‘புரவெசி பலய’, ‘சமூக நீதிக்கான தேசிய அமைப்பு என்பவற்றுடனான சந்திப்பு

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை தேசிய ஷூரா சபை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் ஒரு முக்கிய நிகழ்வாக ‘புரவசி பலய’ மற்றும் மறைந்த

பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்துடனான சந்திப்பு

தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புகளில் ஒன்றான பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையம் மற்றும் தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான உபகுழுவுக்கும் இடையிலான சந்திப்பொன்று 3௦.11.2016 அந்நிலையத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
Read more

பாராளுமன்ற உறுப்பினர்களுடனான மாதாந்த ஆலோசனை மன்றம் – 01 சந்திப்பு

தேசிய ஷூரா சபை கடந்த அக்டோபர் மாதம் 26ம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரகளுடனான மாதாந்த
மேலும்

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல்

கௌரவ அமைச்சர் அவர்களே! கடந்த 2016 நவம்பர் 17 ம் திகதி தாங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது சில முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக
Read more

இஸ்லாமிய சமூகமும் ஷூரா என்ற பொறிமுறையும்

‘ஷுரா’ என்பது ஆலோசனை வேண்டுவதனையும் ஆலோசனை வழங்குவதனையும் குறிக்கும் இஸ்லாமிய பரிபாஷைச் சொல்லாகும். ‘‘காரியங்களின் போது (நபியே) நீர் அவர்களிடம் ஆலோசனை கேட்பீராக” (42:38) என்று அல்லாஹ்
மேலும்

AL MASHOORAH – 08 : Purification of the Soul, the Stepping Stone to Success

AL MASHOORAH Issue no.8 “Indeed who succeeds, who purifies his own self, and indeed he fails who corrupts his own self” (Qur’an 91:9-10). The National Shoorah Council (NSC) as a collective voice of the Muslim community
Read more

People’s Forum on Say ‘NO’ to Communalism! ‘YES’ to National Unity!

National Fraternity Collective (NFC) National Shoora Council (NSC) jointly conducted a People's Forum on "Say ‘NO’ to Communalism!
Read more

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான தேசிய ஷூரா சபையின் அறிக்கை

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைக்கு தகைமை பெறும் பொருட்டு இலங்கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்தி,

 

Meeting with Mp 300x150

தேசிய ஷூரா சபையுடனான சந்திப்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுத்தல்

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் மற்றும் துறைசார் நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட, தேசிய ஷூரா சபைக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை(26) இரவு கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கை முஸ்லிம்களின் பாரிய பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின்

முன்னெடுப்புக்களில்முஸ்லிம் சமூகத்தின் சமகால மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்  எந்தளவு

முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது, அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்டுவரும் அதிர்ச்சிதரும் மாற்றங்கள், புதிய அரசியலமைப்பு மாற்றத்தில்; தேர்தல் முறைமை மாற்றம், முஸ்லிம் தனியார் சட்டம்வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பு, என்பன பற்றியும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் மற்றும்  காணிப்பிரச்சினைகள் மற்றும் பொதுவாக சமூகப் பிரச்சினைகள் கலந்தரையாடப்பட்டன.

 

தேசிய ஷூரா சபை தலைவரான தாரிக் மஹ்மூத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆரம்ப அமர்வில் கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ பைசல் காசிம் மற்றும் கௌரவ அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம் நவவி, முஜீபுர் ரஹ்மான், அப்துல்லாஹ் மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், எஸ்.எம் மரிக்கார், இஷ்ஹாக் ரஹுமான், காதர் மஸ்தான் ஆகியோரும் கலந்து முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்கான பல முக்கிய வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

அதன்படி பின்வரும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன,

முஸ்லிம்களின் முதலாவது கிப்லாவாகிய பைதுல் முகத்தஸ் மீதான யுனெஸ்கோ தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்தது இலங்கை அரசாங்கம் வாக்களிப்பதிலிருந்து தவிர்ந்து கொண்டதையும், அதனைத் தவறான முறையில் நியாயப்படுத்த முயற்சித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்களது கூற்றையும் வன்மையாக் கண்டித்தும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிடல்.

இலங்கை முஸ்லிம்களின் உடனடியாகத் தீர்வுகானப்பட வேண்டுடிய அல்லது முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதில் கட்சிபேதம், பிரதேசவாதம் மறந்து அனைத்து முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான தளத்தை தேசிய ஷுரா சபை உருவாக்கி முன்னெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு பிரச்சினையும் பல்பக்க வடிவங்களையும், நீண்டகால வாழ்வியல் சான்றாதாரங்களையும், சிக்கல்தன்மைகளையும் கொண்டுள்ளமையினால், அவை அனைத்தும் தனித்தனியாக துறைசார்ந்த நிபுணர்களின் பங்கேற்புடன் ஆராந்து தீர்வுகாணப்பட வேண்டியுள்ளது. எனவே ஒவ்வொரு மாதமும், பாராளுமன்றம் நடைபெறும் வாரங்களின் (முதலாம்/மூன்றாம் வாரங்கள்) புதன் கிழமைகளில் (7.00 மணி தொடக்கம் 9.00 மணிவரை) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றுகூடல் தொடர்சியாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இந்த அமர்வுகளுக்கான தெளிவானதும், வெளிப்படையானதுமான நிகழ்ச்சி நிரல்களும், சபை ஒழுங்குகளும் பேணப்படல் வேண்டும்.

அன்றைய தினம் பாராளுமன்றத்தில் VAT சட்டமூலம் மீதான வாக்கெடுப்பிற்கான காலம் திடீர்ரென ஒரு மணி நேரத்தால் (பி.ப.6.30 இலிருந்து 7.30 வரை)) நீடிக்கப்பட்டமை காரணமாக கௌரவ அமைச்சர்களான ரவூப் ஹகீம் மற்றும் கபீர் ஹாஷிம் உட்பட பல உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க முடியாமைக்கான தமது வருத்தத்தை தொிவித்ததுடன் தேசிய சூரா சபையின் அடுத்தகட்ட முன்னெடுப்புக்களுக்கு தமது ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும் என்பதனையும் அறியத்தந்தனர்.  அமைச்சர்களான ஏ. எச். எம். பவுஸி, எம். எல். ஏ. எம்.  ஹிஸ்புல்லாஹ், அலி ஸாஹிர் மவ்லானா ஆகியோர் தமது வெளிநாட்டுப்பயணம் காரணமாக சமூகமளிக்க முடியாமையை அறிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரவு 8 மணி தொடக்கம் 10.00 மணிவரை நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் தேசிய ஷுரா சபையில் அங்கம்வகிக்கும் 18 தேசிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும், தேசிய ஷுரா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.