தேசிய ஷுரா சபையின் பிராந்திய விஜயம்

re7

தேசிய ஷுரா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் குருணாகல் கல்கமுவ மற்றும் சியம்பலகஸ்கொடுவ பிரதேசங்களில் அவ்வப் பிரதேச பிரமுகர்ளை சந்திக்கும் கள விஜயத்தை  சனிக்கிழமை (05 ) மேற்கொண்டார்கள்.

கல்கமுவ பிரதேசத்தில் உள்ள சுமார் 15 சிற்றூர்களின் பிரதிநிதிகளை அல்-அஸ்ஹர் ஜும்மா மஸ்ஜிதிலும் சியம்பலகொடுவ பிரதேசத்தில் உள்ள சுமார் 25 சிற்றூர்களின் பிரதிநிதிகளை ஜலாலுல்லாஹ் மஸ்ஜிதிலும் தேசிய ஷுரா சபை சந்தித்தது.

அவ்வப் பிரதேச மக்கள் தங்களுக்கு மத்தியில் அரசியல், இயக்க, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சகல தரப்புக்களையும் உள்வாங்கிய அடிமட்ட ஷூரா ஆலோசனைக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கான நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்காகவே தேசிய ஷூரா சபை மேற்படி பிராந்தியங்களுக்கான விஜயங்களை மேற்கொண்டு வருகிறது.

தேசிய ஷுரா சபை நாடெங்கும் கிளைகளைக் கொண்ட மற்றமொரு கொள்கை சார் இயக்கமாகவோ சன்மார்க்க அல்லது அரசியல் போட்டிக் குழுவாக (ஒரு சில தரப்புக்கள் அஞ்சுவது போல்) அன்றி சிவில் சமூக தலைமைகளை வலுவூட்டுகின்ற தேசிய ஒருங்கிணைப்புப் பொறிமுறை வேலைத் திட்டத்திலேயே கவனம் செலுத்தி வருவது அறிந்த விடயமாகும்.

re7

re6

re5

re4

re3

re2

re1

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top