சமூக சீர்­தி­ருத்தப் பணி­களில் ஈடு­படும் அமைப்­புக்­களைச் சேர்ந்த பிர­தி­நி­தி­க­ளுக்­கான கருத்­த­ரங்கு

photo 1 750x430 1

இலங்­கையில் தஃவா மற்றும் சமூக சீர்­தி­ருத்தப் பணி­களில் ஈடு­படும் அமைப்­புக்­களைச் சேர்ந்த பிர­தி­நி­தி­க­ளுக்­கான கருத்­த­ரங்­கொன்றை தேசிய ஷூரா சபை கடந்த வியா­ழக்­கி­ழமை கொழும்பில் நடாத்­தி­யது.

தேசிய ஷூரா சபையின் தஃவா துறைக்­கான உப­குழு “இலங்கைச் சூழ­லுக்­கேற்ப இஸ்­லாத்தை முன்­வைத்தல்” என்ற தொனிப்­பொ­ருளில் இந்­நி­கழ்வை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. தஃவா மற்றும் சமூக சீர்­தி­ருத்தப் பணி­களில் ஈடு­படும் சுமார் 25 அமைப்­புக்­களைச் சேர்ந்த 60இற்கும் மேற்­பட்ட உல­மாக்கள், புத்­தி­ஜீ­விகள், துறைசார் நிபு­ணர்கள், சமூக செயற்­பாட்­டா­ளர்கள் இதில் கலந்­து­கொண்­டனர்.

கடந்த காலங்­களில் குறிப்­பாக ஏப்ரல் 21ஆம் திகதி தாக்­கு­தலைத் தொடர்ந்து இஸ்­லா­மிய அமைப்­புக்­களும் செயற்­பாட்­டா­ளர்­களும் சந்­தேகக் கண்­கொண்டு பார்க்­கப்­பட்டு பல்­வே­று­பட்ட கெடு­பி­டி­க­ளுக்கு உள்­ளாகி இருப்­பது கண்­கூடு. இதன் விளை­வாக இஸ்­லா­மிய தஃவா மற்றும் சீர்­தி­ருத்தப் பணி அமைப்­புகள் தமது செயற்­பா­டு­களை ஓர­ளவோ அல்­லது முழு­மை­யா­கவோ நிறுத்­தி­யி­ருக்­கின்­றன. அவை கடந்த காலங்­களில் போற்­றத்­தக்க பல பணி­களைச் செய்­தி­ருந்த போதி­லும்­கூட இந்த நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருப்­பது பற்றி தேசிய ஷூரா சபையின் நிறை­வேற்றுக் குழு கரி­ச­னை­யோடு சிந்­தித்­தது. தொடர்ந்தும் இந்த அமைப்­புக்கள் தமது செயற்­பா­டு­களை மேற்­கொள்ள உற்­சா­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும். கடந்த காலங்­களில் எந்த இடங்­களில் தவ­றுகள் இடம்­பெற்­றதால் இந்­நிலை ஏற்­பட்­டது என்­பதை அறி­வு­பூர்­வ­மாக கண்­ட­றிந்து அதற்­கேற்ப திட்­டங்­களை வகுத்து செயற்­பட வேண்டும். எனவே, இந்த வகையில் இந்த அமைப்­புக்­க­ளுக்கு வழி­காட்­டு­வ­தற்­காக தேசிய ஷூரா சபை தனி­யான ஓர் உப குழுவை நிய­மித்­தது.

அக்­குழு முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த தஃவா துறை மற்றும் சீர்­தி­ருத்தப் பணி­களில் மிகுந்த ஆர்­வமும் அக்­க­றையும் அனு­ப­வமும் உள்ள சுமார் 25 பேரை இந்­நி­கழ்வு நடக்க முன்னர் சந்­தித்து அவர்­க­ளிடம் கேள்விக் கொத்­தொன்றை முன்­வைத்து எழுத்து மூல­மா­கவும் நேர­டி­யா­கவும் பதில்­களை பெற்­றுக்­கொண்­டது. தஃவா உப­கு­ழுவின் செய­லாளர் அஷ்ஷெய்க் பகீ­ஹுதீன் முஹம்மத் தயா­ரித்த அந்த பதில்­க­ளது சாராம்சம் ஆவ­ண­மாக அன்­றைய நிகழ்வில் கலந்­து­கொண்­ட­வர்­க­ளுக்கு வழங்­கப்ப­ட்­டன.

கருத்­த­ரங்கில் தேசிய ஷூரா சபையின் தலைவர் தாரிக் மஹ்மூத் தலை­மை­யுரை நிகழ்த்­தினார். தஃவா உப­குழு தலைவர் அஷ்ஷெய்க் நவ்பர் (கபூரி)வர­வேற்­பு­ரையையும் நிகழ்ச்சி தொடர்­பான அறி­முக உரையையும் நிகழ்த்­தினார். 25 பேரி­ட­மி­ருந்து பெறப்­பட்ட கருத்­துக்­க­ளது சாராம்­சத்தை அஷ்ஷெய்க் பளீல் முன்­வைத்­த­தோடு நிகழ்ச்­சி­களை நெறிப்­ப­டுத்­தினார்.

அதனைத் தொடர்ந்து சபை­யோ­ருக்கு மத்­தி­யி­லி­ருந்து கருத்­துக்­களை முன்­வைக்க விருப்பம் தெரி­வித்த ஐக்­கிய தெளஹீத் ஜமா­அத்தின் தலைவர் அஷ்ஷேக் வதூத் ஜிப்ரி, ஷாது­லிய்யா தரீக்­காவைச் சேர்ந்த கலா­நிதி அஸ்வர் அஸாஹீம் (அஸ்­ஹரீ), பாதிஹ் நிறு­வன விரி­வு­ரை­யாளர் ஜமா­அதுஸ் ஸலாமா அமைப்பைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத், கலா­நிதி

எம்.எம்.நயீம், தேசிய ஷூரா சபையின் உப­த­லைவர் ரீஸா யஹ்யா, ஜமா­அதே இஸ்­லா­மியின் முன்னாள் அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் ஆகியோர் தமது கருத்­துக்­களை முன்­வைத்­தனர்.

கருத்­த­ரங்கின் அடுத்த முக்­கிய நிகழ்­வாக கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது. வரு­கை­தந்த பிர­மு­கர்கள் ஐந்து குழுக்­க­ளாகப் பிரிக்­கப்­பட்டு ஒவ்­வொரு குழு­வுக்கும் தனித்­த­னி­யான தலைப்­புகள் வழங்­கப்­பட்­டன. கலந்­து­ரை­யா­டலின் முடி­வு­களை தத்­த­மது குழுக்கள் சார்­பான பிர­தி­நி­திகள் முன்­வைத்­தனர்.

குறிப்­பிட்ட ஒரு தலைப்­போடு தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்ட கருத்­துக்­க­ளோடு சேர்க்­கப்­பட வேண்­டிய கருத்­துக்­களை இணைக்கும் வகையில் சபை­யி­லி­ருந்து சட்­டத்­த­ரணி பாரிஸ், கலா­நிதி ரவூப் ஸெய்ன், அஷ்ஷெய்க் ஆஸாத், ஜாமிஆ நளீ­மிய்யா விரி­வு­ரை­யா­ளரும் அதன் இஸ்­லா­மிய கற்­கை­கள்­பீட தலை­வ­ரு­மான அஷ்ஷெய்க் ஸீ.ஐயூப் அலி ஆகியோர் கருத்­துக்­களை பரி­மா­றினர். இந்தக் கலந்­து­ரை­யா­டலை இஸ்­மாயில் அஸீஸ் நடாத்­தி­வைத்தார்.

இந்த முன்­னெ­டுப்பு காலத்தின் அவ­சியத் தேவை­யென்றும் தேசிய ஷூரா சபை மேற்­கொண்ட மிக முக்­கி­ய­மான இந்தப் பணிக்கு தம்­மா­லான சகல ஒத்­து­ழைப்­பு­க­ளையும் தாம் வழங்கத் தயா­ராக இருப்­ப­தா­கவும் சபையோர் தெரி­வித்­தனர். இது இலங்கை முஸ்­லிம்­க­ளது வர­லாற்றில் குறிப்­பி­டத்­தக்க ஒரு மைல்கல், திருப்­பு­முனை என்றும், ஆனால் தொடர்ந்து செயற்­ப­டு­வதே முக்­கி­ய­மா­னது என்றும் அவர்கள் மேலும் தெரி­வித்­தனர்.

கடந்த காலங்­களில் சில விட­யங்­களில் நாம் கவ­ன­மெ­டுக்கத் தவ­றி­விட்டோம். அத­னு­டைய விளை­வு­க­ளைத்தான் நாம் இப்­போது அனு­ப­விக்­கிறோம்.

தஃவாமற்றும் சீர்­தி­ருத்தப் பணி­களில் பிரத்­தி­யே­க­மான, இலங்கை சூழ­லுக்­கே­யு­ரிய தேவை­களும் முன்­னு­ரி­மை­களும் இருக்­கின்­றன. வெளி­நா­டு­களில் உள்ள முறை­மைகள் எமது சூழ­லுக்கு உசி­த­மா­ன­வை­யல்ல. இந்த நாட்­டி­லுள்ள சகல இனங்­க­ளது மனப்­பாங்­குகள், உணர்­வுகள் என்­பன மதிக்­கப்­பட்டு, புரி­யப்­பட்ட நிலை­யில்தான் எமது செயற்­பா­டுகள் அமைய வேண்டும். நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பவும் இனங்­க­ளுக்­கி­டையில் சமா­தான, சக­வாழ்வை நிலை­நி­றுத்­தவும் தஃவா பொறி­மு­றைகள் வகுக்­கப்­பட வேண்டும். சில இளை­ஞர்கள் தீவி­ர­வாத கடும்­போக்கு நிலை­க­ளுக்கு போயி­ருப்­பதை கவ­னத்தில் எடுத்து எதிர்­காலப் பரம்­ப­ரையை இஸ்­லாத்தின் மித­வாத, ‘வஸ­திய்யா’ எனப்­படும் நடு­நிலைச் சிந்­த­னையில் வளர்த்­தெ­டுக்க முயற்­சிகள் செய்­யப்­பட வேண்டும். இஸ்­லா­மிய சமூ­கத்தைச் சேர்ந்த சில அமைப்­பு­க­ளுக்கு இடையில் நிலவும் முரண்­பா­டுகள் முஸ்லிம் சமூ­கத்தின் இந்த நிர்க்­க­தி­யான நிலைக்கு மற்­று­மொரு கார­ண­மாகும். இயக்கவெறி எம்மை மிக அதி­க­மாகப் பல­வீ­னப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. எனவே, இந்த மோதல்கள் நிறுத்­தப்­பட்டு உடன்­பாட்­டுக்கு நாம் வர­வேண்டும்.

பரஸ்­பர புரிந்­து­ணர்­வு­டனும் விட்டுக் கொடுப்­போடும் இயக்­கங்­களும் இயக்க உறுப்­பி­னர்­களும் நடந்­து­கொள்­ள­வேண்டும். தஃவா­வு­க்கான தனி­யான ஒரு கவுன்சில் அமைக்­கப்­பட்டு தஃவா மற்றும் சீர்­தி­ருத்த செயற்­பா­டுகள் ஒன்­றி­ணைக்­கப்­பட்டு நெறிப்­ப­டுத்­தப்­பட வேண்டும். தஃவாத் துறையில் ஈடு­ப­டு­ப­வர்கள் உரிய முறையில் பயிற்­று­விக்­கப்­பட்ட பின்­னரே தஃவா செய்ய அனு­ம­திக்­கப்­பட வேண்டும். மத்­ர­ஸாக்­க­ளது பாடத்­திட்­டங்­களில் கால சூழ­லுக்கும் தஃவாப் பணி­க­ளது தேவை­க­ளுக்கும் ஏற்ப நியா­ய­மான மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் போன்ற கருத்­துக்கள் சபையில் பரி­மா­றப்­பட்டு அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டன.

அகில இலங்கை ஜம்­இ­யதுல் உலமா, தரீக்­காக்கள், தவ்ஹீத் அமைப்­புகள், ஜமா­அதுஸ் ஸலாமா, ஜமா­அதே இஸ்­லாமி, ஸீ.ஐ.எஸ், ஷபாப் போன்ற இன்­னோ­ரன்ன அமைப்­புக்­களைச் சேர்ந்­த­வர்கள், நாட்டின் பல பாகங்­க­ளையும் சேர்ந்த தாஈக்கள், தேசிய ஷூரா சபையின் நிறை­வேற்று மற்றும் செயற்­குழு உறுப்­பி­னர்கள் புத்­தி­ஜீ­விகள் என பலரும் இந்­நி­கழ்வில் கலந்து கொண்­டனர்.

இறுதி நிகழ்ச்­சி­யாக தேசிய ஷூரா சபையின் பொரு­ளாளர் அஷ்ஷெய்க் ஸியாத் இப்­ராஹீம் (கபூரி) நன்­றி­யுரை நிகழ்த்­தினார்.

நிகழ்வின் இறு­தியில் எட்­டுப்பேர் கொண்ட ஒரு குழு­வினர் தேசிய ஷூரா சபையின் தஃவா­வுக்­கான உப­கு­ழு­வுடன் இணைந்து எதிர்­கா­லத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டனர்.

பிரகடனமொன்றும் வெளியிடப்பட்டது. அதன் விபரமாவது: இலங்கையில் இஸ்லாத்தையும் அதன் போதனைகளையும் மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் எடுக்கப்பட்ட கடந்தகால முயற்சிகள் அனைத்தும் மதிக்கப்பட வேண்டும்.

பிற மதங்களை, இனங்களைச் சேர்ந்தவர்களது உணர்வுகள், கலாசாரங்கள் என்பவற்றை மதிப்பதோடு தேசிய நலனுக்கான மூலோபாயத்திட்டங்கள் வகுக்கப்பட்டு அவற்றை செயற்படுத்துவதற்கான ஒரு கூட்டுமுயற்சி அவசியமாகும்.

பலவிதமான தஃவா நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இலங்கையில் இஸ்லாத்தை பாதுகாப்பதற்கும் வளர்ப்பதற்குமாக தமக்கிடையே பரஸ்பர மரியாதையுடனும் ஒற்றுமையுடனும் பொதுவான வழிகாட்டுதல்களில் ஒருமித்த நிலைக்கு வர வேண்டும்.-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top