உத்தேச புதிய அரசியலமைப்புத் தொடர்பாக நீதித்துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடல்

parliament

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உத்தேச புதிய அரசியலமைப்புத் தொடர்பான நீதித்துறை வல்லுநர்களுடனான கலந்துரையாடல் ஒன்றை தேசிய ஷூரா சபை நடாத்தவுள்ளது. .

இச்சந்திப்பின் நோக்கங்கள்:

1). நீதித்துறைசார் நிபுணர்கள் மற்றும் அதல்லாதோரிடம் இருந்து புதிய யாப்பு தொடர்பான கருத்துகள், ஆலோசனைகள், முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளல்

2). இவற்றை திட்டமிட்ட அமர்வுகளில் கலந்துரையாடல்

3). இது தொடர்பான அடையாளப்படுத்தப்பட முக்கிய அவதானங்கள் அடங்கிய முன்மொழிதல் ஒன்றைத் தயாரித்து அரசினால் நியமிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சபைக்கு முன்வைத்தல்

இச்செயற்பாட்டை மேலும் வலுவூட்ட, நடைபெறவுள்ள நிபுணத்துவ அமர்வில் அவதானம் செலுத்தவேண்டிய புதிய அரசியலமைப்புத் தொடர்பான உங்களது கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள தேசிய ஷூரா சபை விரும்புகிறது. (நீங்கள் தேசிய மற்றும் சமூக விடயங்களைக் கருத்திற்கொண்டு உங்களது அவதானங்களை முன்வைக்கலாம்.)

அந்தவகையில், எமக்கு குறுகிய கால அவகாசமே உள்ளதால் உங்களது கருத்துக்களை சுருக்கமாகவும், குறிப்பரை (reference) களுடனும் எதிர்வரும் 2016 ஜனவாரி 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் info@nationalshoora.com எனும் முகவரிக்கும் மின்னஞ்சல் செய்யுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top