தேசிய சூரா சபையின் இன்றைய பகிரங்க சொற்பொழிவு ஒத்திவைக்கபட்டுள்ளது

Postponed 800

தேசிய சூரா சபையினால் இன்று செவ்வாய் கிழமை (31-03-2015) மாலை 6.30 மணிக்கு, தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “அரசியலமைப்பு திருத்தத்தினூடாக சகவாழ்வு” எனும் தலைப்பிலான பகிரங்க சொற்பொழிவு தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பகிரங்க சொற்பொழிவை நிகழ்த்தவிருந்த பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க திடீர் சுகயீனம் காரணமாக நாடு திரும்பமுடியாத நிலையில் இருப்பாதனாலேயே இப்பகிரங்க சொற்பொழிவு ஒத்திவைக்கபட்டுள்ளதாக தேசிய ஷூரா சபையின்  பொதுச் செயலாளர் இஸ்மாயில் ஏ அசீஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.

நடைபெறும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதுடன் மேலதிக தகவல்களுக்கு 0766-270470 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.  .

இதனால் உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு தேசிய ஷூரா சபை தனது  ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Scroll to Top