‘புரவெசி பலய’, ‘சமூக நீதிக்கான தேசிய அமைப்பு என்பவற்றுடனான சந்திப்பு

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை தேசிய ஷூரா சபை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் ஒரு முக்கிய நிகழ்வாக ‘புரவசி பலய’ மற்றும் மறைந்த

பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்துடனான சந்திப்பு

தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புகளில் ஒன்றான பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையம் மற்றும் தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான உபகுழுவுக்கும் இடையிலான சந்திப்பொன்று 3௦.11.2016 அந்நிலையத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
Read more

பாராளுமன்ற உறுப்பினர்களுடனான மாதாந்த ஆலோசனை மன்றம் – 01 சந்திப்பு

தேசிய ஷூரா சபை கடந்த அக்டோபர் மாதம் 26ம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரகளுடனான மாதாந்த
மேலும்

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல்

கௌரவ அமைச்சர் அவர்களே! கடந்த 2016 நவம்பர் 17 ம் திகதி தாங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது சில முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக
Read more

இஸ்லாமிய சமூகமும் ஷூரா என்ற பொறிமுறையும்

‘ஷுரா’ என்பது ஆலோசனை வேண்டுவதனையும் ஆலோசனை வழங்குவதனையும் குறிக்கும் இஸ்லாமிய பரிபாஷைச் சொல்லாகும். ‘‘காரியங்களின் போது (நபியே) நீர் அவர்களிடம் ஆலோசனை கேட்பீராக” (42:38) என்று அல்லாஹ்
மேலும்

AL MASHOORAH – 08 : Purification of the Soul, the Stepping Stone to Success

AL MASHOORAH Issue no.8 “Indeed who succeeds, who purifies his own self, and indeed he fails who corrupts his own self” (Qur’an 91:9-10). The National Shoorah Council (NSC) as a collective voice of the Muslim community
Read more

People’s Forum on Say ‘NO’ to Communalism! ‘YES’ to National Unity!

National Fraternity Collective (NFC) National Shoora Council (NSC) jointly conducted a People's Forum on "Say ‘NO’ to Communalism!
Read more

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான தேசிய ஷூரா சபையின் அறிக்கை

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைக்கு தகைமை பெறும் பொருட்டு இலங்கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்தி,

தேசிய சூறா சபையின் சுதந்திர தினச் செய்தி

நமது தாய்நாட்டின் 70ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இத்தருணத்தில் இலங்கையர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தேசிய சூறா சபை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறது.

ஒவ்வொரு மனிதனையும் அல்லாஹ் படைத்து பரிபாலித்து வருகிறான் என்ற வகையில் அவனுக்கு மட்டுமே மனிதன் அடிமையாக இருக்க வேண்டும், சகலவிதமான அடிமைத் தழைகளில் இருந்தும் அவன் விடுபட்டுவிடுவிக்கப்பட்டு சுதந்திரமாக வாழ வேண்டும்.இந்தப் போதனையை இஸ்லாம் உலகுக்கு வழங்கியது. வரலாற்றில் அதனை நடைமுறைபடுத்தியும் காட்டியது.

இந்தவகையில் எந்த மனிதனும் இன்னொரு மனிதனை அடிமைப்படுத்துவதோ, ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதோ, ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆக்கிரமிப்புச் செய்வதோ மனித நாகரிகத்துக்கு இழுக்கானவைகள் என இஸ்லாம் கருதுகிறது.மனிதனும் அப்படியான ஒரு சுதந்திரத்த விரும்புகிறான்.

சுதந்திரவானாக வாழ்தல் என்ற மனிதனின் இந்த இயல்பான உணர்வை இஸ்லாம் மதிக்கின்றது. மேலைத்தேய காலனித்துவத்தின் கீழ் வாழ முடியாது என்ற இந்தச் சுதந்திர உணர்வு மேலோங்கியமையால் தான் இலங்கையின் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்ளும் பிரதான பங்காளிகளாக மாறினார்கள். எமது தலைவர்களான ரீ.பீ.ஜாயா,டாக்டர் கலீல்,சேர் ராசிக் ஃபரீட்,பதியுத்தீன் மஹ்மூத் போன்றவர்கள் தம்மால் முடிந்த அளவிலான உச்ச கட்ட பங்களிப்பை இதற்காக வழங்கினார்கள். சுதந்திரமடைதல் என்பதற்கு நிகராக வேறெதனையும் அவர்கள் விலைமதிப்பானதாகக் கொள்ளவில்லை. எமக்கான உரிமைகள், எமக்குரிய பங்குகள் என எதனையும் முன்வைத்து சுதந்திரமடைதலைச் சிக்கலானதாக மாற்றுவதற்கு அவர்கள் விரும்பவில்லை. சுதந்திர இலங்கையின் சக இனத்தவர்களுடன் நல்லிணக்கத்துடன் சகவாழ்வு வாழ்வதைனையே அவர்கள் போற்றினார்கள்.

ஆனால், ஒருசில தீயசக்திகளின் ஊடுருவல் காரணமாக சுதந்திரமடைந்து 70 வருடங்களாகியும் கூட நாட்டின் முன்னேற்றத்தையே பாதிக்கின்ற அளவுக்கு நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் அருகி உறவுகள் விரிசலடைந்திருக்கின்றன. இது நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னோக்கிய வளர்ச்சிக்கும் நாட்டின் பிரஜைகளுக்கிடையிலான நல்லுறவுக்கும் சவாலாக மாறி வருகின்றது.

சுதந்திரம் என்பது ஒரு நாடு மற்றொரு நாட்டின் பிடியில் இருந்து விடுதலையாகுவது என்பது மட்டுமன்றி ஆக்கிரமிப்பாளரின் பண்புகளான பிரிதாளும் கொள்கை,சுயநலம்,சுரண்டல்,இனவாதம்,பிரதேசவாதம்,மேலாதிக்க உணர்வு,கொள்கைத் திணிப்பு போன்ற அனைத்திலிருந்தும் விடுதலையாகுவதாகும்.இப்பண்புகளோடு தான் நாம் 70 வருடங்கள் கழிந்த பின்னரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றால் வெளிநாட்டவர்களிடமிருந்து நாடாளுமன்ற ஆட்சி எமக்கு கைமாறி இருக்கிறது என்ற மாற்றம் மட்டுமே நிகழ்ந்தததாகக் கொள்ள முடியும்.உடலளவில் அவர்கள் வெளியேறினாலும் யதார்த்தத்தில் இன்னும் எமக்குள் வாழ்கிறார்கள் என்பதே பொருளாகும்.எனவே,மனப்பாங்கு மாற்றம் நிகழாமல் சுதந்திரக் கொண்டாட்டம் அர்த்தமுள்ளதாகமாட்டாது.

  

அதேவேளை, சுதந்திரத்துக்காகப் போராடிய எமது தலைவர்களது வழியில் நின்று நாட்டின் நல்லிணக்கத்துக்காகவும் சகவாழ்வுக்காகவும் இலங்கை முஸ்லிம்கள் தமது அர்ப்பணிப்பான பங்களிப்பை தொடர்ந்தும் வழங்க வேண்டும் என தேசிய சூறா சபை இந்நாட்டு முஸ்லிம்களைக் கேட்டுக் கொள்கிள்கிறது. அதுபோலவே நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் நாட்டில் வாழும் சகல இனத்தவர்களையும் பரஸ்பரம் மதித்து மத நல்லிணக்கத்தோடும் சகோதரத்துவ வாஞ்சையோடும் நாட்டுபற்றோடும் தேசத்தை கட்டியெழுப்பும் பணியில் அர்ப்பணத்தோடும் செயல்பட வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறது

மக்களுக்கிடையிலான ஐக்கியம் ஒன்றே நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்குவதற்கான சிறந்த சாதனம் என்ற வகையில், இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் ஐக்கியத்துக்காக உழைப்பதற்கு ஒன்றுபடுமாறு இந்தச் சுதந்திர தினத்தில் தேசிய சூறா சபை முஸ்லிம் சமூகத்துக்கு அறைகூவல் விடுகிறது.