• NSC Events
    NSC Events

    Media Brainstorming Session held on 07/06/2018 in Colombo

  • Regional visit
    Regional visit

    Visit to Thihariya on Promoting Concept of Shoora 

  • Drug Eradication
    Drug Eradication

    Drug Eradication Consultation with Professionals followed by the formation of Drug Eradication Task Team on 05/05/2018

  • Regional Visit - Badulla
    Regional Visit - Badulla

    NSC Regional Visti to Badulla 04th of May 2018

faleelதேசிய ரீதியாக 18 முஸ்லிம் அமைப்புகளையும் மற்றும் பல செல்வாக்கு மிக்க தனிநபர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய ஷூரா சபை (NSC) யானது 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு காலை 3 தேவாலயங்கள், 3 விடுதிகள் மற்றும் பிற இடங்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் மற்றும் வன்முறை நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் உறவுகளை இழந்தவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு இந்த தாக்குதல் நடவடிக்கைகள்

இன மற்றும் மத வாத மோதல்களின் விதையை தூவுகின்றன என்பதையும் தேசிய பொருளாதாரத்தை அழிக்கின்றன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது. காயமடைந்தவர்களுக்கு விரைவான சுகம் கிடைக்க வேண்டும் என்றும் அது பிரார்த்தனை செய்கின்றது.

நிச்சயமாக, இந்த கொடூரமான செயல்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நமது நாட்டிற்கு எதிரிகளாகவர்களாவர். இவர்களது நோக்கம் நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டையும் மீண்டு வரும் பொருளாதார வளர்ச்சியையும் அழிப்பதாகும்.

இத்தாக்குதல் முறைமையும் அழிவின் பாரதூரமும் போருக்குப் பிந்திய சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான முயற்சிகள் ஆகியவற்றை சீர்குலைத்து நாட்டை ஒரு வன்முறைப் பாதையில் செலுத்தவே இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் விரும்புகின்றனர் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.

குற்றவாளிகள் யாராக இருப்பினும் எந்த இனத்தை சேர்ந்தவராக இருப்பினும் அவர்கள் விடயத்தில் அவசரமாகவும் வினைத்திறனாகவும் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்வதற்கான எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு பொறுப்பான அதிகாரிகளை தேசிய ஷூரா சபை வேண்டிக்கொள்கிறது.

தேசிய ஷூரா சபையானது இந்த சவாலை சமாளிக்கவும், நாட்டில் அமைதி, சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையை மீளமைப்பதற்காக அதனது முழுமையான இதயபூர்வமான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கும் எனவும் தெரிவித்துக் கொள்கிறது.

நாட்டின் அனைத்து இன மக்களும் எந்த வித பாகுபாடுமின்றி இம்முறை கிறிஸ்தவ சகோதரர்களுக்கு எதிராகவும் நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைக்கும் நோக்கோடும் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொடூர செயலுக்கு எதிராக அணி திரளவேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறது.

ஊடகப் பிரிவு

தேசிய ஷூரா சபை

flood safety.jpeg active dmu