The executive committee of the National Shoora Council (NSC) Wednesday decided to urge countries worldwide including the 57-member Organization of Islamic Cooperation (OIC) headquartered in Jeddah Saudi Arabia to make and encourage direct investments in Sri Lanka in agriculture, dairy farming, fisheries, and housing projects preferably in collaboration with existing Sri Lankan developers.
NSC’s newly elected head M M Zuhair, President’s Counsel stated that prospective private sector investors should be supported to make direct investments in Sri Lanka through the Board of Investments (BOI) and that the NSC, a non-profit civil society, would facilitate in the national interest collaboration with existing Sri Lankan companies of repute across the board. Government-level investments could be facilitated to discuss investments at government to government level, an NSC media release said.
NSC would also urge the government to create an attractive environment to encourage investments in the island nation, presently affected by high electricity and labor costs. The civil society organization has decided to suggest that the country’s President visit Riyadh and invite Saudi government investments in Sri Lanka and also meet with the heads of the OIC and other high-profile entities. These are necessary to encourage closer cooperation to support the country’s efforts to develop and overcome the hitherto critical economic sectors. That would help other Middle Eastern countries too to come in, the NSC release said.
Sri Lanka presently receives annually the highest foreign exchange earnings from mainly the Middle East, with employment remittances topping US $ 6.58 billion in 2024, without any debt constraints, while the highest volume of remittances came last year from Kuwait, UAE, Saudi Arabia, and Qatar!
Merchandise exports meanwhile earned US $12.78 billion as against imports costing US $ 18.84 billion in 2024 adding a foreign exchange liability of US $ 6.06 in the import-export sector. Tourism brought in US $ 3.17 billion while IT earnings were US $ (point).85billion in 2024.
Progressive sectors of the country should presently support genuine governmental efforts to overcome the economic sector bottlenecks and help achieve self-sufficiency and higher export targets, the NSC President has said. (End)
ශ්රී ලංකාවේ විදේශ ආයෝජන සඳහා සහාය දෙන ලෙස ජාතික ශුරා සභාව ඉල්ලා සිටී!
දැනට සිටින ශ්රී ලාංකික ආයෝජකයින් සමඟ සහයෝගයෙන්, ශ්රී ලංකාවේ කෘෂිකර්මාන්තය, කිරි කර්මාන්තය, ධීවර සහ නිවාස ව්යාපෘති සඳහා ශ්රී ලංකාවේ සෘජු ආයෝජන සිදු කිරීමට සහ දිරිමත් කරන ලෙස සෞදි අරාබියේ ජෙඩාහි මූලස්ථානය පිහිටි සාමාජිකයින් 57 දෙනෙකුගෙන් යුත් ඉස්ලාමීය සහයෝගිතා සංවිධානය (OIC) ඇතුළු ලොව පුරා රටවල්වලින් ඉල්ලා සිටීමට ජාතික ෂූරා සභාවේ (NSC)විධායක කමිටුව බදාදා තීරණය කළේය.
ආයෝජන මණ්ඩලය (BOI) හරහා ශ්රී ලංකාවේ සෘජු ආයෝජන සිදුකිරීමට පෞද්ගලික අංශයේ ආයෝජකයින්ට සහය දිය යුතු බවත්, ලාභ නොලබන සිවිල් සමාජ සංවිධානයක් වන ජාතික ශුරා සභාව, ජාතික අවශ්යතාවක් ලෙස සලකා දැනට ශ්රී ලංකාවේ කීර්තිමත් සමාගම් සමඟ මේ සම්බන්ධයෙන් සාකච්ඡා කරන බවත් ජාතික ශුරා සභාවේ අභිනවයෙන් තේරී පත් වූ ප්රධානී ජනාධිපති නීතිඥ එම් එම් සුහයිර් ප්රකාශ කළේය. රජයේ මට්ටමේ ආයෝජන රජයේ මට්ටමින් සාකච්ඡා කිරීමට පහසුකම් සැලසිය හැකි බව ජාතික ශුරා සභාව මාධ්ය නිවේදනයක් නිකුත් කරමින් පැවසීය.
දැනට අධික විදුලිබල හා ශ්රම පිරිවැය හේතුවෙන් බලපෑමට ලක්ව ඇති දිවයිනේ ආයෝජන දිරිගැන්වීම සඳහා ආකර්ශනීය පරිසරයක් නිර්මාණය කරන ලෙස ජාතික ශුරා සභාව රජයෙන් ඉල්ලා සිටී. රටේ ජනාධිපතිවරයා රියාද් වෙත ගොස් ශ්රී ලංකාවේ ආයෝජන සලකා බලන ලෙස සෞදි රජයට ආරාධනා කළ යුතු බවට යෝජනා කිරීමට සිවිල් සමාජ සංවිධානය තීරණය කර තිබේ. ජනාධිපතිවරයා ඉස්ලාමීය සහයෝගිතා සංවිධානය ඇතුළු ඉහළ පෙළේ ආයතනවල ප්රධානීන් ද හමුවීම වැදගත් ය. තීරනාත්මක ආර්ථික අංශ සංවර්ධනය කිරීමට රට දරන ප්රයත්නයන්ට සහාය වීම සඳහා ආයෝජකයින් සමඟ සමීප සහයෝගීතාව දිරිමත් කිරීම සඳහා මේවා අවශ්ය වේ. එය අනෙකුත් මැද පෙරදිග රටවලට ද මෙහි ආයෝජන සලකා බැලීමට උපකාරී වනු ඇති බව ජාතික ශුරා සභාව නිවේදනයෙන් පැවසීය.
ශ්රී ලංකාව දැනට වාර්ෂිකව ඉහළම විදේශ විනිමය ඉපැයීම ප්රධාන වශයෙන් මැදපෙරදිගින් ලබන අතර, රැකියා ප්රේෂණ 2024 දී ඇමෙරිකානු ඩොලර් බිලියන 6.58 ඉක්මවයි. මෙය කිසිදු ණය බරකින් තොරවය. පසුගිය වසරේ වැඩිම ප්රේෂණ ප්රමාණයක් පැමිණ ඇත්තේ කුවේට්, එක්සත් අරාබි එමීර් රාජ්යය, සෞදි අරාබිය සහ කටාර් යන රටවලින්ය!
இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளைச் செய்யும் படி தேசிய ஷூரா சபை (NSC) அழைப்பு
சவுதி அரேபியாவின் ஜித்தாவை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் 57 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) உட்பட உலகளாவிய நாடுகளை, இலங்கையின் விவசாயம், பால் பண்ணை, மீன்பிடி மற்றும் வீடமைப்பு திட்டங்களில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளுமாறும், அபிவிருத்திப் பணிகளில் ஏலவே ஈடுபட்டுக் கொண்டிருக்கும் உள்நாட்டைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து முதலீடுகளை ஊக்குவிக்குமாறும் வேண்டிக்கொள்வது என புதன்கிழமை நடைபெற்ற தேசிய ஷூரா சபையின் (NSC) நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டு சபையின் (BOI) ஊடாக தனியார் முதலீட்டாளர்களுக்கு நேரடி முதலீடுகளைச் செய்வதற்கான ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என தேசிய ஷூரா சபையின் புதிய தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். ஸுஹைர் குறிப்பிட்டதாக தேசிய ஷூரா சபையின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலாப நோக்கற்ற சிவில் அமைப்பான தேசிய ஷூரா சபையானது தேசிய நலனைக் கருத்திற் கொண்டு இலங்கை முதலீட்டு சபை (BOI) ஊடாக இலங்கையின் சிறந்த நிறுவனங்களுடன் ஒத்துழைக்க முடியும். அரச மட்டங்களிலான முதலீட்டு முயற்சிகளைப் பொறுத்தவரையில் அரசாங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதிக மின்சாரப் பாவனை மற்றும் தொழிலாளர் செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தேசத்தை நோக்கி முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக கவர்ச்சிகரமான சூழலை உருவாக்குமாறும் தேசிய ஷுரா சபை அரசாங்கத்தை கோருகிறது.
தற்போது நெருக்கடியான நிலையில் உள்ள பொருளாதாரத் துறையை அபிவிருத்தி செய்து, அதனைத் தாண்டிச் செல்வதற்காக இலங்கை எடுக்கும் இப்படியான முயற்சிகளை ஊக்குவிப்பது அவசியமாகும். இது ஏனைய மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை நோக்கி வருவதற்கு உதவும் என்றும் ஷுரா சபையின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தற்போது வெளிநாட்டு செலாவணி வருவாயில் அதிகமான பகுதியை மத்திய கிழக்கிலிருந்து பெறுகிறது. 2024ஆம் ஆண்டில் வேலை வாய்ப்பு தொடர்பான பணப் பரிமாற்றங்கள் 6.58 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளன. இதில் அதிகளவான பணப்பரிமாற்றங்கள் குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் கட்டார் நாடுகளில் இருந்தே கிடைத்துள்ளன.
2024 ஆம் ஆண்டில் இலங்கை வணிகப் பொருட்கள் ஏற்றுமதி மூலம் 12.78 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது. எனினும் அதே வருடம் 18.84 பில்லியன் அமெரிக்க டொலர்களை இறக்குமதிகளுக்கு செலவு செய்துள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி-இறக்குமதியில் 6.06 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அந்நியச் செலவாணியை குறை நிரப்ப வேண்டியுள்ளது. மேலும் சுற்றுலாத்துறையின் மூலம் 3.17 பில்லியன் அமெரிக்க டொலர்களும், தகவல் தொழிநுட்பம் (ஐவு) மூலம் 850 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வருமானமாகக் கிடைக்கப் பெற்றுள்ளன.
தற்போது பொருளாதாரத் துறையின் இடையூறுகளைச் சமாளித்து, தன்னிறைவு மற்றும் அதிக ஏற்றுமதி இலக்குகளை அடைவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் காத்திரமான முயற்சிகளுக்கு நாட்டின் முற்போக்கான துறைகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் ஷுரா சபையின் தலைவர் தெரிவித்துள்ளதாக ஷுரா சபையின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.