தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதைத் தவிர, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எந்தவித மக்கள் ஆணையும் கிடையாது என தேசிய ஷூரா சபை சுட்டிக்காட்டியுள்ளது. அச்சட்டம் ‘கறுப்பு ஜூலை’ என்ற நாடளாவிய தமிழர்கள் இனப்படுகொலைகளுக்கு வழிவகுத்து, அதன் எதிர்வினையாக வெடித்த பிரிவினைவாத யுத்தம் 33 ஆண்டுகள் நீடித்து நாட்டில் பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது! கடந்த தசாப்தங்களில் நாம் கண்ட ஒரு உண்மை யாதெனில், என்ன பெயரில் வந்தாலும் பயங்கரவாதச் சட்டங்கள் சிறுபான்மையினரை ஒடுக்கவே பயன்படுத்தப்பட்டன என்பதாகும்! அது தவிர இன்று நாட்டில் எங்குமே பயங்கரவாத அச்சுறுத்தல் கிடையாது! இந்நிலைமையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் பற்றி அரசாங்கமே பேசுவது சர்வதே சமூகத்தின் மத்தியில் ஒருவித பீதியை உருவாக்கி, பெரியளவில் முன்னேற்றம் கண்டுவரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையையும்,வெளிநாட்டு முதலீடுகளையும் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பையும் பாதிப்பது நிச்சயம்! அது மட்டுமல்லாமல் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் தாம் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பதாகவே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் அவரது அரசும் வாக்குறுதியளித்தது. அவ்வாறு செய்வதற்கே மக்கள் ஆணையை வழங்கினார்கள். மாறாக, புதிய பயங்கரவாதச் சட்டங்களைக் கொண்டுவர மக்கள் ஆணை வழங்கவில்லை என்பதையும் தேசிய ஷூரா சபை நினைவூட்ட விரும்புகிறது. இது தொடர்பாக தேசிய ஷூரா சபை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க