National Shoora Council (NSC) Meets JVP Secretary Tilvin Silva
Media Release 08/12/2024
A high-level delegation from the National Shoora Council(NSC) met with Mr.Tilvin Silva, Secretary of the Janatha Vimukthi Peramuna (JVP) on Friday (06.12.2024) at the JVP headquarters in Battaramulla and initiated discussions on matters of mutual cooperation and concerns on national and community issues.
The delegation comprised the President of the National Shoora Council, Ash Sheikh S.H.M. Faleel, NSC General Secretary Attorney-at-Law Rasheed M.Imthiyaz, President’s Counsel, former Ambassador and former MP M.M.Zuhair, former President of NSC, Attorney-at-Law T.K. Azoor and NSC Vice President, former Ambassador, Senior Attorney at Law Javid Yusuf, NPP’s National Executive and steering committee member Ash Sheikh I.N.Ikram also participated in the meeting.
Key Discussion Points
Prioritising solutions to economic hardships
The NSC delegation assured the community’s support to addressing on a priority basis the economic hardships suffered by the Sri Lankan people and stressed the need for prioritising solutions as recommended in the 27 point requests the NSC had made in its memorandum submitted to notable presidential candidates, including the NPP.
Leveraging Expertise in the Muslim Community:
The delegation underscored the presence of skilled professionals, business leaders and experienced intellectuals within the Muslim community who could serve the country in all fields including, education, economics, and politics. They expressed the Council’s willingness to facilitate consultations with vital segments and organisations within the community for the country’s progress as well as to resolve the specific concerns of the community.
Concerns About Muslim Representation:
The delegation highlighted the deepening concerns in the Muslim community regarding the absence of Muslim representation in the key national decision making body, namely the Cabinet. They pointed out that this has become the subject of critical evaluation within the community and needs to be addressed.
Strengthening Ties with Islamic Nations:
Noting that over 2 million Sri Lankans are employed in Arab and Islamic countries, contributing more than 85% of LKR 6 billion annually in foreign remittances, the delegation stressed the importance of maintaining strong relationships with these nations. They called for efforts to attract investment from these countries to support Sri Lanka’s economic recovery.
Unity and Loyalty of Muslims:
The delegation reaffirmed the Muslim community’s unwavering commitment to national unity and territorial integrity. They highlighted the suffering endured by Muslims in the Northern and Eastern provinces due to ethnic conflicts and noted that Muslims have never supported separatist movements. They emphasized the importance of addressing issues affecting displaced Muslims still living in camps.
Ethnic Harmony and the Threat of Racism:
The delegation noted the government’s concerns in tackling racism and pointed out that these issues must be resolved through education, dialogue and reconciliation and not by introducing tougher laws.
National Shoora Council’s Role and Contributions:
The Council outlined its objectives, structure, and past activities, recalling a 27-point proposal submitted to the NPP before the presidential election. They expressed readiness for further dialogue on these proposals. A file containing a copy of the proposal, together with a congratulatory message sent to Mr. Anura Kumara Dissanayake upon his election as President and an introductory document about the National Shoora Council was handed over to Mr. Tilvin Silva.
Support for Peace building Initiatives:
The delegation highlighted their past peace building efforts, particularly the close collaboration of Deputy Minister Sheikh Muneer Mulaffer with the National Shoora Council on interfaith harmony projects. They reiterated their willingness to continue such initiatives in the future.
JVP Secretary’s Response:
Mr.Tilvin Silva assured the delegation that the current NPP government does not operate on ethnic lines and firmly opposes racism. He referenced to the recent arrests of individuals involved in inciting racial hatred as evidence of the government’s stance. He emphasized the government’s commitment to respecting the distinct religious, linguistic, and cultural identities of all communities without interference.
He noted the significant support received by the NPP across all communities in the last election, including the victories in areas like Vanni, Jaffna and in the East and votes for Muslim candidates from non-Muslim voters and vice versa. This, he said, reflects a positive shift in the public mindset.
Mr. Silva recalled his past interactions with National Shoora Council members and expressed his readiness to maintain ongoing discussions.
The meeting was facilitated by Deputy Minister Sheikh Muneer Mulaffer at the request of the National Shoora Council.
Sgd.Rasheed M Imthiyas,
General Secretary-NSC.
Note:-
For further clarification:- Farzan Razick (Assistant GS, NSC +94 77 787 4982)
மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவுடனான தேசிய ஷூரா சபை(NSC)யின் சந்திப்பு
தேசிய ஷூரா சபையின் (NSC) உயர்மட்டக் குழுவொன்று வெள்ளிக்கிழமை (06.12.2024) மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்சியின் செயலாளர் திரு.டில்வின் சில்வாவை பத்தரமுல்லையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து பரஸ்பர ஒத்துழைப்புடன் தொடர்பான விடயங்கள் பற்றியும்தேசிய மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளது.
தூதுக்குழுவில் தேசிய ஷூரா சபையின் தலைவர் அஷ்ஷேக் எஸ்.எச்.எம். ஃபளீல், அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம்.இம்தியாஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈரான் நாட்டுக்கான முன்னாள் தூதுவரும் தேசிய ஷூரா சபையின் முன்னாள் உபதலைவர்களில் ஒருவருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர், சபையின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி ரீ.கே .அஷூர் மற்றும் சபையின் தற்போதைய துணைத் தலைவர், சவூதி அரேபியாவுக்கான முன்னாள் தூதர், மூத்த வழக்கறிஞர் ஜாவித் யூசுப் ஆகியோர் அங்கம் வகித்தனர். சபையின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய மக்கள் சக்தி(NPP)யின் செயற்குழு மற்றும் வழிநடத்தல் குழு உறுப்பினர் அஷ்ஷேக் ஐ.என்.இக்ராம் அவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்:
1.முஸ்லிம் அமைச்சர் நியமன விவகாரம்
அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து முஸ்லிம் சமூகத்தில் பல்வேறுபட்ட கருத்தாடல்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என முஸ்லிம்கள் கோரிக்கை விடுப்பதற்கு காரணம் முஸ்லிம்களுடைய விவகாரங்களை அணுகுவதற்கும் அவற்றிற்காக குரல் கொடுப்பதற்கும் அமைச்சரவை மட்டத்தில் முஸ்லிம்கள் இருப்பது பொருத்தம் என்று கருதுவதாகும் என்றும் தற்போதைய சூழலில் அப்படியான நிலை இல்லை என்றும் அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் அரசு இயந்திரத்தில் இருக்க வேண்டும் என்றும் குழுவினர் சுட்டிக் காட்டினர்.
- ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது
முஸ்லிம்களுடைய விவகாரங்கள் தொடர்பாக அரசு எந்தவொரு தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த துறை சார் நிபுணர்கள், புத்திஜீவிகள் போன்றரது ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது அவசியம் என்றும் வலியுறுத்தினர்.
- நிபுணத்துவத்தை பெற்றுக் கொடுத்தல்
முஸ்லிம் சமூகத்தில் கல்வி, பொருளாதாரம், அரசியல் போன்ற துறைகளில் நிபுணத்துவம் மிக்க, சமூக ஆர்வம் கொண்ட புத்தி ஜீவிகள் கணிசமான தொகையினர் இருப்பதாகவும் அவர்களது ஆலோசனைகளை நாட்டின் வளர்ச்சிக்கு பெற்றுத் தருவதற்கு தேசிய ஷூரா சபை தயாராக இருப்பதாகவும் குழுவினர் வலியுறுத்தினர்.
- பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வுகளுக்கு முன்னுரிமையளித்தல்
இலங்கை தேசம் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் மக்கள் அனுபவிக்கும் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகள் உறுதியளித்ததுடன், அரபு இஸ்லாமிய நாடுகளுடனான தொடர்பை மென்மேலும் வலுப்படுத்தி அந்த நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் இது தொடர்பில் அந்த நாடுகளுடன் தொடர்புகளை கொண்டிருக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தோர் அரசுக்குத் தேவையான ஆலோசனைகளையும் ஒத்தாசைகளையும் வழங்க முடியும் என்றும் கூறினர். அரபு, இஸ்லாமிய நாடுகளில் சுமார் 2மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர் தொழில் செய்கின்றனர். இதனால் வருடாந்த வெளிநாட்டுச் செலாவணியாகிய 6 பில்லியன் அமெரிக்க டொலரில் 85% க்கும் அதிகமான தொகைப் பணம் கிடைத்து வருவதால் அந்த நாடுகளுடனான நல்லுறவினதும் தொடர்பினதும் முக்கியத்துவத்தை குழுவினர் வலியுறுத்தினர்.
- முஸ்லிம்கள் நாட்டுக்கு விசுவாசமானவர்கள்
இலங்கை தேசத்தின் ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாடு என்பன பேணப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் சமூகம் எப்போதும் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் முஸ்லிம்கள் நாட்டுக்கு விசுவாசமானவர்கள் என்பதையும் கடந்த காலங்களில் பிரிவினை வாதத்திற்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்காததன் காரணமாக குறிப்பாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம்கள் பல்வேறுபட்ட துன்பங்களுக்கு உள்ளானது பற்றியும் தற்போதும் கூட கணிசமான தொகையினர் அகதி முகாம்களில் வாழ்வதையும் குழுவினர் சுட்டிக்காட்டினர்.
- இனவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை பாராட்டல்
முப்பது வருட யுத்தம் முடிவடைந்ததற்கு பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத செயற்பாடுகளால் முஸ்லிம் சமூகம் பாரிய அளவு பாதிக்கப்பட்டிருப்பதையும் இனவாதம் இந்த நாட்டுக்கு ஒரு பேராபத்து என்பதையும் குழுவினர் சுட்டிக்காட்டியதுடன் தேசிய மக்கள் சக்தியின் இனவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டையும் பாராட்டினர்.கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அல்லாமல் கல்வி, உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர்.
- சமாதான சகவாழ்வு வேலை திட்டங்கள்
இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை கட்டியெழுப்பவும் முஸ்லிம் சமூகத்தை இது தொடர்பாக நெறிப்படுத்தவும் வலுவூட்டவும் கடந்த காலங்களில் தேசிய ஷூரா சபை கணிசமான வேலை திட்டங்களை நடைமுறைப்படுத்தியதாக நினைவுபடுத்திய குழுவினர், குறிப்பாக தற்போது பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள அஷ்ஷைக் முனீர் முளப்பர் அவர்கள் சமாதான சகவாழ்வு வேலை திட்டங்களுக்காக தேசிய ஷூரா சபையுடன் கடந்த காலங்களில் மிக நெருக்கமாக இருந்து செயல்பட்டதாகவும் குறிப்பிட்டதுடன் இது போன்ற வேலை திட்டங்களை எதிர்காலத்திலும் செயல்படுத்துவதற்கு ஷூரா சபை தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
- தேசிய ஷூரா சபை பற்றிய அறிமுகம்
தேசிய ஷூரா சபையின் நோக்கங்கள், இலக்குகள்,அதன் கட்டமைப்பு,கடந்த கால செயற்பாடுகள் பற்றிய ஓர் அறிமுகத்தை வழங்கிய குழுவினர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம் சமூகத்தோடு தொடர்பான 27 அம்சங்களை உள்ளடக்கிய கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை தேசிய மக்கள் சக்தி அமைப்புக்கு கையளித்தமையை நினைவுபடுத்தியதுடன் அதில் உள்ளடங்கிய அம்சங்கள் தொடர்பாக மேலும் கலந்துரையாடுவதற்கு சபை தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டனர். அந்த மனுவின் பிரதி ஒன்றையும் திரு.அனுர குமார திஸாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவருக்கு ஷூரா சபை அனுப்பிய வாழ்த்துச் செய்தியின் பிரதியையும் ஷூரா சபை பற்றிய அறிமுகத்தை கொண்ட ஓர் ஆவணத்தையும் உள்ளடக்கிய கோப்பொன்றை குழுவினர் திரு. டில்வின் சில்வா அவர்களுக்கு கையளித்தனர்.
- ஜே.வி.பி செயலாளரின் பதில்:
குழுவினரது கருத்துக்களை செவிமடுத்த செயலாளர்கள் இந்த அரசு இன ரீதியான அடிப்படையில் எதனையும் நோக்குவதில்லை என்றும் இனவாதத்தை அது கடுமையாக எதிர்க்கிறது என்றும் குறிப்பாக அண்மை காலத்தில் மூவர் இனவாதத்தை தூண்டும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது அவர்கள் கைது செய்யப்பட்டதையும் நினைவூட்டினார். ஒவ்வொரு இனத்தினதும் சமயம், மொழி, குறிப்பாக ஆடை கலாச்சாரம் போன்ற தனித்துவங்களில் இந்த அரசு தலையிடமாட்டாது என்பதையும் அவற்றை பாதுகாப்பதற்காக அது எப்போதும் முன்னிற்கும் என்பதையும் வலியுறுத்தினார்.
கடந்த தேர்தலில் அனைத்து இனத்தவர்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எவ்வித வேறுபாடுகளையும் பார்க்காமல் வாக்களித்திருப்பதை குறிப்பிட்ட அவர், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமது கட்சி பெற்ற வெற்றி குறிப்பிடத்தக்கது என்றும் எதிர்பாராத இடங்களில் கூட முஸ்லிம் வேட்பாளர்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்களது வாக்குகள் கிடைத்திருப்பதானது மக்களது மனப்பாங்கில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றத்தை காட்டுவதாகவும் தெரிவித்தார்.
தேசிய ஷூரா சபை உறுப்பினர்களுடன் தான் இதற்கு முன்னரும் அவ்வப்போது சந்தித்திருப்பதை ஞாபகப்படுத்திக் கொண்ட அவர் தொடர்ந்தும் தொடர்புகளை வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.
தேசிய ஷூரா சபையின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரதியமைச்சர் முனீர் முளப்ஃபர் அவர்கள் இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஊடகப் பிரிவு
தேசிய ஷூரா சபை
09.12.2024