கொவிட் 19 ஊர்மட்ட செயலணிகளும் நிபுணத்துவ ஆலோசனைகளும்

COVID19

ஊர்மட்ட கொவிட் 19 தடுப்பு செயலணிகளை அமைத்து அவற்றிற்கு தேவையான வழிகாட்டல்களை, நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதனை தலைசிறந்த வைத்திய அதிகாரிகளின் நெறியாள்கையுடன் தேசிய ஷூரா சபை பல சமூக நிறுவனங்களுடன் இணைந்து நாடளாவிய ரீதியாக மேற்கொண்டு வருவதனை அறிவீர்கள்.

குறிப்பாக; தற்பொழுது வீடுகளில் தனிமைப்படுத்தல் பராமரிப்பு, மரணங்கள் நிகழும் பொழுதுள்ள நடைமுறைகள், வழிகாட்டல்கள் என்பவற்றை தேசிய ஷூரா சபையின் கொவிட் 19 தடுப்புச் செயலணி நிகழ்நிலை பயிற்றுவிப்புக்களூடாக வழங்கி வருகிறது.
டெல்டா திரிபு வைரஸ் அதிதீவிரமாக பரவும் இக்கால கட்டத்தில் அரச யந்திரத்திற்கு பக்கபலமாக தேசிய ஷூரா சபை மேற்கொள்ளும் விழிப்புணர்வு செயற்திட்டத்தால் பயன்பெற விரும்பும் ஊர்கள், நகர்கள், மஸ்ஜித் நிர்வாகங்கள் ஷூரா சபையின் தேசிய செயலணியுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்புகளுக்கு:
0773 950 466
0766 2704 70
ஊடகப் பிரிவு
தேசிய ஷூரா சபை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top