தடுப்பூசி (Vaccination) மூலமான நோய்த்தடுப்பு முறை சம்பந்தமாக மருத்துத் துறையின் நிலைப்பாடு, மற்றும் இஸ்லாத்தின் அங்கீகாரம் என்பன பற்றி சமூகத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பாக தேசிய ஷூரா சபையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பில் ஆராயவென தேசிய சூறா சபையினால் அதன் தலைவர் தாரிக் மஹ்மூத் அவர்களது தலைமையில் விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. அக்குழுவினர் தேசிய ஷூரா சபையிலுள்ள உலமாக்கள், பேராசிரியர் ரிஸ்வி ஷரீப் தலைமையிலான வைத்திய நிபுணர்கள், செரண்டிப் வைத்தியர்கள் மன்றத்தின் பிரதிநிதிகள் ஆகியோருடன் 30.12.2017 அன்று ஆலோசனை அமர்வொன்றை நடாத்தினர்.அதன் போது பகிரப்பட்ட கருதுக்களின் வெளிச்சத்தில் இந்த வழிகாட்டல் தயாரிப்பட்டுள்ளது.
அந்த கலந்துரையாடலில் பின்வருவோர் கலந்து கொண்டனர்:-
- Vidya Jyothi, Prof. M.H.Rezvi Sheriff, FRCP(Lon), FRCP (Edin),FRACP, FCCP, FSLCGP,FNASS.Consultant Physician.
- Dr. M.R.Anver, MBBS (CMB), MD (CMB), FRCP (Lon),FCCP Consultant Physician.
- Dr. S.F.L. Akbar, MBBS, MS,MMSOG, SCOD,FRSOG, Senior Consultant, Obstetrics and Gynaecology.
- Dr. Hashir Ariff, MBBS(Lon), DCH(UK), CCST(UK), FRCPCH(UK), Consultant Paediatrician
- Dr. Mohammed Rishard, MBBS, MD(O&G), MRCOG(UK), Consultant Obstetrician and Gynaecologist, Senior lecturer, Faculty of Medicine, University of Colombo.
- Dr. MHM Ameen Izzath, MBBS, DLM, MD. in Forensic Medicine Senior Registrar in forensic medicine GH Kandy.
- Dr. M.H.M.Naseem MD (Villa Clara-Cuba), MSc (Disaster Management) University of Peradeniya- Sri Lanka Medical officer of Health-Udapalatha, Gampola
- Dr. M.G.Saiful Islam, MBBS (Cey), M.Sc. (Nutrition). Gen. Practitioner
- Dr. W.M.Asmir, MBBS (SL) Reading PG, Dip. in Microbiology
- Dr. M.A.Abdul Rakeesthu, MBBS, CCA Gen. Practitioner
- Dr. Ahmed Shiyam, MBBS
- J.Tariq Mahmud – President, NSC
- Sheikh S.H.M.Faleel (Naleemi) -Vice President, NSC
- Riza Yehya – Vice President, NSC
- Eng. Mafeel Farook – AGS, NSC
- Sheikh Ziyard Ibrahim (Ghafoori) – Treasurer, NSC
- Moulavi Thasleem(Bari)- ExCo Member, NSC
- Rasheed M.Imthiyaz – ExCo Member, NSC
- M.T.Thahasim – ExCo Member, NSC
சுத்தமானதும் சுகாதாரமானதுமான நடத்தைகள் மூலம் நோய் மற்றும் உடல்நலக் குறைவிலிருந்து தனிமனிதர்களையும் சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு அல்குர்ஆனும் சுன்னாவும் சிறந்த முறையில் வகுத்துத் தந்துள்ள கருத்துக்களை இந்த வழிகாட்டல் உள்ளடக்கியிருக்கிறது.
அதேவேளை தடுப்பூசியினூடாக நோயெதிர்க்கும் நவீன முறை,கடந்த 200 வருடங்களுக்கு மேலாக தவிர்க்கக் கூடிய நோய் (Preventable diseases) களினால் பீடிக்கப்படுவதிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கி வருகிறது.
இஸ்லாமிய உம்மத்தின் மார்க்க அறிஞர்கள், சட்டவல்லுநர்கள், மருத்துவர்கள் போன்றோர் தடுப்பூசி மூலமாக இத்தகைய நோயெதிர்ப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுவது மருத்துவ ரீதியாகப் பயனுடையது எனவும், மார்க்க ரீதியாக அனுமதிக்கப்பட்டது எனவும் சுட்டிக் காட்டியுள்ள விடயங்கள் இந்த வழிகாட்டலில் அடங்கியுள்ளன.
ஒரு சமூகம் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் அலட்சியம் காட்டுமானால் அந்த சமூகத்தில் இருக்கும் தனிநபர்களால் அந்த சமூகத்துக்கும் அந்த சமூகத்தால் அங்கிருக்கும் தனிநபர்களுக்கும் தீங்குகள் நிகழும் என்று மருத்துவ உலகில் நிறுவப்பட்ட உண்மைகள் மூலமும் ஊர்ஜிதம் செய்ய முடியும் என அன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. எனவே, அப்படியான ஒரு சூழ்நிலை உருவாகாமலிருக்க தடுபூசி ஏற்றிக்கொள்ளும் படி தேசிய சூறா சபை ஆலோசனை வழங்குகிறது.
பெற்றோர் பிள்ளைகளுக்கு தடுபூசி ஏற்றத் தவறுவது அந்தப் பிள்ளைகளது வாழ்வை அதிகம் பாதிக்கும்.ஆனால்,பிள்ளைகளை நல்ல முறையில் பராமரிக்கும்படி அல்குர்ஆன் வலியுறுத்துவதோடு, இதனை அலட்சியப்படுத்தும் பெற்றோரையும் கண்டிக்கிறது.” எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை.(அல்அன்ஆம்:140) அந்த வகையில் தனது தனது பிள்ளைகளதும் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதும் நோயிலிருந்து பாதுகாப்புப் பெறுவதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் பொறுப்பாகும்.
தடுப்பூசி மூலம் நோயெதிர்ப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஆதரவான மார்க்க ரீதியான அனுமதி மற்றும் மருத்துவ ரீதியான அங்கீகாரம் ஆகியவற்றை பின்வரும் வழிகாட்டுதல்கள் நிறுவுகின்றன:
இஸ்லாமிய நோக்கு
தடுப்பூசி மூலமான நோயெதிர்ப்புச் செயற்பாடு இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை பின்வரும் வசனங்களது கருத்துக்கள் உணர்த்துகின்றன.
அல்குர்ஆன்:
“… இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். (5: 32)
எனவே, நோயெதிர்ப்பைச் செய்யாமல் விடுவதன் மூலம் ஓர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது பாரதூரமான குற்றம் என்பதை இவ்வசனம் உணர்த்துகிறது.
அல்ஹதீஸ்:
“அல்லாஹ் எந்தவொரு நோயையும் அதற்கான நிவாரணியுனடன்றி இறக்கிவைக்கவில்லை.”(ஸஹீஹ் அல்-புகாரி-5678)
எனவே, நோய் வந்த பின்னர் அதற்கான மருந்தை எடுப்பது போலவே அந்த நோய் வராமலிருக்க தக்க மருந்தை எடுக்க முடியும்.தடுப்பூசியை அப்படியான ஒரு மருந்தாகக் கருத முடியும்.
முன்னெச்சரிக்கை :
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
1.”நீ சிங்கத்திடமிருந்து வெருண்டோடுவதைப் போல குஷ்டரோகியிடமிருந்து விலகி ஓடுவாயாக!.(ஸஹீஹ் அல்புகாரி-5707)
2.”ஒரு பிரதேசத்தில் கொள்ளை நோய் இருப்பது குறித்து நீங்கள் கேள்விப்பட்டால், அங்கு பிரவேசிக்காதீர்கள்; நீங்கள் அதில் இருக்கின்ற சமயத்திலே அந்த நோய் ஏற்பட்டிருந்தால், அங்கிருந்து போகாதீர்கள்.” (ஸஹீஹ் அல்புகாரி-624)
3.”நோயால் பாதிக்கப்பட்ட (ஆடுகள், பசுக்கள், ஒட்டகங்கள் போன்ற) கால்நடைகளை ஆரோக்கியமான கால்நடைகள் இருக்கும் இடத்துக்கு நீங்கள் ஒரு போதும் கொண்டுவர வேண்டாம்.”(ஸஹீஹ் அல்புகாரி 5770)
என்ற இந்த நபி மொழி ஆரோக்கியமான நபருடன் நோயாளியை வைக்கலாகாது என்ற கருத்தை தருவதுடன் நோய்வருமுன் காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வண்டியதன் அவசியத்தையும் கடுமையாக வலியுறுத்துகிறது.’ஒருபோதும் அப்படி செய்ய வேண்டாம்’ என்ற கருத்தைத் தரும் “லா யூரிதன்ன” என்ற சொல்லை நபி(ஸல்)இங்கு பிரயோகித்திருக்கிறார்கள்.
இஸ்லாமிய மற்றும் மருத்துவ நிபுணர்களின் பார்வை
பல நவீன கால இஸ்லாமிய சிந்தனயாளர்களது கருத்துப்படி தடுப்பூசி அனுமதிக்கப்படுகிறது.சட்ட வல்லுநர்கள் கூட மாகாஸித் அல்-ஷரீஆ எனப்படும் இஸ்லாமிய சட்டத்தின் ஐந்து நோக்கங்களை தடுப்பூசி பூர்த்தி செய்கின்றது என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.
1.மதத்தைப் பாதுகாத்தல் ( ஹிப்ஃஸ் அல்-தீன்)
2.வாழ்வைப் பாதுகாத்தல் (ஹிப்ஃஸ் அல்-நப்ஃஸ்)
3.சந்ததியைப் பாதுகாத்தல் (ஹிப்ஃஸ் அல்-நஸ்ல்)
4.அறிவாற்றலைப் பாதுகாத்தல் (ஹிப்ஃஸ் அல்-அக்ல்)
5.செல்வத்தைப் பாதுகாத்தல் (ஹிப்ஃஸ் அல்-மால்)
(http://www.vocfm.co.za/debate-religious-permissibility…
)
தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஏற்றுவதனை தாருல் இப்ஃதா அல் மிஸ்ரிய்யாஹ்,மஜ்மஉல்பிக்ஹில் இஸ்லாமி, https://fatwa.islamonline.net/11111
மலேசியாவின் தேசிய ஃபத்வா குழு போன்ற இஸ்லாமிய சட்ட பீடங்களும் ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ்,அஷ்ஷெய்க் கலாநிதி அலி ஜும்ஆ போன்ற பிரபலமான பல உலமக்களும் ஊக்கப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.முஹம்மத் அலி அல் பார் அவர்கள் ’அஹ்காம் அத்ததாவி வல் ஹாலாத் மய்ஊஸ் மின்ஹா வ களிய்யதி மௌதிர்ரஹ்மா’ என்ற தனது ஆய்வில் மக்களது சம்மதம் இல்லாமலேயே மக்களின் நலனுக்காக தடுப்பூசி ஏற்றுவதை கடமையாக்குகின்ற அதிகாரம் இஸ்லாமிய அதிகார பீடங்களுக்கு இருப்பதாக குறிப்பிடுகிறார்.
63318456- Vaccination-personal-choice-vs-public-interest.html).
https://www.youtube.com/watch?v=pSCDTqAKERQ
https://www.youtube.com/watch?v=0ex-dnra5PA
https://www.youtube.com/watch?v=2Aw8SP5lY8M
https://www.youtube.com/watch?v=ZE0pfgl1aAo
வேறு சில அறிஞர்களின் கருத்துக்கள்
1) சவூதி அரேபியாவின் முஃப்தி – ஷைக் அப்துல் அஸீஸ் பின் பாஸ் (ரஹ்) அவர்களிடம், நோய் ஒன்று ஏற்படுவதற்கு முன்னரே தடுப்பூசி போன்ற மருந்துகள் வழங்கப்படுவது தொடர்பான தீர்ப்பு என்ன என்பது தொடர்பில் கேட்கப்பட்டது.அதற்கு அவர், ”நோய் ஏற்படும் என்ற அச்சம் இருந்தால், அதற்கெதிராக நிவாரணம் பெற்றுக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை. ஏனென்றால் தொற்றுநோயோ அதற்குரிய காரணியோ தொடர்ந்தும் இருந்தால் அவை நோயை ஏற்படுத்த முடியும். ரஸூல் (ஸல்) அவர்களின் பின்வரும் ஸஹீஹான ஹதீஸின்படி, வரலாமென்று அஞ்சப்படுகின்ற நோயிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக மருத்துவம் செய்வதில் எந்தத் தவறுமில்லை.
“எவரொருவர் காலையில் மதீனாவின் ஏழு அஜ்வா பேரீச்சம்பழங்களை சாப்பிடுகிறாரோ,அவர் மந்திரங்கள் அல்லது விஷங்களால் எந்தவிதமான பாதிப்புக்குமுட்படமாட்டார். ( அல் புகாரி-5445, முஸ்லிம்-2047)
இது ஒரு பிரச்சினை ஏற்படுவதற்கு முன்னரே அதனை தடுத்துக்கொள்ளும் ஒரு முயற்சியாக இது அமைகின்றது. இந்த வகையில் நோய் பற்றிய அச்சத்தின் காரணமாக ஒருவர் தனது பிரதேசத்திலுள்ள தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக முன்கூட்டியே தடுப்பூசி ஏற்றிக் கொள்வது, அது ஒரு பாதுகாப்பு முயற்சி என்ற வகையில், பிழையானதல்ல. (அஷ்ஷெய்க் இப்னு பாஸ் அவர்களின் பத்வா,6/21,20276; குழந்தைப் பருவ நோய் தடுப்பு மற்றும் தடுப்பூசிகளை வழங்குதல் தொடர்பாக தீர்ப்பு வழங்குதல், பிரசுரிக்கப்பட்ட திகதி; 2003-03-11) https://islamqa.info/en/20276
).
2) முஃப்தி ஸுஹைல் இப்னு ஆரிஃப், அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள தாருல் இஃப்தாவின் உதவியாளர், எதிர்கால நோய்கள் அல்லது நோய்களுக்கான சாத்தியக்கூறுகளுக்கு எதிராக தடுப்பூசிகள் எடுத்துக் கொள்ளுதல் மூலம் ஒருவர் தன்னை (அல்லாஹ்வின் விருப்பப்படி) தற்காத்துக்கொள்ள அனுமதியிருப்பதாகக் கூறியுள்ளார். (https://islamqa.org/hanafi/askimam/102487
)
(3) ஷேக் யூசுப் அல்-கர்ழாவி பின்வருமாறு கூறுகிறார்:
“சமீபத்தில் மஸ்கட்டில் நடைபெற்ற இஸ்லாமிய ஃபிக்ஹ் கவுன்ஸிலின் சில நம்பகமான அறிஞர்களுடன் இணைந்து நான் பின்வருவனவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறுகிறேன்.
“போலியோ தடுப்பூசி ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் உட்பட, உலகம் முழுவதும் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருவதோடு, அது நோய்களை ஒழிப்பதில் சிறந்த தாக்கம் செலுத்தக்கூடியதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகம், அல்-ஃகரவ்யீன் பல்கலைக்கழகம், அல்லது எந்த புனிதத்தலங்களினதும் தலை சிறந்த கல்வியலாளர்கள் எவரும் , அத்தகைய தடுப்பு மருந்தின் பயன்பாட்டுக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கவில்லை.
முழு விவரணத்திற்கு வாசிக்கவும்:
http://www.islamopediaonline.org/
fatwa/what-islamic-point-view-regarding-vaccinating-children-against-specific-diseases
https://fatwa.islamonline.net/11111
- முப்தி ராபி உஸ்மானி – முப்தி அஸாம், தாருல் உலூம் இஸ்லாமிய்யா, கராச்சி, பாகிஸ்தான்
”தங்களது பிள்ளைகளுக்கு போலியோ தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் விஷேட கரிசனை செலுத்துமாறு நான் முஸ்லிம் சகோதரர்கள், சகோதரிகள், தாய்மார், பிள்ளைகள் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். போலியோ வாழ்நாளையே முடமாக்கும் ஒரு நோய், அது தொற்றுநோயாகவும் இருப்பதனால் அது அடுத்தவர்களுக்கும் பிரச்சினையானதாக மாறும். ஆகவே போலியோ பீடிப்பதிலிருந்து நிவாரணம் பெறுவது அத்தியாவசியமானதாகும்.”
)
தடுப்பூசிகளில் உள்ள ஹராமான உள்ளீடுகள் பற்றிய பிரச்சினை
தடுப்பூசிகள் மார்க்க ரீதியாக தடை செய்யப்பட்ட(ஹராம்) சேர்க்கைப் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படுவதாக வாதிக்கப்படுகிறது. மருத்துவ அறிவியலுக்கான இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் உலமாக்கள், பன்றி மூலமான உற்பத்திகள் ஜெலட்டினாக உருமாற்றப்பட்டால்,பன்றி ஜெலட்டின் அடங்கிய தடுப்பூசியை ஒரு முஸ்லிம் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர்.
http://www.who.int/…/vaccine…/englishtranslation.pdf…
இருப்பினும், தடுக்கப்பட்ட உள்ளீடுகள் அடங்கியவைகளைத் தவிர வேறு எந்தவிதமான சிகிச்சையும் இல்லாத நிலையில், அவசரநிலை (தரூராத்) என்ற அடிப்படையில் தடை செய்யப்பட்ட பொருளை பிரயோகிக்க இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. இது இஸ்லாமிய சட்டவியல் முறைகளை அடிப்படையாகக் கொண்டது. (தரூரத்- நிர்ப்பந்தம் தடைசெய்யப்பட்டவற்றை ஆகுமாக்கும்.) (http://www.iais.org.my/e/attach/2016/28
JUL2016).
உணவு மற்றும் மருந்துகளில் பன்றியின் மூலப்பொருட்களின் பயன்பாடு தொடர்பான பிரச்சினை பழமையான ஒன்றாகும். கலாநிதி யூசுப் அல்-கர்ளாவி தலைமையிலான, உலகில் பல புகழ்பெற்ற முஸ்லிம் அறிஞர்களைக் கொண்ட பத்வா மற்றும் ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய கவுன்சில் (ECFR) பின்வரும் வாதத்தை முன்வைக்கின்றது-
.
பன்றியுடன் சம்பந்தமான டிரிப்சின் (நொதியங்கள்) அசுத்தமானவை என்ற கருத்தில் தவிர்ந்து கொள்வதாக இருந்தால், அவை தடுப்பூசியாக மாறும் நிலையில் முற்றிலும் வடிகட்டப்பட்டு, இறுதியாக தடுப்பூசியில் அதன் எந்த தடயமும் இல்லாமல் செய்யப்பட்டே செலுத்தப்படுகின்றன.
அதே வேளை நிர்ப்பந்தம் தடைசெய்யப்பட்டவற்றை ஆகுமாக்கும் என்ற இஸ்லாமிய சட்ட விதியையும் நாம் கவனத்திற் கொள்ள முடியும்
http://www.iais.org.my/…/28JUL201…/Vaccination-Badri.pdf
தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் பற்றி…
ஒருவரின் உயிரைப் பறிக்கக் கூடிய, அல்லது ஒருவரது ஆரோக்கியத்தில் பாரிய தீங்கை ஏற்படுத்தக் கூடிய விளைவுகளுடன் ஒப்பிடும் போது, தடுப்பூசியினால் ஏற்படக் கூடுமான விளைவுகள் ஒரு பொருட்டாகக் கருதப்படக் கூடியனவல்ல. அத்தோடு இது அவசியமான காரணங்களால் அனுமதிக்கப்படவும் முடியும். அனுமதிக்கப்படாத பொருட்களைக் கொண்ட தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என எவரேனும் வலியுறுத்தினால், அதற்கான மாற்றீடுகளை அவர்கள் முன்வைப்பதுடன் அவற்றை கண்டுபிடித்து மக்களது பாவனக்காகத் தர வேண்டும்.
தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு – சில மருத்துவ உண்மைகள்
நோய்த் தொற்றலில் இருந்து தவிர்ந்து கொள்வதற்கும், நிர்ப்பீடணம் பெறுவதற்கும் பொதுவாக தடுப்பூசி மூலமாக ஒருவர் மேற்கொள்ளும் செயன்முறை தான் நோயெதிர்ப்பு எனப்படுகிறது., திறனாகவும் பாதுகாப்பாகவும் எதிர்வினையாற்றக் கூடிய தற்காப்பு நோயெதிர்ப்புச் சக்திகளை உடலில் தூண்டும் வகையில் சீராக வடிவமைக்கப்பட்ட சிக்கலானதொரு உயிரியல் விளைபொருளே தடுப்பூசியாகும்.
தடுப்பூசி கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் பெரியம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசி 1886 ஆம் ஆண்டுகளிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1949 இல் BCG உம் 1961 இல் DTP உம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1962 இல் OPV வழங்கப்பட்டது. நோயெதிர்ப்பை மேம்படுத்தும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) நிகழ்ச்சித்திட்டத்தை (EPI) அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே இந்தத் தடுப்பு மருந்துகளை இலங்கை அறிமுகப்படுத்தியுள்ளது. 1984 இல் சின்னம்மை நோய்க்கான தடுப்பூசி தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்தில் (NIP) சேர்க்கப்பட்டது. வைரஸ் எதிர்ப்புச் சிகிச்சை இல்லாத ஒரு நோயாக போலியோ (Poliomyelitis) உலகை அச்சுறுத்தி வந்தது. போலியோ தடுப்பூசியின் பரவலான பயன்பாடு உலகளவில் போலியோ நோயை கட்டுப்படுத்தியது. இலங்கையில், போலியோமிலீட்டிஸின் நோய் பற்றிய இறுதியான பதிவு 1993 இல் பதியப்பட்டிருந்தது.
இன்று, கிட்டத்தட்ட 30 வகையான தொற்று நோய்களுக்கு எதிரான பல தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. இன்றுவரையான முக்கியமான ஆரோக்கிய முற்காப்பு இடையீடுகளை இவை வழங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கக் கூடிய தடுப்பூசிகளைப் பெறுகின்றனர்.
அடிப்படையில், உடம்பில் தொற்றுகின்ற நுண்ணங்கிகளுடன் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ ஒத்திசைகின்ற கூறுகளை இந்தத் தடுப்பூசிகள் கொண்டுள்ளன. வெற்றிகரமான தடுப்பூசியின் மிக முக்கிய விளைவு அது நீண்டகாலம் உயிர்வாழக்கூடிய கலங்களை உற்பத்தி செய்வதாகும். இவை விரைவாகவும் கூட்டாகவும் தொழிற்பட்டு, உள்நுழைந்த தொற்றுக்களை விரைவில் அழித்துவிடுகின்றன.
தடுப்பூசிகள்- கேள்விகளும் பதில்களும்
- தடுப்பூசிகள் இயற்கையான நோய் எதிர்ப்பு முறையை அழிக்குமா? இல்லை
2.தடுப்பூசி மூலம் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தியை விட இயல்பான நோய் எதிர்ப்பு சக்தி சிறந்ததில்லையா?
தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோயெதிர்ப்புச் சக்தி காலப்போக்கில் குறையக்கூடும், ஆனால் குறிப்பிட்ட நோய்களால் பெறப்படக்கூடிய நோயெதிர்ப்புச் சக்தி வாழ்நாள் பூராகவும் நிலைத்திருக்கும். தடுப்பூசிகள் அவற்றால் தடுக்கப்படக்கூடிய நோய்களை விட பல மடங்கு பாதுகாப்பானவை.
3.குழந்தைக்கு பல தடுப்பூசிகளை ஒரே நேரத்தில் ஏற்றுவது ஏற்கத்தக்கதா?
ஆம். குழந்தைகளின் உடல்களில் (உடன் பிறந்த குழந்தைகளும் கூட) பல ஊசிகளை ஒரே நேரத்தில் கையாளலாம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. புதிதாக பிறந்த குழந்தைக்கு கூட பல தடுப்பூசிகளை ஒரே சமயத்தில் வழங்குவது பாதுகாப்பானது, கூட்டுத் தடுப்பூசிகள் (கூட்டு வக்சீன்) ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை குழந்தைகளுக்குத் தருகின்றன.
- தடுப்பூசிகள் பாதுகாப்பானவையா ?
ஆம். தடுப்பூசிகள் மிக உயர்ந்த பாதுகாப்பு தரத்தில் பேணப்படுகின்றன. இலங்கையின் தடுப்பூசித் திட்ட வரலாற்றில் பாதுகாப்பான, திறமையான நோயெதிர்ப்புச் சக்தி தற்போது வழங்கப்படுகின்றது.
- தடுப்பூசிகள் பக்க விளைவுகளைக் கொண்டிருக்கின்றனவா? ஆம்.
அதனுடைய நன்மைகள் பக்க விளைவுகளை மிஞ்சுவனவாக உள்ளன. பக்க விளைவுகள் எளிமையான மருந்துகளால் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒவ்வாமைகள் உள்ளவர்களுக்கு இது முன்னெச்சரிக்கையுடனேயே வழங்கப்படுகிறது. நோயெதிர்ப்பில் இயைபாக்கம் அடைந்தவர்களுக்கு குறிப்பிட்ட சில தடுப்பூசிகள் தவிர்க்கப்படுகின்றன. சில தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
6.தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தைகளும் ஏதேனும் ஒரு நோயால் பாதிக்கப்படலாம் என்பது உண்மைதானா?
ஆம். இது சாத்தியமானதுதான். எந்த தடுப்பூசியும் 100% செயல்திறன் உடையதாக இருக்காது. தடுப்பூசி ஏற்றப்பட்ட நோயாளிகளும் ஒரு சிறிய விகிதத்தில் இலகுவாக நோய்வாய்ப்படக் கூடியவர்களாக இருப்பர். ஆயினும், தடுப்பூசி ஏற்றப்படாத நோயாளிகளுக்கு நோய் ஏற்படுவதைவிட மிகவும் குறைவாகவே தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும்.
7.போலியோ, டெட்டனஸ், கக்குவான் இருமல், சின்னம்மை, தொண்டை அலட்சி போன்ற நோய்கள் ஏற்கனவே இலங்கையின் பல பாகங்களிலுமிருந்தும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதே? எனவே, நாம் சிறுவர்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை தொடர்ந்து வழங்க வேண்டுமா?
ஆம். அவற்றை ஏற்படுத்தக்கூடிய பக்டீரியாக்களும் வைரஸ்களும் இன்னும் இருக்கின்றன. வெளித்தெரியாத பிரச்சினைகள் தொடர்ச்சியான நோயெதிர்ப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் பரிசோதிக்கப்படுகின்றன. தடுப்பூசி பயன்பாட்டு வீதம் குறைந்துவிட்ட நாடுகளில் தடுப்பூசிமூலம் தடுக்கக்கூடிய நோய்கள் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன. நவீன யுகத்தின் பெரும்பாலான பெற்றோர், ஒரு குடும்பத்திலோ சமூகத்திலோ இந்த நோய்கள் ஏற்படுத்தக்கூடிய பேரழிவினை பார்த்திருக்கவே மாட்டார்கள். கடந்த காலங்களில் இவ்வாறான நோய்கள் முற்றாக இல்லாதொழிக்கப்படுவதற்கு முன்னரே கட்டுப்படுத்தப்பட்டுமுள்ளன.
8.தடுப்பூசிகள் புற்றுநோயை தூண்டுமா ?
இல்லை உண்மையில் HPV தடுப்பு மருந்தானது பெண்களுக்குள் இரண்டாவது பொதுவான புற்றுநோயான கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
9.தடுப்பூசிகள் மலட்டுத்தன்மையையோ கருவளக் குறைவையோ ஏற்படுத்துமா? இல்லை.
- தடுப்பூசிகளின் உள்ளீடுகள் எவை?
நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு நோயெதிர்ப்பு மண்டலத்தை செயலூக்கப்படுத்துகின்ற கூறுகள்.
அ. உறங்குநிலையிலுள்ள தடுப்பூசிகளும், செயலிழக்கச் செய்யப்பட்ட தடுப்பூசிகளும்
ஆ. தடுப்பூசிகளின் இதர கூறுகள்- துணையூக்கிகள்
துணையூக்கி – நோயெதிர்ப்பு விளைதிறனை அதிகரிப்பதற்காக தடுப்பூசியில் சேர்க்கப்படும் கூறு. பொதுவாகப் பயன்படுத்தப்படும் துணையூக்கிகள் அலுமினிய உப்புகள் ஆகும்.
இ. பதனப்படுத்துவதற்கான சேர்க்கைகள் – இரசாயன சேர்க்கைகள்
பிரத்தியேகமான நோயெதிர்ப்புப் புலன்களை சுத்திகரித்தல் மற்றும் வளர்ச்சியடையச் செய்தல், நச்சுகளை செயலிழக்கச் செய்தல். வைரஸ் செல் வளர்ச்சியின் போது கலப்படங்கள் ஏற்படாதிருப்பதைத் தடுப்பதற்கான அன்டிபயாட்டிக்; வைரஸ்கள், முட்டை அல்லது ஈஸ்ட் புரதம், கிளிசரோல், சேரம், அமினோ அமிலங்கள் மற்றும் என்சைம்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்கள்; வைரஸ்கள் மற்றும் புரோட்டீன் நச்சுகளை செயலிழக்கச் செய்வதற்கான ஃபார்மால்டிஹைடு (formaldehyde) என்பன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த கூறுகளில் பெரும்பாலானவை உற்பத்தி நடவடிக்கைகளில் அகற்றப்படுகின்றன. ஆனாலும் உற்பத்தியின் இறுதியில் இவற்றின் சிறியதொரு அளவு உற்பத்திப் பொருளில் தேங்கியிருக்க முடியும். இவ்வாறு தங்கியிருப்பவைகளே சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.