• NSC Events
    NSC Events

    Media Brainstorming Session held on 07/06/2018 in Colombo

  • Regional visit
    Regional visit

    Visit to Thihariya on Promoting Concept of Shoora 

  • Drug Eradication
    Drug Eradication

    Drug Eradication Consultation with Professionals followed by the formation of Drug Eradication Task Team on 05/05/2018

  • Regional Visit - Badulla
    Regional Visit - Badulla

    NSC Regional Visti to Badulla 04th of May 2018

NSC LH Top

2017.09.01                                                                                       

[பொது அறிவித்தல்]

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு!

வாக்காளர் பதிவு – 2017

2017 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் தேர்தல் ஆணைக்குழுவினால் கடந்த மாதங்களில் நடத்தப்பட்டு, அவை பற்றிய விபரங்கள்  தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தாங்களது பெயர் விபரங்கள் முறையாகப் பதியப்பட்டுள்ளனவா என்பதை தத்தமது பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக அல்லது ஆணைக்குழுவின் இணையத்தளமான www.slelections.gov.lk இன் மூலம் உறுதி செய்துகொள்ள முடியும்.

அவ்வாறு தங்களது விபரங்கள் மேற்படி பதிவில் இடம்பெறாதிருப்பின், எதிர்வரும் 06/09/2017 ஆம் திகதிக்கு முன்னர் அதுபற்றி  தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறியத்தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளாகிய ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியோர்கள், நிரந்தர அல்லது தற்காலிக (கூலி வீடு) முகவரியில் வசிப்போர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்போர் என அனைவரும் கட்டாயம் தமது வாக்குரிமையைப் பதிவுசெய்துகொள்ளவது அவசியமாகும்.

எனவே, மஸ்ஜித் நம்பிக்கையாளர் சபைகள்சமய மற்றும் சமூக அமைப்புக்கள்மற்றும் பிரதேச சமூக ஆர்வளர்கள் முன்நின்று தமது பிரதேச வாக்காளர்கள் அனைவரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரியான முறையில் பதிவுசெய்துகொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்குவதுடன்கிராம உத்தியோகத்தர்களுடன் இணைந்து இந்நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தேவையான பூரண ஆதரவையும் வழங்குமாறு தேசிய ஷூறா சபை பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றது.

உங்கள் பங்களிப்புக்கும்ஒத்துழைப்புக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நட்கூலி வழங்குவானாக! ஆமீன்.

ஜஸாக்குமுல்லாஹ் ஹைரன்!

தாரிக் மஹ்மூத்

தலைவர், தேசிய ஷூறா சபை

 

குறிப்பு:      இப் பொது அறிவித்தலை மஸ்ஜித்களில்  வாசித்து, மஸ்ஜித்  அறிவித்தல் பலகைகளில்                              கட்சிப்படுத்துமாறும் பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்

இங்கே இவ்வறிவித்தலை பதிவிறக்கம் (Download) செய்ய முடியும்  

flood safety.jpeg active dmu