போர் குற்றவாளிகளான இஸ்ரேலியர்களுக்கு விசா வழங்குவதை அரசு நிறுத்த வேண்டும்

har

தேசிய சூரா சபை பிரதமர் ஹரினிக்கு கடிதம்

இலங்­கைக்குச் சுற்­றுலாப் பய­ணி­க­ளாக வரும் இஸ்­ரே­லி­யர்­களின் சட்­ட­வி­ரோதச் செயற்­பா­டுகள் குறித்து அர­சாங்கம் எடுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் என்ன என்று தேசிய சூரா சபை அர­சாங்­கத்­திடம் கேள்வி எழுப்­பி­யுள்­ளது. இது தொடர்­பாக தேசிய சூறா சபை பிர­தமர் ஹரினி அம­ர­சூ­ரி­ய­வுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­துள்­ளது.

அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, கடந்த ஜன­வரி 8, 2025 அன்று நாடா­ளு­மன்­றத்தில் இஸ்­ரே­லிய சுற்­றுலாப் பய­ணி­களின் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கைகள் குறித்து தாங்கள் ஆற்­றிய உரையைக் குறிப்­பிட விரும்­பு­கிறோம். இலங்­கையில் சின­கோக்­குகள் (Synagogues) அல்­லது சபாத் மையங்கள் (Chabad Centers) அமைக்க அர­சாங்கம் எந்த அனு­ம­தியும் வழங்­க­வில்லை என தாங்கள் சுட்­டிக்­காட்­டி­னீர்கள். மேலும், சுற்­றுலா விசாவில் இலங்கை வரும் இஸ்­ரே­லி­யர்கள், தங்கள் விசா காலத்தில் எந்­த­வொரு வணிக நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­ப­டு­வது சட்­ட­வி­ரோ­த­மா­னது என்றும் தாங்கள் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தீர்கள்.

மே 15, 2025 அன்று கொழும்பில் நடை­பெற்ற “நக்பா 77 ஆண்­டுகள்” அல்­லது ‘பலஸ்­தீ­னியப் பேர­ழிவு’ நிகழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்ட தாங்கள், பலஸ்­தீ­னி­யர்கள், குறிப்­பாகப் பெண்­களும் குழந்­தை­களும் படு­கொலை செய்­யப்­பட்­டது கற்­பனை செய்ய முடி­யாத ஒரு மனிதப் பேர­ழிவு என்றும், இது குறித்து எந்த மௌனமும் குற்­றங்­க­ளுக்கு உடந்­தை­யாகும் என்றும் தெளி­வாகக் குறிப்­பிட்­டீர்கள். தங்கள் இந்த அவ­தா­னிப்­புகள் இலங்கை மற்றும் உல­கெங்­கிலும் உள்ள கால­னித்­துவ எதிர்ப்பு, ஏகா­தி­பத்­திய எதிர்ப்பு மற்றும் முற்­போக்கு சிந்­த­னை­யுள்ள குடி­மக்­களால் மிகவும் வர­வேற்­கப்­பட்­டன.
தங்­களால் குறிப்­பி­டப்­பட்ட சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­வர்­களை நிறுத்­து­வ­தற்கும், குடி­வ­ரவு மற்றும் குடி­ய­கல்வுச் சட்டம் உட்­பட இலங்கைச் சட்­டங்­களின் கீழ் அவர்­களைக் கைது செய்து நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கும் இலங்கை அர­சாங்கம் என்ன நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது என்­பதை தேசிய சூரா சபை அறிய விரும்­பு­கி­றது.

சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் 2024 நவம்பர் 21 அன்று இஸ்­ரே­லியப் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாகு மற்றும் அப்­போ­தைய இஸ்ரேல் பாது­காப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோர் மீது மனித குலத்­திற்கு எதி­ரான குற்­றங்கள் மற்றும் போர்க்­குற்­றங்­க­ளுக்­காக பிடி­யாணை பிறப்­பித்­தது என்­பதை தாங்கள் அறிந்­தி­ருப்­பீர்கள். “மற்­ற­வர்­க­ளுடன் கூட்­டாக” இக்­குற்­றங்கள் இழைக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­பட்­டுள்­ளது. “மற்­ற­வர்கள்” என்­பதில், இஸ்­ரே­லிய பாது­காப்புப் படைகள் (IDF) மற்றும் பிற படை­களில் இருந்து, ‘மனித குலத்­திற்கு எதி­ரான குற்­றங்கள் மற்றும் போர்க்­குற்­றங்­களை’ இழைத்த “சுற்­றுலாப் பய­ணி­க­ளாக” இலங்­கைக்கு வரும் இஸ்­ரே­லிய படை­யி­னரும் அடங்­குவர்.

இத்­த­கைய படை­யி­ன­ருக்கு எந்த வித­மான விசாக்­களை வழங்­கு­வ­தா­னது ‘ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீ­னியப் பிர­தே­சங்­களில்’ ஐக்­கிய நாடு­களின் தீர்­மா­னங்­க­ளின்­படி இஸ்­ரே­லிய படை­யினர் இழைத்­த­தாகக் கூறப்­படும் ‘குற்­றங்­க­ளுக்கு’ இலங்கை அதி­கா­ரிகளும் ஆளும் கட்சியினரும் உடந்தையாகுவர் என்று தேசிய சூரா சபை நம்புகிறது. மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக, இஸ்ரேலிய ஆயுதப் படைகள் மற்றும் உளவுத்துறைப் பணியாளர்களுக்கு எந்த விதமான விசாக்களையும் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Scroll to Top