில் ஆரம்ப முதலே இருக்கிறது, மாறாக சமூகம் சார் கரிசனைகளை உத்தியோக பூர்வமாக முறையாக சகல தரப்புகளுடனும் கலந்துரையாடும்.

அதே போன்றே ஏனைய உறுப்பு அமைப்புகளின் நிகழ்ச்சி நிரல்களிலும் தேசிய ஷூரா சபை தலையிடும் பிரிதொரு அமைப்பும் அல்ல.

வேண்டப்படும் பட்சத்தில் அரசியல் சிவில் சன்மார்க தலைமைகள், அமைப்புக்களிற்கு நிபுணத்துவ ஆலோசனைகள் வழங்கவும், தேசிய விவகாரங்களில் ஒருங்கிணைப்பு பொறிமுறையாகவும் தேசிய ஷுரா சபை செயற்படும்.

எந்தவொரு தேசிய அமைப்பிற்கோ இயக்கங்களிற்கோ தேசிய ஷூரா சபை மாற்றீடாகவோ போட்டிக் குழுவாகவோ அமைக்கப்படவில்லை.

மாறாக தேசிய மட்டம் முதல் அடிமட்டங்கள் வரையில் இருக்கின்ற அமைப்புகளின், சமூக ஆர்வலர்களின், பல்துறை சார் நிபுணர்களின் ஒருங்கிணைப்பு பொறிமுறையாகவே தேசிய ஷூரா சபை தொடர்ந்தும் தொழிற்படும்.

இன்ஷா அல்லாஹ்.

தேசிய ஷுரா சபையின் உறுப்பு அமைப்புகள், நிபுணர்களின் தனிப்பட்ட அறிக்கைகள் ஆக்கங்களிற்கு தேசிய ஷூரா சபை பொறுப்புக் கூற முடியாது.

தயவு செய்து சமூக வலைதளங்களில் ஊகங்களை சந்தேகங்களை எவரும் கிளப்பி சமூகத் தலைமைகளுக்கிடையில் தப்பபிப்பிராயங்களை பிரிவினை பிணக்குகளை ஏற்படுத்த வேண்டாம்.

விமர்சனங்கள் எழுத்துக்கள் அமானிதங்கள், அல்லாஹ்வை பயந்து கொள்வோம்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top