NSC Delegation Holds Dialogue with Ruling Party Muslim MPs

npp

A delegation from the National Shoora Council (NSC) held a constructive meeting with the Muslim Members of Parliament representing the ruling party on Tuesday, 20th May 2025, in Colombo.

The ruling party MPs included Deputy Speaker Dr Rizvie Salih, Deputy Minister of National Integration Sh. Muneer Mulaffer and all the ruling party Muslim MPs.

The delegation, led by NSC President M.M. Zuhair PC, included ten executive committee members of the NSC who expressed sincere appreciation for the opportunity to engage in dialogue and conveyed the concerns and aspirations of the Muslim community, particularly in the current socio-political climate. The meeting addressed several key national issues, including human rights, legislative reform, and the protection of minority interests.

The delegation highlighted the deepening concerns within the Muslim community over the absence of Muslim representation in the national Cabinet, which serves as the country’s key decision-making body. They noted that this exclusion has become the subject of serious and critical reflection within the community and stressed the urgent need to address it through inclusive governance. The NSC delegation also highlighted several other issues of concern.

Further, the NSC delegation reaffirmed the Muslim community’s unwavering commitment to national unity and territorial integrity, emphasizing that Sri Lankan Muslims have never supported extremist, separatist, or divisive movements but have been time and again victimized by anti-Muslim racial conflicts. They also drew attention to the long-standing suffering of Muslims in the Northern and Eastern Provinces due to past ethnic conflicts and displacement, underscoring the need for continued attention and redress.

In a spirit of cooperation and national development, the NSC expressed its willingness to facilitate wider consultations with key segments and organizations within the Muslim community. This initiative aims to contribute meaningfully to the country’s progress while also working towards resolving specific concerns affecting the community.

The discussion was cordial, productive, and considered beneficial for the community and the country, enabling an opportunity to present some of the issues of concern that need to be resolved by the government. The NSC commended the MPs for their receptiveness and commitment to addressing community concerns through democratic and consultative approaches.

The National Shoora Council looks forward to continued engagement with policymakers and stakeholders and remains committed to promoting unity, justice, and inclusive national development.

(SGD) Rasheed M Imthiyaz, Attorney at Law
General Secretary NSC

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஷூரா சபையின் சந்திப்பு

ஊடக அறிக்கை

ஆளும் கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய ஷூரா சபை (NSC) யின் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த 2025 மே 20ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் சந்தித்து பல்வேறு தேசிய மற்றும் முஸ்லிம் சமூக விடயங்களை கலந்துரையாடியது.

இந்த சந்திப்பில் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி ஸாலிஹ் (கொழும்பு மாவட்டம்), தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் கௌரவ அஷ்ஷைக் முனீர் முளப்பர் (கம்பஹா மாவட்டம்), ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவத்துக்குரிய முஹம்மது அஸ்லம் (குருணாகல் மாவட்டம்), முஹம்மட் பஸ்மின் (கண்டி மாவட்டம்), முஹம்மது பைசல் (புத்தளம் மாவட்டம்), ரியாஸ் பாருக் (கண்டி மாவட்டம்), அர்கம் இல்யாஸ் (மாத்தறை மாவட்டம்) மற்றும் அபூபக்கர் அதம்பாவா (தேசிய பட்டியல்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய ஷுரா சபையின் சார்பில் அதன் தேசியத் தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் ,முன்னாள் தலைவர் அஷ்ஷைக் எம்.எச்.எம்.பளீல், உப தலைவர்களான டாக்டர் மரீனா ரிபாய் , சட்டத்தரணி நத்வி பஹாவுத்தீன், செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், பேராசிரியர் எஸ்.எம்.ஷிபா, விரிவுரையாளர் எம்.எ.எம். ஹகீம் அபூபக்கர், உப செயலாளர் பர்சான் ராசிக், பொருளாளர் அனஸ் அஸீஸ், உப பொருளாளர் நுஹ்மான், மற்றும் முன்னாள் உபதலைவர் எம்.எச்.எம். ஹஸன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஷூரா சபையானது, இலங்கை முஸ்லிம்களுக்கிடையிலான ஐக்கியத்தை நிலைநாட்டுவது, முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பது, முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாத சமூகங்களுக்கும் இடையிலான நட்புறவை வளர்ப்பது, தேசத்தை கட்டி எழுப்புவது ஆகிய பிரதான குறிக்கோள்களை மையப்படுத்தியே செயல்படுவதாகவும் மற்றும் தேசிய ஷூரா சபையின் நோக்கங்கள் பற்றியும் தேசிய ஷூரா சபையின் முன்னால் தலைவர் அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம்.பளீல் எடுத்துரைத்தார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் கவலைகளையும் எதிர்பார்ப்புகளையும்  சபையின் குழுவினர் முன்வைத்தனர். இந்த சந்திப்பில் மனித உரிமைகள்,யாப்புத் திருத்தங்கள்  மற்றும் சிறுபான்மையினரின்  பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கியமான தேசிய விடயங்கள் ஆராயப்பட்டன.

நாட்டுடன் தொடர்பான அதிமுக்கிய தீர்மானங்களை எடுக்கும் மன்றமாகிய அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பதானது முஸ்லிம் சமூகத்தில் விவாதப் பொருளாக மாறியிருப்பது பற்றியும் முஸ்லிம் சமூகம் அது தொடர்பாக அதிருப்தியோடு இருப்பது பற்றியும் இந்த விவகாரத்தை உரிய முறையில் கையாளுவதற்கு அரசு பொருத்தமான அணுகு முறையை கையாள வேண்டும் என்றும் ஷூரா சபையின் குழு தெரிவித்தது.

மேலும், தேசிய ஒற்றுமை,தேசத்தின் இறையாண்மை என்பன தொடர்பாக முஸ்லிம் சமூகம் கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டை இந்த சந்திப்பில் ஷூரா

உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர். பிரிவினைவாத, தீவிரவாத இயக்கங்களை முஸ்லிம் சமூகம் எப்போதும் ஆதரிக்கவில்லை என்றும், ஆனால், முஸ்லிம்கள் அடிக்கடி இனவாதால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டதுடன் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் இடம்பெயர்வு மற்றும் போரின் போது ஏற்பட்டுள்ள பாரிய இழப்புகளை அரசாங்கம் கவனிக்க வேண்டும் என்பதையும் குழுவினர் வலியுறுத்தினர்.

அரசாங்கத்துடன்  தொடர்ந்து கலந்துரையாடுவதற்கும், தேசிய ஒற்றுமை, நீதியின் ஆட்சி என்பவற்றின் முன்னேற்றத்திற்காக உறுதியாக செயல்படுவதற்கும் தேசிய ஷுரா சபை தயாராக இருக்கிறது என்றும் குழு தெரிவித்தது.இலங்கை தேசம் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்கு இஸ்லாமிய நாடுகளது முதலீட்டு முயற்சிகள் மென்மேலும் அதிகரிக்கப்படுவதற்கான முன்மொழிவை அரசாங்கத்திற்கு தேசிய ஷூரா சபை ஏற்கனவே முன்வைத்திருப்பதை நினைவூட்டிய குழுவினர்  தேசத்தின் நலனில் ஷூரா சபைக்கு இருக்கும்  அக்கறையை இதன் ஊடாக வெளிப்படுவதாகவும் தெரிவித்தனர்

இதற்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா அவர்ளை ஷுரா சபையின் பிரதிநிதிகள் சந்தித்து முஸ்லிம் சமூகத்துடனும் நாட்டின் அபிவிருத்தியுடனும் தொடர்பான 27 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்து கலந்துரையாடல் நடாத்திய சந்தர்ப்பத்தை பிரதிநிதிகள் நினைவூட்டினர்.

பாராளுமன்ற அமர்வுகளின் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரைகளை நிகழ்த்தவும் கலந்துரையாடல்களைச் செய்யவும் முஸ்லிம் சமூகம் தொடர்பான தேவையான புள்ளி விபரங்களையும் தரவுகளையும் தயாரித்து தருவதற்கான தயார் நிலையில் தேசிய ஷுரா சபை இருப்பதனையும் தேவைப்பட்டால் அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஷுரா சபையை அணுக முடியும் என்றும் குறிப்பிடப்பட்டது.

சிநேகபூர்வமானதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். முஸ்லிம் சமூகத்திற்கும், நாட்டிற்கும் நன்மை பயக்கும் வகையில் முக்கிய விடயங்களை அரசாங்கத்தின் பிரதிநிதிகளது கவனத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பாகவும் இச்சந்திப்பு அமைந்தது.

இந்த சந்திப்புக்கான வாய்ப்பை தந்மைக்காக வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது நன்றியை தெரிவித்ததுடன் இப்படியான ஒரு சந்திப்பு தமக்கு சந்தோஷத்தை தருவதாகக்  கூறியதுடன் தொடர்ந்தும் ஷூரா சபையோடு கலந்தாலோசனைகளை மேற்கொள்வதற்கும் அபிப்பிராயங்களை திரட்டுவதற்கும் தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார்கள்.

அவர்கள் வகிக்கும் பதவியானது அல்லாஹ்விடத்தில் பதில் சொல்ல வேண்டிய ஓர் அமானிதம் என்று தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகள் குழுவால்  நினைவூட்டப்பட்டதுடன் அவர்கள் தமது பொறுப்புகளில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்றும் இறுதியில் வேண்டப்பட்டனர்.

ரஷீத் எம். இம்தியாஸ்சட்டத்தரணி

பொதுச் செயலாளர், தேசிய ஷுரா சபை

Scroll to Top