‘புரவெசி பலய’, ‘சமூக நீதிக்கான தேசிய அமைப்பு என்பவற்றுடனான சந்திப்பு

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை தேசிய ஷூரா சபை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் ஒரு முக்கிய நிகழ்வாக ‘புரவசி பலய’ மற்றும் மறைந்த

பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்துடனான சந்திப்பு

தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புகளில் ஒன்றான பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையம் மற்றும் தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான உபகுழுவுக்கும் இடையிலான சந்திப்பொன்று 3௦.11.2016 அந்நிலையத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
Read more

பாராளுமன்ற உறுப்பினர்களுடனான மாதாந்த ஆலோசனை மன்றம் – 01 சந்திப்பு

தேசிய ஷூரா சபை கடந்த அக்டோபர் மாதம் 26ம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரகளுடனான மாதாந்த
மேலும்

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல்

கௌரவ அமைச்சர் அவர்களே! கடந்த 2016 நவம்பர் 17 ம் திகதி தாங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது சில முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக
Read more

இஸ்லாமிய சமூகமும் ஷூரா என்ற பொறிமுறையும்

‘ஷுரா’ என்பது ஆலோசனை வேண்டுவதனையும் ஆலோசனை வழங்குவதனையும் குறிக்கும் இஸ்லாமிய பரிபாஷைச் சொல்லாகும். ‘‘காரியங்களின் போது (நபியே) நீர் அவர்களிடம் ஆலோசனை கேட்பீராக” (42:38) என்று அல்லாஹ்
மேலும்

AL MASHOORAH – 08 : Purification of the Soul, the Stepping Stone to Success

AL MASHOORAH Issue no.8 “Indeed who succeeds, who purifies his own self, and indeed he fails who corrupts his own self” (Qur’an 91:9-10). The National Shoorah Council (NSC) as a collective voice of the Muslim community
Read more

People’s Forum on Say ‘NO’ to Communalism! ‘YES’ to National Unity!

National Fraternity Collective (NFC) National Shoora Council (NSC) jointly conducted a People's Forum on "Say ‘NO’ to Communalism!
Read more

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான தேசிய ஷூரா சபையின் அறிக்கை

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைக்கு தகைமை பெறும் பொருட்டு இலங்கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்தி,

media10தேசிய ஷூறா சபையின் ஊடகத் துறைக்கான உப குழு ஏற்பாடு செய்த முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் மற்றும் திட்டமிடல் அமர்வு கடந்த 30.07.2017 சனிக்கிழமை கொழும்பிலுள்ள ஜம்இய்யதுஷ் ஷபாப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் இயங்கும் முஸ்லிம் ஊடகங்கள் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி அவர்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட  இந் நிகழ்வில் சுமார் 60 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும் சிவில் சமூக பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

தேசிய ஷூறா சபையின் உப தலைவரும் ஊடக உப குழுவின் தலைவருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் அவர்கள் இந் நிகழ்வுக்குத் தலைமை வகித்ததுடன் அறிமுக உரையையும் நிகழ்த்தினார். விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம்.பி.எம். பைறூஸ் அவர்களது ஊடகத்துறையிலுள்ள சவால்களும் வாய்ப்புகளும் எனும் தலைப்பிலான உரையும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் அவசியம் தொடர்பிலும் இலங்கையில் முஸ்லிம் ஊடகங்களின் சமகால நிலை தொடர்பிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி  பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் உரை நிகழ்த்தினார்.

இரண்டாவது அமர்வில் பங்குபற்றுனர்கள் அச்சு, இலத்திரனியல், சமூக. ஊடகம் என மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றதுடன்  கலந்துரையாடப்பட்ட அம்சங்கள்  தொடர்பாக மொன்மொழிவுகளும் இடம்பெற்றன. இதன்போது இலங்கையில் முஸ்லிம் ஊடகங்களின் சமகால நிலை, அவை எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.இந்த நிகழ்வை நொளேஜ் பொக்ஸ் ஊடக நிறுவனத்தின் முகாமையாளர் அஷ்கர் கான் நடத்திவைத்தார்.

media2 001

media3 001

media4 001

இந்த நிகழ்வின் போது  முன்வைக்கப்பட்ட அபிப்பிராயங்களையும் கலந்துரையா டப்பட்ட அம்சங்களையும் அடிப்படையாகக் கொண்டு திட்ட முன்மொழிவொன்றையும் மூலோபாயத் திட்டமொன்றையும் வரைந்து எதிர்கால நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது எனத் தீர்மானிக்கப்பட்டதுடன் அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்களுக்கென தனித்தனியான செயற் குழுக்களும் அமைக்கப்பட்டன.

தேசிய ஷூரா சபையின் ஊடக உப குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரமும் தனது பூரணமான ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.