தப்பபிப்பிராயங்களை நீக்குவதற்கான ஒரு திட்டம்

nsc

முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைக்கால தாக்குதல்களுக்குக் காரணங்கள் பல இருக்கலாம். அவற்றிற் பிரதானமானது முஸ்லிம்களைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியுமான முஸ்லிம் அல்லாதவர்களது மனங்களில் ஏற்பட்டுள்ள தப்பான அபிப்பிராயங்களாகும்.

இதற்காக சமூக வலைத் தலத்தை அடிப்படையாகக் கொண்ட விழிப்பூட்டல் மற்றும் சந்தேகக் களைவுக்கான ஒரு முயற்சியை தேசிய ஷூரா சபையின் ஊடகத் துறைக்கான உப குழு மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது.

அதாவது, இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் சேறு பூசும் வகையில் எழுதப்படும் கட்டுரைகள், நிகழ்த்தப்படும் உரைகள் என்பவற்றுக்கு எதிராக முஸ்லிம்களாலோ முஸ்லிம் அல்லாதவர்களாலோ எழுதப்படும் ஆக்கங்களை, நிகழ்த்தப்படும் உரைகளை ஆவணப்படுத்தும் முயற்சியாக அது அமையவுள்ளது.

உதாரணமாக, முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களை எதிர்த்து திசரணி குணசேகர,விக்டர் ஐவன் போன்றவர்களால் இதுவரை எழுதப்பட்ட ஆக்கங்கள், கல்கந்தே தேரரர்,தம்மாலோக தேரர்,அமில தேரர்,அனுரகுமார திசானாயக போன்றவர்களால் நிகழ்த்தப்பட்ட உரைகள் அல்லது வேறு எவராவது ஆய்வாளர்களால் செய்யப்பட்ட ஆய்வு முயற்சிகள் போன்றவற்றின் ‘லின்க்’களை கீழே தரப்படும் ஈமெயல்் முகவரிக்கு நீங்கள் அனுப்பும் பட்சத்தில் அவற்றை வாசித்து அல்லது செவிமடுத்து பின்னர் அவற்றில் பொருத்தமானவற்றின் லின்க் களை வெப் தளத்தில் குறிப்பிடுவதற்கான முயற்சிகள் செய்யப்படும்.

இது வெறுமனே ஒரு திரட்டல் மற்றும் தொகுப்பு முயற்சி மட்டுமாகும்.இப்பணியை திறம்படச் செய்யும் நோக்கில் முழு நேரமாக இயங்கும் வகையில் அமர்த்தப்படும் உத்தியோகஸ்தர்கள் இந்த தொழில் நுட்ப வேலைகளுக்குப் பொறுப்பாக இருப்பர்.

முதலில் ஈமெய்ல் மூலமாக கிடைக்கும் லின்க்கள் பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டு அவற்றில் பொருத்தமானவை எனக் கருதப்படுபவை மட்டும் பதிவேற்றம் செய்யப்படும். உள்ளட்டக்கங்களுக்கு ஏற்ப தலைப்பு வாரியாக ஆக்கங்கள் தரப்படும்.

உதாரணமாக,

1.முஸ்லிம்களது சனத் தொகை பெருகியிருப்பது பற்றிய சர்ச்சை,

2.முஸ்லிம்கள் கருத்தடை சாதனங்களை உணவுகளுக்குள் சேர்ப்பது தொடர்பான குற்றச்சாட்டு,

3.முஸ்லிம் பெண்களது ஆடை பற்றிய பயம்

4.தேசத்துக்கு பங்களிப்புச் செய்யாத, சிலபோது அதற்கு துரோகம் செய்யும் நிலையில் முஸ்லிம்கள் இருப்பதான குற்றச்சாட்டு

இவற்றுக்கு முஸ்லிம் அல்லாதவர்களே பதில்களை எழுதியும் பேசியும் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் இவற்றுக்குப் பதில் கொடுப்பதை விட முஸ்லிம் அல்லாத புத்தி ஜீவிகள் கொடுத்துள்ள பதில்கள் அதிகம் தாக்கம் மிக்கவை. ஆனால் அவை ஓர் இடத்தில் முறையாகத் தொகுக்கப்படவில்லை.

உங்கள் லின்க்களை அனுப்ப வேண்டிய

ஈமெய்ல் முகவரி :-

nscmediasc@gmail.com

Unveil the Misconception Between Communities

——————————————————————–

There are many reasons behind the recent violence targeting Muslims in Sri Lanka. However, the most important factor is the misunderstanding about Muslims and Islam.

National Shoora Council Media Sub Committee has decided to conduct an awareness campaign through social media in order to educate, unveil the misconception.

Our motive is to document the articles and speeches by Muslims or Non-Muslims responded to the mudslinging articles and speeches of Islam and Muslims.

We kindly request you to email us nscmediasc@gmail.com any articles, speeches, or researches done addressing anti-Muslim campaign.

For example, articles written by Tisaranee Gunasekara, Victor Ivon or speeches delivered by

Ven Galkande Thero,

Ven. Dhammaloka Thero, Ven. Dambara AmilaThero or Anura Kumara Dissanayake. We will review the contents and publish in our website.

It is only an attempt to collect and archive the documents and references. We will appoint full time analysts in order to pursue the technical tasks efficiently.

References submitted by you via email, which is relevant to the subject will be published only after the comprehensive review. It will be categorized based on the contents of document or reference.

Example:

  1. Controversy on increase in the Muslim population.
  2. Allegation about sterilization pills added to the food by Muslims.
  3. Fear of the dress code of Muslim women.
  4. Allegations about non contribution to the nation by Muslims and sometimes labeled as traitors.

Non-Muslims have well responded to the allegations listed above. Responses from Non-Muslims would be much effective than the responses from Muslims in this regard. However, it is not documented in a centralized location in proper manner.

Please send your references to

nscmediasc@gmail

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top