தேசிய ஷூரா சபையின் சகவாழ்வு நிகழ்வுகள்

k1

Three events related to Coexistence and reconciliation held today in Kandy organized by National Shoora Council coexistence subcommittee.

தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான உபகுழுவால் இன்று(19.20.2019)கண்டியில் மூன்று நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

  1. கண்டி Regain Peace Sri Lanka (RPSL) எனும் அமைப்புடன் இணைந்து கண்டி YMMA கட்டடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பேராசிரியர் சித்தீக், பேராசிரியர் அஸ்லம், கலாநிதி நவ்பல் உள்பட கண்டிப் பிரதேச சமாதான ஆர்வலர்கள் சிலரும் கலந்துகொண்டனர். சகவாழ்வைக் கட்டியெழுப்பும் பாதையில் பல அனுபவங்கள் பரிமாறப்பட்டன.
  2. மற்றைய நிகழ்வு கண்டி மாவட்ட சர்வமத செயற்குழுவுடன் இணைந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சமாதான சகவாழ்வுக்காக பல்லின புத்திஜீவிகளால் ஆரம்பிக்கப்பட்டு காத்திரமான துணிச்சலான முயற்சிகளில் இவ்வமைப்பு ஈடுபட்டு வருகிறது. பெரும்பான்மை சமூகத்தில் நீதி நியாயத்துக்காக, மனிதாபிமானத்துக்காக பாடுபடும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்களுடனான கலந்துரையாடல் உணர்த்தியது. திகனை கலவரம் பற்றி அவர்கள் தயாரித்த விரிவான அறிக்கை, கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிரான அவர்களது முயற்சிகள் பற்றியெல்லாம் அங்கு பேசப்பட்டது.
  3. அடுத்ததாக பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸுடன் இணைந்து சகாவாழ்வு வழிகாட்டல் நிகழ்வொன்று கண்டி கட்டுக்கலை ஜுமுஆ பள்ளிவாயல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ மாணவிகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் பல்கலைக்கழக சூழலில் ஐக்கியத்தையும் செளஜன்யத்தையும் சமாதான சகவாழ்வையும் பேண முஸ்லிம் மாணவர்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பற்றி மாணவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.இத்தகைய நடவடிக்கைகளை பன்முகப்படுத்தவும் விரிவுபடுத்தவும் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி தேசிய ஷூரா சபை விளக்கங்களை வழங்கியது.

மேற்படி மூன்று நிகழ்வுகளிலும் தேசிய ஷூரா சபையின் உபதலைவர் அஷ்ஷெய்க் பழீல், பொருளாளர் அஷ்ஷெய்க் ஸியாத் சமாதான சகவாழ்வின் உபகுழுவுக்குப் பொறுப்பான டாக்டர் ஸைபுல் இஸ்லாம், நிறைவேற்று குழு உறுப்பினரும் கொழும்பு பெரிய பள்ளி பிரதம இமாம் மெளலவி தஸ்லீம் ஆகியோருடன் சமாதான சகவாழ்வுக்கான உபகுழுவின் வளவாளர்கள் ஷுரா சபை செயலக அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

k3

k2

k1

 

Scroll to Top