‘புரவெசி பலய’, ‘சமூக நீதிக்கான தேசிய அமைப்பு என்பவற்றுடனான சந்திப்பு

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை தேசிய ஷூரா சபை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் ஒரு முக்கிய நிகழ்வாக ‘புரவசி பலய’ மற்றும் மறைந்த

பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்துடனான சந்திப்பு

தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புகளில் ஒன்றான பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையம் மற்றும் தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான உபகுழுவுக்கும் இடையிலான சந்திப்பொன்று 3௦.11.2016 அந்நிலையத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
Read more

பாராளுமன்ற உறுப்பினர்களுடனான மாதாந்த ஆலோசனை மன்றம் – 01 சந்திப்பு

தேசிய ஷூரா சபை கடந்த அக்டோபர் மாதம் 26ம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரகளுடனான மாதாந்த
மேலும்

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல்

கௌரவ அமைச்சர் அவர்களே! கடந்த 2016 நவம்பர் 17 ம் திகதி தாங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது சில முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக
Read more

இஸ்லாமிய சமூகமும் ஷூரா என்ற பொறிமுறையும்

‘ஷுரா’ என்பது ஆலோசனை வேண்டுவதனையும் ஆலோசனை வழங்குவதனையும் குறிக்கும் இஸ்லாமிய பரிபாஷைச் சொல்லாகும். ‘‘காரியங்களின் போது (நபியே) நீர் அவர்களிடம் ஆலோசனை கேட்பீராக” (42:38) என்று அல்லாஹ்
மேலும்

AL MASHOORAH – 08 : Purification of the Soul, the Stepping Stone to Success

AL MASHOORAH Issue no.8 “Indeed who succeeds, who purifies his own self, and indeed he fails who corrupts his own self” (Qur’an 91:9-10). The National Shoorah Council (NSC) as a collective voice of the Muslim community
Read more

People’s Forum on Say ‘NO’ to Communalism! ‘YES’ to National Unity!

National Fraternity Collective (NFC) National Shoora Council (NSC) jointly conducted a People's Forum on "Say ‘NO’ to Communalism!
Read more

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான தேசிய ஷூரா சபையின் அறிக்கை

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைக்கு தகைமை பெறும் பொருட்டு இலங்கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்தி,

 

NSC Rep teamதேசிய ஷூரா சபை பிரதிநிதிகளுக்கும் சப்ரகமுவ பல்கலைக்கழக உப வேந்தர்  கும்புரேகமுவ வஜிர தேரருக்கும் இடையிலான சந்திப்பு களனி வித்தியாலன்கார பிரிவெனாவில் கடந்த சனிக்கிழமை 04.03.2017 ம் திகதி இடம்பெற்றது. வீதி விபத்தொன்றைத் தொடர்ந்து உடல்நிலை தேறி வரும் தேரரின் சுகநலன்களை  விசாரிக்கும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலைபற்றியும் கலந்துரையாடப்பட்டது.

   

இன நல்லுறவைப் பேணவேண்டும் என்பதற்காக பெளத்த சமய குருக்களில் முன் நின்று உழைத்து வரும் ஒருவராக வஜிர தேரர் இருந்து வருகிறார்.இந்த சந்திப்பின் போது அவர் தனது பழைய நினைவுகளை மீட்டினார்.தான் வடக்கில் நடந்த யுத்தத்தை தொடர்ந்தும் எதிர்த்து வந்ததாகவும் மடு தேவாலயத்தில் யுத்த காலத்தில் இடப்பெற்ற சமாதனப் பேச்சு வார்த்தையில் கூட கலந்து கொண்டதாகவும் முஸ்லிம்களால் ஏற்பாடு செய்யாப்பட்ட பல இஃப்தார் வைபவங்களில் கூட கலந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

2இந்த சந்திப்பின் போது தேசிய ஷூரா சபையின் வெளியீடாகிய சகவாழ்வு பற்றிய இஸ்லாமிய வழிகாட்டல்கள் அடங்கிய சிங்கள மொழியிலான கையேடு தேரருக்கு கையளிக்கப்பட்டதுடன் பௌத்த மதத்தில் உள்ள சகவாழ்வு சம்பந்தமான வழிகாட்டல்கள் அடங்கிய நூல்களையும் தரும் படி தேரர் அவர்களை ஷூரா சபை பிரதிநிதிகள் கோரினர். அத்தோடு முஸ்லிம் சமூகத்துக்கும் ஏனைய சமூகங்களுடனான உறவு பற்றியும் நாட்டில் சகவாழ்வை கட்டியெழுப்ப மேற்கொள்ள எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

      
இதன் போது தேரர் அதற்கான பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக உறுதியளித்ததுடன் தேசிய ஷூரா சபையினால் மேற்கொள்ளப்படும் சகவாழ்வு சம்பந்தமான நிகழ்ச்சிகளில் எதிர்காலங்களில் தான் கலந்துகொள்வதாகவும் தெரிவித்தார்.

   5மேலும் இவ்விஜயத்தின் போது களனி பல்கலைகழக வேந்தர் வெலமிடியாவே குஸலதம்ம தேரரையும் பிரதிநிதிகள் சந்தித்தனர்.

  இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற கலந்துரையாடலில் தேசிய ஷூரா சபையின் தலைவர் ஜே.தாரிக் மஹ்மூத், அதன் பொருளாளர் மௌலவி.ஸியாத் இப்ராஹீம், செயற்குழு உறுப்பினர்களான கொழும்பு பெரிய பள்ளிவாயில் பேஷ் இமாம் மௌலவி தஸ்லீம், சகவாழ்வுக்கான உபகுழுவின் தலைவர் டாக்டர் ஸைபுல் இஸ்லாம், தேசிய ஷூரா சபையினால் நாடளாவிய ரீதியில் ஏற்பாடுசெய்யப்படும் பிற சமயதவர்களுடனான சகவாழ்வு நிகழ்ச்சித் திட்டங்களில் பிரதான வளவாளராக கலந்துகொள்ளும் அஷ்-சேய்க்.முனீர் முளப்பர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.