தேசிய ஷூரா சபை ஏற்பாட்டில் சமூக பொருளாதார அபிவிருத்தி செயலமர்வு

se4

தேசிய ஷூரா சபையின் ஏற்பாட்டில் பிராந்திய மற்றும் மாவட்ட மட்டங்களில் சமூக பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல் தொடர்பான செயலமர்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை(28) கொழும்பில் அமைந்துள்ள ஜம்இய்யத்துஷ் ஷபாப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தேசிய ஷூரா சபையின் சமூக பொருளாதார அபிவிருத்தி உபகுழு சமூக பொருளாதாரப் பிரச்சினைகளைஆராய்ந்து அவற்றுக்கான நிரந்தரத் தீர்வுகளை அடையாளப்படுத்தும் பணியில் பல்வேறுமுன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இப்பணியில் இலங்கை முஸ்லிம்களின்சமூக பொருளாதார அபிவிருத்திக்கான திட்டவரைபடம் (Socio-Economic Roadmap) ஒன்றைத் தயாரிப்பதை ஒரு முக்கிய நோக்காக தேசிய ஷூரா சபை கருதுகின்றது. இந்த நோக்கினை அடையும் வகையில்இச்செயலமர்வை தேசிய ஷூரா சபை ஏற்பாடு செய்திருந்தது.

தேசிய ஷூரா சபையின் கௌரவத் தலைவர் தாரிக் மஹ்மூத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் “சமகால சமூக பொருளாதார நிலை” எனும் தலைப்பில் இறைவரி திணைக்கள ஆணையாளர் என்.எம். மிப்லி(நளீமி) மற்றும் சிரேஷ்ட பாராளுமன்ற ஆய்வாளர் அஜ்வத்தீன் ஆகியோர் இணைந்து விரிவுரை நடத்தினர்.

பின்னர் சமூக பொருாளாதார நிலை தொடர்பாக இனங்காணப்பட்ட 10 முக்கிய விடயங்கள் தொடர்பாககுழுக் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து “இஸ்லாமிய பார்வையில் சமூகப் பொருளாதார பிரச்சினைகளை எவ்வாறுதீர்க்கலாம்” எனும் தலைப்பில் ஜாமியா நளீமியா கலாபீடத்தின் உதவிப் பணிப்பாளரும் சிரேஷ்டவிரிவுரையாளருமான அஷ்ஷெய்க் ஐயூப் அலி (நளீமி) விரிவுரை நிகழ்த்தினார்.

இந்தக் கலந்துரையாடல் செயலமர்வில் துறைசார் நிபுணர்கள், அங்கத்துவ அமைப்புக்களின் பிரதி நிதிகள், பல்வேறு சமூக-பொருளாதாரவேலைத்திட்டங்களில் ஈடுபடுகின்ற நாட்டின் பல பாகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள், தனிநபர்கள், தென்கிழக்கு பலகலைக்கழகத்திற்கு உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம், கிண்ணியா மஜ்லிஸ் அஸ்-ஷூராவின் தலைவர் ஏ.எம்.ஹிதாயதுல்லாஹ் (நளீமி), யாழ்ப்பாணம், கிண்ணியா, கல்குடா, கண்டி, கம்பளை, இரத்தினபுரி, மல்வானை போன்ற பிரதேசங்களை சேர்ந்த இத்துறையில் ஆர்வமுள்ளவர்கள், தொழில் அதிபர்கள், ஷூரா சபையின்நிறைவேற்றுக்குழு, பொதுச் சபை, செயலக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய ஷூறா சபையின் சமூக பொருளாதார அபிவிருத்தி உபகுழுவுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தில் பணியாற்றுவதற்காக இந்த செயலமர்வுக்கு சமூகமளித்த பிரதிநிதிகளிலிருந்து 10 பேர் தெரிவுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

se5

se4

se3

se2

se1

Scroll to Top