Training Workshop on the constitution of Sri Lanka

p1

A training workshop on Sri Lanka’s Constitution was held in Colombo on Sunday, 24th November 2024, under the arrangement of the subcommittee on political affairs of the NSC

The event, chaired by the President of the NSC Sheikh S.H.M. Faleel.It’s General Secretary Attorney-at-Law Rashid M.Imthiyas and the Chairman of the Subcommittee on Political Affairs, Sham Nawaz also addressed the gathering.

p3The event was attended by members of NSC’s Executive Committee and Secretariat, including Vice Presidents, Attorney-at-Law Javid Yusuf and M.H.M.Hassan, the President of the Muslim Council of Sri Lanka, N.M. Ameen, KDA Lecturer Professor Rashin Bapu, Senior Attorney-at-Law Nadwi Bahawudeen, religious scholars, intellectuals, lawyers, social activists, political figures, and around 50 participants.

Mr. M.A.M. Hakeem, Senior Lecturer at the University of Colombo, delivered a lecture on “Concerns and Constraints of the Present Constitution – The Way Forward.” Professor M.M. Fazil, Dean of the Faculty of Arts and Culture at the South Eastern University, spoke on “Muslim Minority Concerns: A Critical Perspective.” Attorney-at-Law Mass Yusuf also presented a special paper titled “A Muslim Perspective on Enshrining, Protecting, and Promoting Equality via Constitutional Reforms.”

Following the lectures, group discussions took place. Finally, a 10-member working committee was appointed to carry forward a five-phase action plan.

Given the widespread recognition that amendments need to be made to Sri Lanka’s Constitution, and in light of the current government’s efforts in this regard, the NSC emphasized the need for proposed amendments that reflect the aspirations and distinctiveness of the Muslim community. The workshop served as a platform for generating ideas for preparing a report with such proposals.

p2The event is significant as the first step in preparing this document in a structured and systematic manner, incorporating views from experts within the Muslim community, those with in-depth knowledge of constitutional law, and intellectuals from other communities.

The appointed working committee will gather opinions from Muslim community organizations, political figures, and previously prepared reports by both Muslim and non-Muslim groups. NSC has urged the working committee to complete this task urgently and without delay.

Those wishing to submit proposals on amendments to the political covenant may send them to NSC’s email address:

team.nshoora@gmail.com.

Media Division

National Shoora Council

26.11.2024

அரசியல் யாப்பு தொடர்பிலான ஷூரா சபையின் பயிற்சி பட்டறை

 

p4தேசிய ஷூரா சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உபகுழுவின் ஏற்பாட்டில் கடந்த 24.11.2024 ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் அரசியல் யாப்பு தொடர்பான பயிற்சி பட்டறை கொழும்பில் நடைபெற்றது.

ஷூரா சபையின் தலைவர் அஷ்ஷைக் எஸ்.எச்.எம். பளீல் அவர்களது தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், அரசியல் விவகாரங்களுக்கான உபகுழுவின் தலைவர் ஷாம் நவாஸ் ஆகியோரும் உரைகளை நிகழ்த்தினர்.

உப தலைவர்களான சட்டத்தரணி ஜாவித் யூசுப், எம்.எச் எம். ஹசன் ஆகியோருடன் சூரா சபையின் செயற்குழு மற்றும் செயலகக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன், பேராசிரியர் ரஸீன் பாபு, சிரேஷ்ட சட்டத்தரணி நத்வி பஹாவுத்தீன்,முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த உலமாக்கள், புத்திஜீவிகள், சட்டத்தரணிகள், சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல் ஈடுபாடுள்ளவர்கள் என சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சகோ.எம்.ஏ.எம்.ஹகீம், Concerns and Constrains of the Present Constitution – The way forward (தற்போதைய அரசியல் யாப்பில் உள்ள அக்கறைகளும் நிர்பந்தங்களும்) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம். எம். பாஸில் அவர்கள் “Muslim Minority Concerns a Critical Perspective” (முஸ்லிம் சிறுபான்மையினரது அக்கறைகள் முக்கியமான ஒரு கண்ணோட்டம்) என்ற தலைப்பிலும், A Muslim perspective on Enshrining and protection and promoting Equality via constitutional Reforms “(அரசியல் யாப்பு சீர்திருத்தங்களில் சமத்துவத்தை இணைத்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் பற்றிய முஸ்லிம்களது முன்னோக்கு) என்ற தலைப்பில் சட்டத்தரணி மாஸ் யூஸுப் அவர்களும் விஷேட ஆய்வுரைகளை நிகழ்த்தினர்.

அதன் பின்னர் குழுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இறுதியில் எதிர்காலத்தில் ஐந்து கட்ட வேலை திட்டங்களை முன்னெடுப்பதற்காக 10 பேர் கொண்ட ஒரு செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இலங்கையின் அரசியல் யாப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்து பல மட்டங்களிலும் தெரிவிக்கப்பட்டு வருவதனால் தற்போதைய அரசும் இது தொடர்பாக முயற்சிகளை செய்து வரும் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகள், தனித்துவங்கள் என்பவற்றை கருத்திற் கொண்ட நிலையில் அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் முன்மொழியப்பட வேண்டும் என்ற கருத்தில் தேசிய சூரா சபை இருப்பதனால் இத்தகைய முன்மொழிவுகளை உள்ளடக்கிய அறிக்கையொன்று தயார் செய்யப்படுவற்கான சிந்தனைக் கிளர்வு நிகழ்வாக இந்த பயிற்சி பட்டறை அமைந்தது.

முஸ்லிம் சமூகத்தில் உள்ள துறைசார் வல்லுனர்கள், அரசியல் யாப்பு தொடர்பான ஆழிய அறிவு கொண்டவர்கள், மற்றும் புத்திஜீவிகளது கருத்துக்களை உள்வாங்கிய நிலையில் முறையாகவும் ஒழுங்காகவும் இந்த ஆவணம் தயாரிக்கப்பட வேண்டும் என்ற வகையில் அந்த முயற்சியின் முதல் கட்டமாக மேற்படி பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தெரிவு செய்யப்பட்ட செயற்குழு, முஸ்லிம் சமூக நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்றது கருத்துக்களை சேகரிக்க இருப்பதுடன் ஏற்கனவே முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத அமைப்புக்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட இது தொடர்பான அறிக்கைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி தமது பணியை மேற்கொள்ளவிருக்கிறது. கால தாமதமின்றி இயன்றவரை அவசரமாக அக்குழு இப்பணியை அவசரமாக நிறைவு நிறைவு செய்ய வேண்டும் என தேசிய சூரா சபை வேண்டியிருக்கிறது.

அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளை தேசிய ஷூரா சபைக்கு முன்வைக்க விரும்புவோர் ஷூரா சபையின் team.nshoora@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் அது தெரிவிக்கிறது.

ஊடகப் பிரிவு

தேசிய ஷூரா சபை

26.11.2024

Scroll to Top