அரசியலமைப்பு மாற்றம் குறித்த தேசிய ஷூரா சபையின் வானொலி நிகழ்ச்சி

fm

தேசிய ஷூரா சபை சமர்ப்பித்த புதிய அரசியலமைப்பு மாற்றம் குறித்த பரிந்துறை அறிக்கை தொடர்பான வானொலி நிகழ்ச்சி இன்று(05) செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

மேற்படி நிகழ்சி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையின் உரையாடல் நிகழ்சியில் இன்று(05) செவ்வாய்க்கிழமை இரவு 8.20 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்சியில் தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்ஷெய்க் கலாநிதி மஸிஹுதீன் இனாமுல்லாஹ் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். இந்த நிகழ்சி தொகுப்பை ஜுனைத் எம் ஹாரிஸ் நிகழ்தவுள்ளார்.

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் துறைசார் நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட தேசிய ஷூரா சபை நாட்டின் புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான தமது பரிந்துறைகளை கடந்த வியாழக் கிழமை(31) கொழும்பு விசும்பாயாவில் அமைந்துள்ள அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்கள் யோசனைகளைப் பெறும் குழுவிடம் சமர்ப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Scroll to Top